Wednesday, June 11, 2014

இடதுசாரிகளை கொச்சைப்படுத்திய தவறான "தமிழ் இந்து" செய்தி

இடதுசாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக நேற்று தமிழ் இந்து ஒரு
செய்தி வெளியிட்டிருந்தது. பல இடதுசாரி எதிர்ப்பாளர்கள் தங்கள்
முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கங்களிலும் வாந்தி எடுத்திருந்தனர்.

அது எவ்வளவு காழ்ப்புணர்வோடு கூடிய செய்தி என்பதை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்
தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் களப்பிரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதோ கீழே தோழர் களப்பிரன் பகிர்ந்து கொண்டவை

பொதுவுடமை இயக்கத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் தமிழ் இந்து நாளிதழ் இன்று “தெருவில் வீசப்பட்ட டேப் காதர் -மூத்த கம்யூனிஸ்ட் தோழருக்கு நேர்ந்த அவலம்” என்று தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அதனை மறுக்கும் சாட்சிகளாக நாங்களே இருக்கிறோம். இந்தப்புகைப்படம் கடந்த ஆண்டு அவருக்கு தமுஎகசவின் நாட்டுப்புற கலைச்சுடர் விருதையும், ரூ.10000 தொகையையும் அவர் வீட்டிலேயே சென்று கொடுக்கும் போது எடுக்கப்பட்டது அந்த நேரத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடமாட முடியாமல் வீட்டிலேயே இருந்தார். நம்மிடமிருந்து கொஞ்சம் விலகி இருந்த காலத்திலும் கூட, உழைக்கும் வர்க்கத்திற்காக வாழ்ந்த மூத்த கலைஞர் என்ற வகையில் அவர் குறித்து கடந்த ஆண்டு “வரலாற்றுப்பெட்டகமாய் வாழும் கலைஞர்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை சங்கக்குரல் எனும் இதழுக்காக நானும் கூட எழுதியுள்ளேன். இவைகள் எல்லாம் நடந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. சில மாதங்களே ஆகின்றன. உண்மை இப்படி இருக்க குள.சண்முகசுந்தரம் தனது உள்ளத்தின் ஆழ் வெறுப்பை கொட்டியுள்ளார்.

Photo: பொதுவுடமை இயக்கத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் தமிழ் இந்து நாளிதழ் இன்று “தெருவில் வீசப்பட்ட டேப் காதர் -மூத்த கம்யூனிஸ்ட் தோழருக்கு நேர்ந்த அவலம்” என்று தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அதனை மறுக்கும் சாட்சிகளாக நாங்களே இருக்கிறோம். இந்தப்புகைப்படம் கடந்த ஆண்டு அவருக்கு தமுஎகசவின் நாட்டுப்புற கலைச்சுடர் விருதையும், ரூ.10000 தொகையையும் அவர் வீட்டிலேயே சென்று கொடுக்கும் போது எடுக்கப்பட்டது அந்த நேரத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடமாட முடியாமல் வீட்டிலேயே இருந்தார். நம்மிடமிருந்து கொஞ்சம் விலகி இருந்த காலத்திலும் கூட, உழைக்கும் வர்க்கத்திற்காக வாழ்ந்த மூத்த கலைஞர் என்ற வகையில் அவர் குறித்து கடந்த ஆண்டு “வரலாற்றுப்பெட்டகமாய் வாழும் கலைஞர்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை சங்கக்குரல் எனும் இதழுக்காக நானும் கூட  எழுதியுள்ளேன். இவைகள் எல்லாம் நடந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. சில மாதங்களே ஆகின்றன. உண்மை இப்படி இருக்க குள.சண்முகசுந்தரம் தனது உள்ளத்தின் ஆழ் வெறுப்பை கொட்டியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும் அதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ”டேப் காதர் நடமாட்டமாக இருந்த கடைசி காலத்தில் மகஇக மேடைகளில்தான் பெரும்பாலும் பாடி வந்தார். அவர்களோடுதான் நெருக்கமாக இருந்தார். எனினும் உழைக்கும் மக்களுக்காக அவர் ஆற்றிய கலைச் சேவையை பாராட்டும் வகையில் 2013ம் ஆண்டு தமுஎகசவின் சார்பில் சிறந்தநாட்டுப்புற கலைஞர்களுக்கு சி.கருப்பையா பாரதி நினைவாக வழங்கப்படும் நாட்டுப்புற கலைச்சுடர் விருது டேப் காதருக்கு வழங்கப்பட்டது.

அவர்விருதினை நேரில் வந்து பெற அவருடைய உடல்நிலை அனுமதிக்காத நிலையில் தமுஎகச தோழர்கள் அவரை நேரில் சந்தித்து பாராட்டுப் பத்திரம் மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்கி கவுரவித்தனர். முதல் ஆண்டு விருது தமுஎகசவின் முன்னணிக் கலைஞர் கலைமாமணி ஓம் முத்துமாரிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது ஆண்டிலேயே டேப் காதருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை தமுஎகச தோழர்கள் அவரை அவ்வப்போது சந்தித்து தேவையான உதவிகள் செய்து வந்தனர்” என்றும் குறிப்பிட் டுள்ளார்.

டேப்காதர் கூட நான் 20 வருடமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என்று பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஆனால் குள.சண்முகசுந்தரத்தின் தனிப்பட்ட கம்யூனிச வெறுப்பின் காரணமாக, அவர் ஒதுக்கப்பட்டிருக்கிறார் என்று தன் போக்கிற்கு கதை விட்டிருக்கிறார். உண்மை அதுவல்ல என்பதற்கு நாங்களே சாட்சி. நாங்கள் சென்று சந்திக்கும் போது கூட அவர் எங்களிடம் கட்சி குறித்து எல்லாம் எதுவும் குறையாக பேசியதில்லை என்பது தான் உண்மை.

பாவம் பத்திரிகை தர்மம். குள.சண்முகசுந்தரத்தை அப்படி எழுதவைக்கிறது போலும். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

கடந்த ஆண்டு டேப் காதர் குறித்து நான் எழுதிய கட்டுரைக்காக அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் போது புகைப்படக்கலைஞர் கார்க்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இவைகள் எதுவும் குள.சண்முகசுந்தரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்...? 

3 comments:

  1. I havent read the Tamil Indu article.
    But from the way, you have written, I understand that you are totally wrong in coming to a quick conclusion.
    The Leftist movement is spoiled by India's largest left party CPI(M) which never ever spoke about its ideology; it never gave any positive assurances to the common people.CPIM compromised with all the corrupt politicians. Not even once they criticised Rajapakse or Sinhala atrocities on innocent Tamils in Sri Lanka.
    Defeat and decimation of the Left is a welcome development.

    ReplyDelete
  2. Mr Sajish, Don't you feel that your argument sounds idiotic? It is only you who jumped into a conclusion even without reading what is written in the Tamil Hindu.
    All cpim haters loses logical thinking and raise illogical questions. By welcoming the weakening of left, you people are digging your own grave

    ReplyDelete