Sunday, September 18, 2016

நேற்று பேரறிவாளன், இன்று ராம்குமார். நாளை????



பாதுகாப்பான இடம் என்று சொல்லப்படுகிற சிறைச்சாலைகள்தான் இன்று ஆபத்தான இடங்களாக மாறி இருக்கிறது. மர்மப் பிரதேசங்களாக காட்சியளிக்கிறது.

சிறைச்சாலைக்குள் பேரறிவாளன் தாக்கப்படுகிறார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவன் முதல் நாள் வரை நட்போடு இருந்திருக்கிறான் என்கிறபோது அத்தாக்குதலுக்கு என்ன பின்னணி? தூண்டி விட்டது யார்? தாக்குதல் நிகழ்த்தியவனுக்கு என்ன ஆதாயம்? என ஏராளமான கேள்விகள் எழுகிறது. அரசு இயந்திரத்தின் பின்னணி இல்லாமல் இத்தாக்குதல் நிகழ்ந்திருக்காது.

ராம்குமாரின் மரணமும் ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது. ஸ்வாதியை கொலை செய்தது ராம்குமார் என்றால் அதனை நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து இப்படி ஒரு மர்ம மரணம் என்றால் இது நிச்சயம் அரசு நிகழ்த்திய கொலையாகவே தெரிகிறது. போலி எண்கவுன்டருக்கு பதிலாக மின் கம்பியை கடித்து தற்கொலை என்று கதை கட்டியுள்ளார்கள். 

ஸ்வாதி கொலை வழக்கை மிக எளிதாக தமிழக அரசு முடித்து விட்டது. அந்த வழக்கின் பின்னணியில் ஏதேனும் ரகசியங்கள் இருந்தால் அவை அப்படியே புதைந்து போய் விடும். அதனால் யாருக்குப் பலன்? யாருக்காக ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளான்?

அடுத்து தமிழகத்தின் சிறைச்சாலைகள் யாரை பலி வாங்கப் போகிறது?

ஜெயலலிதா இக்கேள்விகளுக்கெல்லாம் கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 

தமிழகத்தை ஒரு மோசமான ஆட்சியின் கீழ் மீண்டும் தள்ளிய காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட வாக்காளப் பெருங்குடி மக்களும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

7 comments:

  1. Intha "able administrator" ai thaan "ingeyum oru hileler" endru Subbu annaikae sonnaar.

    ReplyDelete
  2. //ஜெயலலிதா இக்கேள்விகளுக்கெல்லாம் கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்//

    இந்த கேள்விக்குப் பதில் நாட்டு முன்னேற்றத்திற்கு ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. சார், நீங்க என்ன சொல்ல வரீங்க?

      Delete
  3. They don't need to give answer because people don't care. another ugliest police murder.

    ReplyDelete
  4. ஓட்டு போட்ட மக்கள் விரும்பும் படி ஜெ ஆட்சி செய்கிறார்.
    காசை வாங்கி விட்டு ஓட்டு போட்ட மக்கள் அநீதியை விரும்புவதாக தெரிகிறது.

    ReplyDelete
  5. எண்கவுன்டர் என்ற கொலைக்கு பதிலாக அவர்கள் உருவாக்கியது தான் சிறைச்சாலை தற்கொலைகளாக இருக்கலாம்
    //காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட வாக்காளப் பெருங்குடி மக்களும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.//ஆம்

    ReplyDelete