Wednesday, June 4, 2014

பெப்சி, லேஸ், பவண்டோ, கடலை உருண்டை - ஒரு எளிய பாடம்
ஒரு பத்து நிமிடம் முன்பாக பார்த்த ஒரு அற்புதமான காட்சி.
அதை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரவு
உணவு ஆறிப் போனாலும் பரவாயில்லை என்று எழுதுகிறேன்.

இடம் : ஒரு பெட்டிக்கடை.

தள்ளு வண்டியில் பொரி கடலை விற்கும் ஒரு எளிய வியாபாரி
தனது வியாபாரத்தை முடித்து விட்டு மனைவி மற்றும் இரண்டு
பெண் குழந்தைகளோடு வீடு திரும்புகிறார்.

பெட்டிக்கடை வந்ததும் அப்பா கூல் ட்ரிங்க்ஸ் என்று குழந்தைகள்
கேட்டது. பெப்ஸி என்று வேறு கேட்கிறது. அது வேண்டாம்மா,
உடம்பிற்கு நல்லதில்லை என்று சொல்லி பவண்டோ வாங்கினார்.

அந்த சின்ன பாட்டிலை நான்கு பேரும் பகிர்ந்து குடித்ததே 
அழகான காட்சியாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் குறைவாக
குடித்து குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தார்கள். அந்த ஒரு
பாட்டிலே அந்த குடும்பத்திற்கு நிறைவாக இருந்தது.

அடுத்த காட்சிதான் சூப்பர்.

வேற ஏதாவது வாங்கித் தாங்கப்பா என்று கேட்க பத்து ரூபாய்
கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு அந்த குழந்தைகள்
லேஸ் வறுவல் கேட்க, அந்த தந்தை தலையிட்டார்.

"இதெல்லாம் வெளி நாட்டுக்காரங்களதுமா. இதை விட நம்ம
வண்டில உள்ள கடலையும் பொரியும் நல்லது. நம்ம வியாபாரமே
இதனாலதான் சரியா நடக்கறதில்லை" 

எனக்கென்னமோ அவர் அந்த குழந்தைகளுக்கு அரசியல் 
வகுப்பு எடுத்தது போலவே தோன்றியது. பிறகு ஆளுக்கு
இரண்டு கடலை உருண்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டு
விட்டனர். 

மக்களின் உடலுக்கும் நாட்டின் வளத்திற்கும் எது நல்லது 
என்று அந்த தள்ளு வண்டிக்காரருக்கு தெரிந்தது ஏன்
ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை?


பின் குறிப்பு : நேற்று இரவு எட்டு மணிக்குப் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்த போது இதை எழுதத் தொடங்கினேன்.  பத்தே நிமிடத்தில் மீண்டும் போய்விட்ட மின்சாரம் இரவு பதினொன்றே காலுக்குத்தான் வந்தது. ஆகவே நேற்று பதிவு செய்ய வேண்டியதை இன்று பதிவு செய்கிறேன். சம்பவம் நடந்தது ஒன்பதரை மணி அளவில்.12 comments:

 1. மக்களின் உடலுக்கும் நாட்டின் வளத்திற்கும் எது நல்லது
  என்று அந்த தள்ளு வண்டிக்காரருக்கு தெரிந்தது ஏன்
  ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை?

  ஏன்...ஏன்...ஏன்..???

  ReplyDelete
 2. நல்ல மனிதர். தலை வணங்க வேண்டியவர்.

  ReplyDelete
 3. நல்ல மனிதர்.

  ReplyDelete
 4. தள்ளுவண்டி மனிதர் தள்ளாடும் இந்திய பொருளாதாரத்தை எளிமையாக உணர்த்திவிட்டார்! வணக்கத்திற்குரியவர்! பதிவாக்கி தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 5. என்னை மிகவும் நெகிழ வைத்த சம்பவம் இது. நேற்றே பதிவிட விரும்பினாலும் அம்மா வின் கருணை இன்றுதான் கிடைத்தது

  ReplyDelete
 6. அய்யா,

  //அப்பா கூல் ட்ரிங்க்ஸ் என்று குழந்தைகள்
  கேட்டது. பெப்ஸி என்று வேறு கேட்கிறது. அது வேண்டாம்மா,
  உடம்பிற்கு நல்லதில்லை என்று சொல்லி பவண்டோ வாங்கினார்.//

  உங்க காமெடிக்கு அளவேயில்லையா?

  பெப்சி அன்னிய தயாரிப்பு வாங்க வேணாம் என சொல்லுங்க சரினு ஒத்துக்கிற்ன்.

  அது உடம்புக்கு நல்லதில்லைனு சொல்லிட்டு பவண்டோ குடிச்சான்க என்பது எந்த வகையில் சரி?

  ரெண்டுமே "sweetened carbonated"water வகை தான் , பேரு , தயாரிப்பாளர் தான் வேற.

  பவன்டோ என்ன மூலிகை சாறா?

  பெப்சி குடிச்சா என்ன தொந்தரவுலாம் வருமோ அதெல்லாம் பவன்டோ குடிச்சாலும் வரும்.

  நீங்க வாணியம்படி சித்தவைத்தியர் ரேஞ்சில "மருத்துவ" ஆலோசனைலாம் சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க அவ்வ்.

  #//பின் குறிப்பு : நேற்று இரவு எட்டு மணிக்குப் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்த போது இதை எழுதத் தொடங்கினேன். பத்தே நிமிடத்தில் மீண்டும் போய்விட்ட மின்சாரம் இரவு பதினொன்றே காலுக்குத்தான் வந்தது. ஆகவே நேற்று பதிவு செய்ய வேண்டியதை இன்று பதிவு செய்கிறேன். சம்பவம் நடந்தது ஒன்பதரை மணி அளவில்.//

  அப்போ இத்தினி நாளா கரண்ட் கட் ஆகாம தானே இருந்தது ,அதை ஏன் சொல்லாம இருந்தீங்க?

  முன்னர் விட இப்போ மின்வெட்டு கம்மி , அதிகப்பட்சம் 2 மணி நேரம் அதுவும் எப்பவாது தான் நடக்குது என்பதை பலரும் அறிவார்கள்.

  ReplyDelete
 7. தலைகீழாக தொங்கிக் கிடக்கும் வவ்வாலைப் பார்த்தால் மற்றவர்களுக்கு காமெடியாக தெரிகிறது. ஆனால் அவர் மற்றவர்களை காமெடி என்று சொல்லிக் கொண்டுள்ளார். வவ்வால்தானே மனித உணர்வுகள் எங்கே புரியும்?

  கோக், பெப்சியை விட பவண்டோ எவ்வளவோ பெட்டர்.

  மின் வெட்டு அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். அதுவும் எப்பவாதுதான் நடக்குது - இத வேலூர்ல வந்து சொல்லுங்க, கல்லடி படுவீங்க. ஆறு மணி நேரத்துக்கு குறையாம மின் வெட்டு இங்க இருக்கு. கிராமப்பகுதிகளில் இன்னும் அதிகம். தயவு செஞ்சு காமெடிங்கற் பேர்ல கடுப்பேத்தாதீங்க

  ReplyDelete
 8. vavs ku inniku Aapu vachitengale Raman sir

  ReplyDelete
 9. அய்யா வவ்வால் பாத்தீங்களா, உங்களுக்கு கல்லடி விழும்னா சந்தோஷப்படறாங்க, ஒவ்வொருத்தரு வலைப்பக்கத்திலும்
  போய் பின்னூட்டம்க்ற பேரில கடுப்பேத்துறீங்க போல.

  ReplyDelete
 10. அய்யா,

  //வவ்வால்தானே மனித உணர்வுகள் எங்கே புரியும்?//

  புல்லு தின்னுட்டு புழுக்கை போடும் ஆடுக்கு மட்டும் மனித உணர்வுகள் புரியுமா?

  ராம் என்றால் இந்தி/சமஸ்கிருதத்தில் ஆடு எனப்பொருள் :-))

  #//கோக், பெப்சியை விட பவண்டோ எவ்வளவோ பெட்டர்.//

  நீங்க ஒரு வில்லேஜ் விஞ்சானி :-))

  கோக்,பெப்சி, பவன்டோ இவற்றின் பாட்டிலின் மீது இருக்கும் லேபிளீல் என்ன எழுதியிருக்குனு ஒருக்கா படிச்சு பாருங்க, அந்த விவரம்லாம் பொடி எழுத்துல இருக்கும், அதனால "பவர் கிளாஸ்" ஆ வாங்கிப்போட்டு படிச்சு பாருங்க ,அப்புறம் பவன்டோல என்ன "மூலிகை" இருக்குனு தெரியும் :-))

  #//அய்யா வவ்வால் பாத்தீங்களா, உங்களுக்கு கல்லடி விழும்னா சந்தோஷப்படறாங்க, //

  அயோக்கியர்கள் உலகில் உண்மைய பேசினா கல்லடி தான் விழும், அதுக்கு கை தட்ட நாலு அயோக்கியர்கள் எப்பவும் இருப்பாங்க அவ்வ்!

  ஏன்,எதற்கு,எப்படினு கேட்ட சாக்ரடிசுக்கு விசம் கொடுத்த உலகம் ஆச்சே அவ்வ்!

  ஆமாம் சார் எப்ப பார்த்தாலும் அனானி நாய் , முண்டம்னு அனானிகள திட்டுவிங்க இன்னிக்கு மட்டும் "அனானி வாக்கே அற்புத வாக்கு" என கொண்டாடுறிங்க , அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பானு பழகி போன சந்தர்ப்பவாதமா :-))

  ReplyDelete
 11. ஆமாம் உங்களுக்கு எதுக்கு கல்லடி விழும்னு சொன்னதை கவனிக்கவே இல்லை போல.

  இன்றைய மின் வெட்டு நிலவரம்

  காலை ஏழு முதல் ஒன்பது,
  பதினொன்று முதல் ஒன்று.
  நான்கு முதல் ஆறு.

  அடுத்து எப்போது போகும் என்று தெரியும்.
  இரண்டு மணி நேர மின் வெட்டு, அதுவும்
  எப்போதாவது என்று சொன்ன சிட்டி சைன்டிஸ்ட்
  என்பதற்காகத்தான்.

  ராம் என்றால் ஆடு என்று நீங்கள் சொன்னால்
  சரியாக இருக்கும். நீங்களும் விக்கிபீடியாவும் ஒன்றல்லவா

  ReplyDelete