Tuesday, September 27, 2016

பொட்டு வைத்தால் விட்டு விடுவார்கள்????????




கோட்டைமேடு, துடியலூர் பகுதிகளுக்கு மாதர் சங்க தூதுக்குழு போனோம். பல கடைகளில் பொருட்கள் களவாடப் பட்டுள்ளன. மீதி கொளுத்தப் பட்டுள்ளன. சமூக வலைத்தளத்தில் வந்த செல் போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர். பக்கத்தில் மகாலட்சுமி பேக்கரியும் சுத்தமாய் திருடப் பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தலா 2000 இரண்டு கோஷ்டிகள் கேட்ட போது இவர் 500 கொடுத்தது தான் காரணம். கடைகளின் உரிமையாளர்கள் வாய் விட்டு அழுகிறார்கள்.

 துடியலூரில் ஓர் இசுலாமிய குடும்பத்தில் இரண்டு நாட்களில் திருமணம். கட்சி தோழர்கள் முன் கூட்டியே தகவல் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்தியதால் தப்பித்தனர். 5,6 வீடுகள் அங்கு உள்ளன. எல்லாம் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப் பட்டுள்ளது.

 மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க முழுமையாகத் தவறி விட்டன. தெரிந்தே நடந்ததாகவே ஊகிக்க வேண்டியிருக்கிறது. இறுதி ஊர்வலம் 18 கிமீ தொலைவு செல்ல அனுமதி ஏன் அளிக்கப்பட்டது? கல்லெறி மற்றும் சூறையாட லின் போது போலீஸ் என்ன செய்தது? சில இடங்களில் போன் செய்தும் ஸ்டேஷனில் எடுக்கவில்லை. எஸ்.பி.க்கு செய்தால் ஸ்டேஷனுக்கு செய்யுங்கள் என்று சொல்லப் பட்டது.

 இரண்டு பள்ளிக் குழந்தைகளை இரு பக்கமும் இடுக்கிக் கொண்டு முகம் நிறைந்த பீதியோடு ஓர் இசுலாமியர் சாலையைக் கடக்கும் போட்டோ வலை தளத்தில் வந்தது. அந்தப் பள்ளியைப் பார்த்தோம். அவர் வெளியே போயிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அனைவரும் கூறுவதிலிருந்து சில கேள்விகள் - பெரிய பெரிய கற்கள் கடைகளை உடைக்க பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் அது தெருவில் கிடைக்காது. பல இடங்களில் கடப்பாரை வைத்து நெம்பப் பட்டுள்ளது. சின்ன கேஸ் சிலிண்டர் வைத்து ஷட்டர் அறுத்து எடுக்கப் பட்டுள்ளது. இது திட்டமிட்ட வன்முறை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

துடியலூரில் ஒரு பகுதியில் கணிசமாய் இசுலாமியர்கள். அச்சத்தில் நடுங்கியவர்களைக் காக்க அங்கிருந்த மாதர், வாலிபர் சங்க உறுப்பினர்கள் திரண்டு பகுதியின் நுழைவிடத்தில் வந்து நின்று விட்டனர். உயிரைத் துச்சமென மதித்து களத்தில் நின்ற அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அங்கிருந்த 5 வயது இசுலாமிய சிறுமி பொட்டு வைத்திருந்தாள். நம்மிடம் விளக்கினாள். பொட்டு வைத்திருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள், இந்துக்கள் என விட்டு விடுவார்கள். நமக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி அவர்களின் முக நூல் பதிவுகளில் இருந்து. 

மேலே உள்ள படம் தோழர் உ.வாசுகி, அரக்கோணத்தில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டை துவக்கி வைத்த போது எடுத்தது.  

11 comments:

  1. காவிரி நீர் நீதிமன்ற தீர்ப்புக்க எதிராகவும் அல்லது வேறு பிரச்சனை என்றாலும் சரி அப்பாவிகள் தாக்கபடுவதும்,கடைகள் பகிரங்கமாக கொள்ளையடிக்கபடுவதும்,தனிநபர் சொத்துக்கள்,பொது சொத்துக்கள் அழிக்கபடும் கொடுமைகளே நடந்து வருகின்றன.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. எழுதப்பட்ட விஷயத்துக்கு பதில் சொல்ல துப்பில்லாம திசை திருப்பற பத்தியா?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. நீ யாரு, உன் யோக்கியதை எல்லாம் உன் கமெண்டுலயே தெரியுதே. சார்னு சொன்னா மரியாதை கொடுப்பதா அர்த்தமா? கம்யூனிஸ்ட் என்றால் “கண்டபடி பேசற ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்பதை புரிந்து கொள். அனாமதேயத்துக்கு ரோஷத்தைப் பாரு

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. If You have guts, come with your identity. If not don't waste my time.

    ReplyDelete
  8. IF YOU HAVE GUTS...HEH HEH
    SO MY IT COMMENTS
    AND LEAVE TO PUBLIC OPINION
    THEY WILL SAY WHO IS WRONG
    HAVE GUTS?

    IDENTITY...
    NOT NEEDED IN VIRTUAL WORLD.

    NEEDED IS VALID ARGUMENTS..
    NOT PERSONAL ATTACKS..
    LIKE NEXT HOUSE OLD AUNTY..

    HOPE FOE SAME YOU ARE WRITING...
    OR JUST SHOW-OFF-A?.....

    THANK YOU

    ReplyDelete
    Replies
    1. You are a Coward afraid of showing your face. You started the personal attack. Discussion is not possible with those who hide themselves and not necessary too. If you don't have the guts, don't come here.

      Delete