Monday, June 1, 2015

புதுச்சேரி, ஆந்திர அரசுகளுக்கு மாறாக கர்னாடக அரசு

 http://www.thehindu.com/multimedia/dynamic/01334/18TH_SUPREME_COURT_1334414f.jpg

லேட்டானாலும் லேட்டஸ்டாக கர்னாட அரசு அப்பீல் செல்வது என்று முடிவெடுத்து விட்டது.

சங்கர ராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் ஆந்திர அரசும் பதுங்கியது போல அல்லாமல் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்த கர்னாடக அரசுக்கு பாராட்டுக்கள். 

ஆனாலும் இப்போது எழுகிற கேள்வி.

உச்ச நீதிமன்றம் உண்மையை நிலை நாட்டுமா?

நீதிமான் குமாரசாமியின் 8.12 % என்ற அடிப்படையில் உள்ள தப்புக் கணக்கை நீக்கினாலே தண்டனை கிடைப்பது நிச்சயம்.

ஆனால் 

லாலுவிற்கும் சௌதாலாவிற்கும் காலம் தாழ்ந்து கிடைத்த பிணை ஜெ விற்கு மிகவும் சீக்கிரமாக கிடைத்தது,

பவானிசிங் நியமனத்தில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட நிலைப்பாடு,

மத்தியரசிற்கும் அதிமுகவிற்குமான உறவு நிலையில் முன்னேற்றம்,

இவை எல்லாவற்றையும் விட நீதித்துறை என்பது அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவிதான் என்ற யதார்த்தம்.

இவையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டப்பட்டால்???

முதலில் நடக்கட்டும்.  என்ன எழுதுவது என்பதை  அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
 

8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. உனக்கு இனிமே இந்த மரியாதைதான்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. யார் என்று சொல்ல வக்கற்ற, புனைப்பெயரிலும் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு கோழையாக விஷம் கக்குகிற, திருட்டுத்தனமாக செய்ல்படுகிற வக்கிரப் பேர்வழிக்கெல்லாம் கருத்துரிமை பற்றி பேச அருகதையில்லை. உன் நிஜ அடையாளத்தோடு வா பார்ப்போம்.

      Delete
  4. இது கர் 'நாடக' அரசு எதுவும் நடக்க வாய்ப்புண்டு

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. இன்னொரு குமாரசாமி இல்லாமல் போக முடியுமா...

    ReplyDelete