எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதே தங்கள் பணி என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
கல்வி குறித்த பல முக்கியமான நூல்களின் ஆசானான பேராசியர் ச.மாடசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி மிகவும் முக்கியமானது. அதனை பகிர்ந்து கொள்வது அவசியம். அச்செய்தி இங்கே கீழே
--------------------------------------------------------------------------------------------------------------------------
பணியில் சேர்ந்த புதிதில் சம்பளம் ஒழுங்காக வராது.
எப்போதும் 2 மாதம் 3 மாதம் சம்பள பாக்கி இருக்கும்.
அடிப்படைச் செலவுகளும் தடுமாறிய காலம்!
நாங்கள் பரவாயில்லை.
பக்கத்தில் இருந்த கமுதி கல்லூரியில் 20 மாதங்களுக்கு மேலாகச் சம்பளப் பாக்கி...
மதுரை
வந்த மத்திய அமைச்சரை நட்சத்திர ஓட்டலில் சந்தித்து முறையிட்ட போது, கமுதி
கல்லூரி ஆசிரியர்களை ஒரு தாஜ்மகால் ஆச்சரியத்துடன் அவர் பார்த்தார்.
பிறகு வேடிக்கையாகக் கேட்டார்:
"எப்படி உயிரோடு இருக்கிறீர்கள்?"...
அமைச்சரைச் சந்தித்த அனுபவத்தைக் கவிஞர் மீரா இப்படி எழுதினார்:
"நட்சத்திர ஓட்டல் வசதியாக இருக்கிறது;
நமக்கோ அசதியாக இருக்கிறது".
எப்போதும் நினைவில் இருக்கிறது-1977-இல் விருதுநகரில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்...
கூட்டத்தில் இடதுசாரித் தலைவர் எங்களைப் பார்த்துச் சொன்னார்.
"அடிப்படையில் நீங்கள் தொழிலாளிகள். ஆசிரியர் என்ற கிரீடத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் தெருவுக்கு வாருங்கள். பிரச்சினை தீரும்".
ஆசிரியப் பிரமைகள் தகர்ந்த தருணம் அது.
'தொழிலாளி'யாக உணர்ந்த மறு கணமே நாங்கள் எஃகு போல உறுதிப்பட்டோம். பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.
ஆசிரியர் இயக்க வரலாறு! விழிப்புணர்வு வெளிச்சம் வகுப்பறையில் மலர்ந்த வரலாறு!
பிரமைகளில் திளைத்துத் தேங்கிப் போக அல்ல;
மேலும் மேலும் புதிய புரிதல்களை நோக்கி இயங்கவே- செப்டம்பர் 5.
ஆசிரியர் தின அன்பு வாழ்த்துக்கள்.
பேராசிரியர் ச.மாடசாமி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி நண்பரே
ReplyDelete//பிறகு வேடிக்கையாகக் கேட்டார்:
ReplyDelete"எப்படி உயிரோடு இருக்கிறீர்கள்?"...//
கேவலமான இந்திய சம்பள அநீதியை படித்த போது நான் சீரியஸாகவே நினைத்தேன் 20 மாதங்கள் சம்பளம் இல்லாமல் எப்படி தான் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்!