Wednesday, June 4, 2014

தோற்றுப் போயும் புத்தி வராத முலாயம் அகிலேஷ் வகையறாhttp://www.firstpost.com/wp-content/uploads/2013/07/Mulayam-Akhilesh-headgear.jpg

முசாபர் நகர் கலவரத்தை அடக்க முடியாமல் பரவ விட்டதும் அதன் மூலம் ஜாதிய உணர்வுகளை பாரதீய ஜனதா கெட்டிப்படுத்த வழி செய்ததும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தோற்றுப் போனதற்கு முக்கியக் காரணம். ரோம் நகரம் பற்றியெறிந்த போது பிடில் வாசித்த மன்னனின் மறு வார்ப்பாக மாநிலம் முழுதும் கலவரத் தீ பரவிக் கொண்டிருந்த போது கலாச்சார விழாக்களில் பங்கேற்று ஆடிப் பாடிக் கொண்டிருந்த பெருமை அகிலேஷ் யாதவிற்கு உண்டு. நிர்வாகத் திறன் அற்ற முதல்வர் என்ற பெருமையையும் குறுகிய காலத்தில்  அடைந்தவர் அவர்தான். அதுதான் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்தது.

இப்போது

இரண்டு தலித் சகோதரிகள்,
ஒரு பெண்மணி ( வாயில் ஆசிட் ஊற்றப்பட்டவர்)
ஒரு நீதிபதி

என மூன்று அதிர்ச்சிகர சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளது. பாலியல் வன்புணர்வோடு கொலையும் இணைந்து கொண்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து போய் நாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னும் வேறு சான்றுகள் அவசியமில்லை. ஆனாலும் கூட எந்த நடவடிக்கையும் இல்லாமல் மழையில் நனையும் எருமை போலவே உணர்வற்றே அகிலேஷ் அரசு செயல்படுகிறது.

பசங்க தப்பு செய்வது சகஜம்தானே என வக்காலத்து வாங்கி வந்த பிரதமர் கனவாளர் முலாயம் “நீங்கள் இப்போது பத்திரமாகத்தானே இருக்கிறீர்கள்?” என்று பெண் பத்திரிக்கையாளர்களிடம் சீறி விழுந்துள்ளார்.

தேர்தலின் மரண அடி வாங்கிய பின்பும் கூட கடமைகளை நினைத்துப் பார்க்க தயாராக இல்லை. மகளிர் மசோதா தேவையில்லை என்று சொல்கிற பிற்போக்குவாதியால் எப்படி பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்த முடியும்?

இதிலே வெட்கமே இல்லாம கிரீடம், வீர வாள் னு போஸ் வேற

5 comments:

 1. அய்யா,

  வடமாநிலங்கள் முழுக்கவே இப்படியா வன்கொடுமைகள் அதிகம் தான், நாம தான் உலகின் மிகப்பெரிய சனநாயகம் ,என்ன கொடுமை சார் இது?

  # ஹி...ஹி இதே முலாய சிங்க் வகையறாவுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்மூனிஸ்ட்கள பத்தி என்ன நினைக்கிறீங்க?

  ஒரு வேளை மூன்றாவது அணி அமைஞ்சு , தேர்தலில் போட்டியிட்டு கணிசமாக வென்றிருந்தால் , இந்த செய்திலாம் உங்க கண்ணுக்கே தெரிஞ்சிருக்காதே அவ்வ்!

  # தோற்றுப்போயும் புத்திவராத கம்யூனிஸ்ட்கள்னு ஒருப்பதிவு போடுறது -))

  ReplyDelete
 2. வவ்வால் படிக்காத அல்லது படிக்க விரும்பாத ஒரு செய்தி உண்டு. மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருந்த போதே, முசாபர்நகர் கலவரங்கள் தொடர்பாக உ.பி அரசு செய்த தவறுகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்று ஒரு நீண்ட அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பா, மகன் இருவருக்கும் கொடுத்து இனியாவது அரசு செயல்பா வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தது.

  தேர்தலுக்காக சமரசம் செய்து கொள்ளாத, மற்றவர்களைப் போல பிழைக்கத் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று நீங்கள்தான் பதிவு போட வேண்டும்.

  விக்கிபீடியா இல்லாவிட்டால் உங்களால் பதிவே எழுத முடியாதாமே/ அப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. //விக்கிபீடியா இல்லாவிட்டால் உங்களால் பதிவே எழுத முடியாதாமே/ அப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  The above statement is not true....

  ReplyDelete
 4. அய்யா,

  //அப்பா, மகன் இருவருக்கும் கொடுத்து இனியாவது அரசு செயல்பா வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தது. //

  பின்னாடியே போய் எத்தினி சீட் கொடுப்பீன்கனும் நின்னத சொல்லாம விட்டிங்களே அவ்வ்!

  #//தேர்தலுக்காக சமரசம் செய்து கொள்ளாத, மற்றவர்களைப் போல பிழைக்கத் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று நீங்கள்தான் பதிவு போட வேண்டும்.
  //

  எப்படி சார் சிரிக்காம இப்படிலாம் சொல்ல முடியுது அவ்வ்.

  சுமார் 40 வருசமா என்ன செஞ்சீங்க, போயஸ் தோட்டம் கூர்க்க விட்டு தொரத்தின பின்னர் என்ன செய்தீங்கனு எல்லாம் தெரியாதா :-))

  # கம்மூனிஸ்ட்களூக்கு இருக்க பெரிய சவாலே நோட்டா விட ஒரு ஓட்டாவது கூட வாங்கணூம் என்பது தான்னு ஊரு உலகத்துக்கே தெரியும் ,உங்க கட்சிக்குலாம் போட்டியா வேற கட்சியே நாட்டுல இல்லை, நோட்டா மட்டும் தான்ன் :-))

  #/விக்கிபீடியா இல்லாவிட்டால் உங்களால் பதிவே எழுத முடியாதாமே/ அப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

  ஆமாம் சார் என்ன செய்ய அறீவில்லா சென்மமா பூட்டேன் , விக்கிப்பீடியாவில "W.R.வரதராஜன்" பத்திக்கூட இருக்கு , அதை வச்சு கூட பதிவெழுதலாம் தான் பார்க்கிறென் அவ்வ்!

  ஆமா சார் ஏன் வரதராஜன கம்மூனிஸ்ட்களே போரூர் ஏரில தள்ளிவிட்டாங்க?

  ReplyDelete
 5. உங்களை வருண் ஏன் கடுமையாக தாக்குகிறார் என்று முன்பெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால் அது நியாயம்
  என்று இப்போது உணர்கிறேன். பதில் அளிக்கும் தகுதியற்ற
  வக்கிரக் குப்பை உங்களது பின்னூட்டம்

  ReplyDelete