கொச்சின் அருகே இத்தாலியக் கப்பலால் கேரள மீனவர்கள் தாக்கப்பட்டவுடன் மத்தியரசு காண்பித்த வேகம் அதிசயமானது. இங்கேயும் கொல்லப்பட்ட மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் படகு கேரளாவை சேர்ந்தது. மற்ற மீனவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மத்தியமைச்சர் ஏ.கே.அந்தோணி உடனடியாக கண்டிக்கிறார். இத்தாலி நாட்டு தூதர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்படுகின்றார். கப்பல் கொச்சின் துறைமுகத்திற்கு இழுத்து வரப்படுகின்றது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
எல்லாம் சரிதான். எனக்குள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது இந்த வேகம் எங்கே ஒளிந்து கொண்டது? ஒவ்வொரு முறை எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை சென்று திரும்பி வந்த ஓரிரு நாட்களில் தாக்குதல் நடக்கிறதே, ஒரு முறை கூட இலங்கை தூதரை அழைத்து கண்டிப்பதே இல்லையே?
இப்படி ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது மத்தியரசிற்கு அழகா?
சரியான் கேள்வி சகோ!!!!!!!!!!!
ReplyDeleteஒரு இத்தாலியனை கடல் எல்லை தாண்டி நடந்த துபாக்கி சூட்டுக்கு கைது செய்ய முடியும் எனில் ஏன்பல்முறை தாகுதல் நடத்திய சிங்கள்னை கைது செய்ய முடியவில்லை?.
அனைத்து செய்தி நிறுவங்களும் இபோதைய சம்ப்வத்தை இந்தியன் கொல்லப்ப்ட்டதாக் தகவல் தருபவர்கள்,எபோதும் தமிழக மீனவர்கள் சுடப்ப்ட்டனர் என்றே குறிப்பிடுவதும் எரிச்சல் ஊட்டும் ஒன்று
நன்றி