Thursday, September 15, 2016

ஓவியமா? புகைப்படமா? குழப்பம் . . .



மேலேயுள்ள படத்தை முக நூலில்தான் பார்த்தேன். இதிலே காணப்படுகிற அந்த உழைப்பாளியின் படம் ஒரு ஓவியம் என்றும் அதைத் தீட்டிய ஓவியர்தான் அருகில் உள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது. போட்டோ எடுத்துட்டு ஏம்பா ஓவியம் என்று சொல்கிறாய் என்ற ரீதியில் கமெண்டுகளும் இருந்ததால் ஒரே குழப்பமாக போய் விட்டது.

ஓவியம்தான் என்று  என் கண்களும் மனமும் சொல்கிறது.  ஓவியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் சொல்கிறது.

குழப்பத்திற்கு விடை தெரிந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனையும் வருகிறது.

தெரிந்தவர்கள் கொஞ்சம் குழப்பத்தைத் தீருங்களேன்.

ஓவியமோ, புகைப்படமோ, அந்த உழைப்பாளியின் படம் சூப்பர். ஓவியம் என்றால் அவரது திறமை அபாரம்.

 


 

1 comment:

  1. இது ஓவியம்தான். பள்ளி நாள்களில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இவ்வோவியத்தில் உள்ளது போல ஒருவரை நாங்கள் அடிக்கடிப் பார்ப்போம். நாற்காலியில் உட்காரவைத்து அப்படியே வரைந்துகொண்டிருப்பார்கள் அரசு கவின்கலைக்கல்லூரி மாணவர்கள். அந்த நினைவு எனக்கு இப்போது வந்துவிட்டது. அவர் ஆடாமல் அசையாமல் அப்பபடியே அமர்ந்திருப்பார். அவரைப்பார்த்து பலர் வரைவர். ஓவியத்தைப் பார்க்கும்போது அவரைப்போலவே இருக்கும். நாங்கள் அதிகம் ரசித்திருக்கிறோம்.

    ReplyDelete