Tuesday, June 10, 2014

ஆளும் கட்சியை விட அம்மன் பவர் ஃபுல்

வேலூர் சத்துவாச்சாரியில் கங்கையம்மன் கோயில் திருவிழா
நடந்து கொண்டிருக்கிறது. பதினைந்து நாட்கள் முன்பாகத்தான்
கங்கையம்மன் கோயிலுக்கு போட்டியாக அமைக்கப்பட்ட
சாலை கங்கையம்மன் கோயில் திருவிழா நடந்து முடிந்திருந்தது.

திருவிழா என்றால் இசை நிகழ்ச்சி இல்லாமலா?

சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் ஒரு நிகழ்ச்சி இப்போது
நடந்து கொண்டிருக்கிறது.  வழக்கமாக அரசியல் கட்சிகள்
கூட்டம் நடத்தும் இடம்தான்.

என்ன? ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று எந்த கட்சியின் கூட்டமாக
இருந்தாலும் சாலையை முழுதுமாக அடைக்காமல் வாகனங்கள்
சென்று வர வழி கொடுப்பார்கள்.  அமைச்சர்கள் பங்கேற்கும்
கூட்டமாக இருந்தாலும் கூட இதே விதிதான். சரியானதும் கூட.

ஆனால் இன்றோ முழுதுமாக சாலையை அடைத்து விட்டார்கள்.

என்ன செய்வது ஆளும் கட்சியை விட, அரசியல் கட்சிகளை விட
அம்மன் பவர்ஃபுல் போல.

முதலில் ஒரு பக்திப்பாடல் முடிந்து இரண்டாவது பாடல் 
தொடங்கும் நேரம் அங்கு இருந்தேன்.

"சின்ன வீடு" படத்தில் வரும் "அத்தினி, சித்தினி, பத்மினி" பாட்டு

அம்மனை வழிபட இதுதான் சரியான பாடலோ?

இரண்டாவது பாடலே இப்படி. போகப் போக எப்படியோ?

நல்ல வேளை நான் வீட்டிற்கு வந்து விட்டேன்

2 comments:

  1. தப்பித்தீர்கள்
    நேரம் ஆக ஆக பாட்டும் பவர்புல் ஆக இருந்திருக்கும்

    ReplyDelete
  2. இந்த மாதிரி கோவில் திருவிழாக்களில் நேரம் செல்ல நேரம் செல்ல அ.கு. நடனங்களும் நடைபெறுவதை பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete