Tuesday, June 17, 2014

கார்த்திக், மாளவிகா, பி.வாசு, விவேக் எனும் கூலிப்படை கொலையாளிகள்



இசை வாரத்தில் இன்று இரண்டு மலையாளப் பாடல்கள்
http://upload.wikimedia.org/wikipedia/en/5/51/Bharatham.jpg
நேற்று “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” படத்தின் பாடலுக்கான இணைப்பை அளித்து இந்த படத்தை தமிழில் தயாரிக்காததால் நாம் தப்பிப் பிழைத்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வேதனையோடு அவ்வாறு சொல்ல வைத்தவர்கள் நமது தமிழ்படக் காரர்கள்தான். “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” படத்தை தயாரித்த அதே குழு தயாரித்த இன்னொரு அற்புதமான மலையாளப்படம் “பரதம்”. மோகன்லால், நெடுமுடி வேணு, ஊர்வசி, லட்சுமி ஆகியோர் நடித்த படம்.

அப்படத்தின் டைட்டில் பாடலை கேட்டு ரசியுங்கள். இரண்டு இசை இமயங்களான பாலமுரளி கிருஷ்ணாவும் கே.ஜே.யேசுதாசும் இணைந்து பாடியுள்ள பாடல். நெடுமுடி வேணுவிடம் மோகன்லால் சங்கீதம் கற்றுக்கொள்வது போல அமைந்துள்ள பாடல். பாடலை மட்டும் தனியாக கேட்டாலும் பாலமுரளி கிருஷ்ணா கற்றுக் கொடுப்பது போலவும் யேசுதாஸ் கற்றுக்கொள்வதும் போலவும் நாம் உண்ர்வோம். நாற்பது வருடங்களாக பாடிக்கொண்டிருக்கிற நான் கற்றுக்கொள்வது போல பாடுவதா என்று யேசுதாஸ் நினைக்காதது இப்பாடலின் சிறப்பு. கொஞ்சம் நீண்ட பாடலாக இருந்தாலும் நிச்சயம்  ரசிப்பீர்கள்.

இப்படத்தின் இன்னொரு பாடல் “ராம கதா, கான லயம்” என்று தொடங்கும். யேசுதாஸிற்கு மேலும் ஒரு தேசிய விருது பெற்றுக் கொடுத்த பாடல் இது. மோகன்லாலும் இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார்.

படமே அழகிய கவிதையாக இருக்கும். நீங்களே படத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்படத்தை தமிழில் சீனு என்ற பெயரில் எடுத்து படுகொலை செய்தார்கள் படுபாவிகள். கார்த்திக், பி.வாசு, மாளவிகா, விவேக் எல்லோரும் கூலிப்படை கொலையாளிகளாக ஒரு நல்ல படத்தை தமிழில் சாகடித்தார்கள். பரதம் அவசியம் பாருங்கள். சீனு தொலைக்காட்சியில் கூட பார்க்க தகுதியற்ற படம்.

1 comment:

  1. saththiyamana varthaikal... ippadaththin paadalkalum nadikarkalin nadippum arputhamanathu... thamizhil athanai evvalavu kedukka mudiyumo keduththu vaithu iruntharkal

    ReplyDelete