வேலூரில் உள்ள மும்முரமான இடம் புதிய பேருந்து நிலையத்திற்கு
அருகாமையில் உள்ள க்ரீன் சந்திப்பு (Green Circle). மிக மிக
குழப்பமான சாலை அமைப்பு உள்ள இடமும் அதுதான்.
இன்று அந்த வழியாக வருகையில் ட்ராபிக் காவலர் இல்லை.
தானியங்கி சிக்னல் வேலை செய்து கொண்டிருந்தது. சிவப்பு
விளக்கு எரிந்தது. ஆனாலும் எந்த வாகனமும் நிற்கவில்லை.
மறு முனையில் பச்சை விளக்கு எறிந்தாலும் அவர்களால்
செல்ல முடியவில்லை. சத்தம் போட்டால் கூட யாரும்
கண்டு கொள்ளாமல் சென்று கொண்டே இருந்தார்கள்.
இங்கே பச்சை விளக்கு அணைந்து மீண்டும் சிகப்பு விளக்கு
எரியத்தொடங்கி விட்டது. இப்போது உரிமையாக செல்லத்
தொடங்கி விட்டார்கள்.
மீண்டும் பச்சை விளக்கு எரிந்த பின்புதான் புறப்பட
முடிந்தது. போக்குவரத்து காவலர் இருந்தால் இப்படி
ஆகியிருக்குமா?
சுய கட்டுபாடு இல்லாத மக்களைக் கொண்ட நாடு
எப்படி முன்னேறும்? சுதந்திரத்தின் அருமையை
உணராததன் விளைவு, சுதந்திரப் போராட்டத்தின்
பெருமையை புரிந்து கொள்ளாததின் விளைவு
இப்படி நடப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment