Friday, September 2, 2016

இம்மாம் துட்டையையும் வாங்கிகினு




நேற்று எல்.ஐ.சி நிறுவனத்தின் வைர விழா ஆண்டு. நாடெங்கிலும் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். முகநூல், வாட்ஸப் எல்லாவற்றிலும் தங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். 

மும்பையில் மத்திய அலுவலகத்திலும் விழா நடந்தது. அந்த விழாவிற்கு   இந்திய, பன்னாட்டு முதலாளிகளின் விற்பனைப் பிரதிநிதியும் பெரும் தரகனான மோடியின் கையாளும் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி கலந்து கொண்டார்.

அந்த காலத்தில் எல்.ஐ.சி க்காக அரசு முதலீடு செய்த ஐந்து கோடி ரூபாய் மூலதனத்திற்கு 2015 - 2016 ஒரு ஆண்டுக்கான லாபத்தில் பங்குத் தொகையான இரண்டாயிரத்து ஐநூற்றி ஓரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் அந்த மனிதர் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

எல்.ஐ.சி யின் செயல்பாட்டை பாராட்டிய அந்த மனிதர் வேறு சிலவற்றையும் அங்கே பேசியிருக்கிறார்.

எல்.ஐ.சி மட்டும் பங்குச்சந்தையில் இணைக்கப்பட்டிருந்தால் அதன் மதிப்பே வெகுவாக உயர்ந்திருக்குமாம். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எல்.ஐ.சி யின் பங்குகளை விற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற எரிச்சலைத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்தி உள்ளார். 

அடுத்த பந்து இன்னும் மோசம். 

எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால்தான் அதனால் தனியார் கம்பெனிகள் போல சட்டென்று முடிவுகள் எடுக்க முடியாமல் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளார் அருண் ஜெய்ட்லி. 

முடிவெடுக்கும் அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு இப்படி பேசுவது எப்பேற்ப்பட்ட அயோக்கியத்தனம்! ஆயுள் காப்பீட்டு பிரிமியத்திற்கு அவசியமே இல்லாமல் சேவை வரி விதித்து வணிகத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கிற நிதியமைச்சர் அவர். அது மட்டுமா ஏராளமான கோப்புக்கள் பெரிதும் சிறிதுமாக அவரது மேஜையில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் முடிவெடுக்க துப்பில்லாத இந்த அமைச்சர் முடிவெடுப்பதைப் பற்றி உபதேசிக்கிறார்.

அம்பானிக்கும் அதானிக்கும் தொண்டூழியம் செய்யவே ஆட்சியில் அமர்ந்துள்ள கேவலமான ஜென்மங்கள் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும். அவர்களால் அரசுத்துறையில் எல்.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. 

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை உள்நாட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று விட்டு அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளைப் பெற்று வாலை ஆட்டிக் கொண்டு குழைய முடியவில்லையே என்ற வெறி அருண் ஜெய்ட்லியை பேச வைத்துள்ளது. 

எல்.ஐ.சி யிடம் வாங்கிய பணத்துக்கு குறைந்த பட்சம் அந்த விழா முடியும் வரையிலாவது விஸ்வாசமாக இருந்திருக்கலாம். 

ஆனால் மோடிக் கூட்டத்திற்கு நேர்மை என்பது என்றுமே கிடையாது. 
 

3 comments:

  1. //பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை உள்நாட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று விட்டு அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளைப் பெற்று வாலை ஆட்டிக் கொண்டு குழைய முடியவில்லையே என்ற வெறி // அப்போ, அவங்கள நாய்னு சொல்றீயா? டூ மச். ஜாக்கிரதை

    ReplyDelete
    Replies
    1. தவறுதான் அனானி. நாய்களை இழிவுபடுத்தியது தவறுதான். இவர்கள் யாரோடும் ஒப்பிட முடியாத கேவலமான கூட்டம்

      Delete
  2. ஏழை பங்காளர்கள் பி ஜெ பி அரசின் இன்னுமொரு பெரிய ஆப்பு. சுதந்திரத்துக்கு முன்பு ரயில்வே தனியார் வசம் இருந்தது. இப்போது
    ரயில்வே இன்சூரன்ஸ் வங்கிகள் மற்ற பொதுத்துறை அனைத்தும்
    ரிலையன்ஸ் அதானி மற்றும் டாடா பிர்லாவுக்கு கூறு போட்டு அருண் ஜெட்லீ விற்று விட்டு 2019 தேர்தலுக்கு முன் அனைத்தும் தனியார் வசம்
    என்ற நிலைமை வந்து விடும்

    ReplyDelete