Wednesday, February 8, 2012

அவையில் ஆபாசப்படம் பார்த்த அசிங்கம் பிடித்த அமைச்சர்கள்



காலையில் அந்த செய்தியைப் படிக்கும் போதே கோபம் பற்றிக்கொண்டு வந்தது. கர்னாடக மாநில சட்டப்பேரவையில் வறட்சி குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்த போது லட்சுமன்  சாவடி என்ற ஒரு அமைச்சர் தனது கைப்பேசியில் ஆபாசப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ண பலமீர் என்ற  மற்றொரு அமைச்சர் அதை எட்டிப் பார்த்து , தனது தொலைபேசிக்கும் அந்த ஆபாசப்படத்தை அனுப்பச் சொல்கின்றார்.  அதே போல் சி.சி.பட்டீல் என்ற அமைச்சரும் பார்த்து ரசித்து பரவசம் அடைந்துள்ளார். ஒரு போனில் வீடியோ பார்த்த பின்பு அடுத்த தொலைபேசியை எடுத்து ஆபாசப்புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கத் துவங்கியுள்ளார்.

அவை நடவடிக்கைகளை படம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிருபர், இவர்களின் அசிங்க நடவடிக்கைகளை ஸூம் செய்து பதிவு செய்து விட்டார்.

ஆபாசப்படங்களை பதிவு செய்வதோ, பார்ப்பதோ ஸைபர் க்ரைம். அந்தக் குற்றத்தை அமைச்சர்களே செய்கின்றார்கள், அதுவும் சட்டப் பேரவைக்குள் அமர்ந்தபடியே. இந்த சபலப் பேர்வழிகளை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதை விட கேவலம் எதுவும் இருக்க முடியாது.

சட்டசபைக்குள்ளேயே இவர்கள் இப்படி என்றால் மற்ற நேரத்தில் எப்படி இருப்பார்கள்? பெண் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ, அல்லது மக்களையோ இவர்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்? தொலைக்காட்சிகளில் அம்பலமான பிறகும் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள இந்த தன்மானச் சிங்கங்கள் தயாரில்லை.

பயங்கர ஜொள்ளுப் பார்ட்டிகளை பி.ஜே.பி என்று சுருக்கமாக சொல்வார்கள். பி.ஜே.பி கட்சி என்றாலும் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி தான் போலிருக்கிறது.

வித்தியாசமான கட்சியின் வித்தியாசமான அமைச்சர்கள். முன்பு ஒரு எம்.பி அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று வெளிநாடு கூப்பிட்டுப் போனார். இப்போது இவர்கள், அடுத்து அசிங்கமாக மாட்டிக் கொள்ளப்போவது யார் ?

அவை நடவடிக்கைகளை படம் பிடித்தார் என்பதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து டி,ஆர்.பாலுவின் மகனை பத்து நாட்கள் சஸ்பென்ட் செய்தார்கள்.

கர்னாடக அரசு என்ன செய்யப்போகின்றது? ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா இல்லை இந்த அசிங்கத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளரை தாக்குவார்களா? இல்லை விதான் சவுதா கட்டிடத்தின் வாஸ்து சரியில்லை, அதனால்தான் பாஜக அரசுக்கு பிரச்சினை வருகின்றது என கடப்பாரையை கையில் எடுத்துக் கொண்டு புறப்படுவார்களா?

2 comments:

  1. இது ஒரு சிறு துளிதான். வெளியில் அவர்களு அனைவரும் ஒரே மாதிரிதான்.

    ReplyDelete
  2. நல்ல கருத்து. பி.ஜே. பிகள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் இந்த பி.ஜே.பியின் பி.ஜே.பிகள் ரொம்ப மோசம். இவர்களெல்லாம் நாட்டையா காப்பாற்றுவார்கள்?

    ReplyDelete