Thursday, February 2, 2012

ஜெ வின் பித்தலாட்டம்




நேற்று சட்டப்பேரவையில் விஜயகாந்துடன் நடந்த கலாட்டாவிற்குப் பின்பு பேசிய ஜெ “ அவருக்கு தேமுதிக வுடன் கூட்டணி வைக்க விருப்பமே இல்லை எனவும் தொண்டர்கள் விரும்பியதால்தான் கூட்டணி வைத்ததாகவும் “ கூறியுள்ளார்.



புது ஆண்டின் முதல் நகைச்சுவை இதுதான். ஏதோ இவர் கட்சியில் எல்லோரும் கருத்து சொல்லி விவாதம் நடத்தி ஜனநாயக பூர்வமாக வாக்குப் பதிவு நடத்தி முடிவெடுப்பது போல கதை விடுகின்றார். அதிமுக வில் இவரைத் தவிர முடிவெடுக்கும் அதிகாரம் வேறு யாருக்காவது (முன்னர் இருந்த சசிகலா நீங்கலாக ) உண்டா என்ன?



இவர் மட்டுமே தலைவர், கட்சியில் உள்ள மற்றவர்கள் எல்லாம் வெறும் பொம்மைகள் என்பதுதானே யதார்த்தம்! அதனால்தானே அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறார்?



முக்கிய அரசியல் முடிவுகள் எடுப்பதற்கு அம்மாவிற்கு ஆலோசனை சொல்லும் தைரியம் அதிமுக வில் யாருக்காவது உண்டா என்ன? அப்படி ஆலோசனை சொல்லி விட்டு அதற்குப் பின்னர் அந்த நபர் கட்சியில் நீடிக்க முடியுமா என்ன?



ஆனாலும் கேட்பவர்கள் கேணையர்கள் எனக் கருதி நகைச்சுவை முத்தினை உதிர்த்துள்ளார். ஜெ என்றில்லை, எல்லா முதலாளித்துவக் கட்சிகளிலும் இதுதான் நிலை. திமுக என்றால் தலைவரும் பொதுச்செயலாளரும் கலந்து பேசி முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு மட்டும் கூடுதலாக இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரத்தை கலைஞருக்கும் பேராசியருக்கும் கொடுக்கும் அளவிற்கு மற்ற தலைவர்கள் சக்தி படைத்தவர்கள்.



ஆனால் அந்த அதிகாரம் கூட இல்லாதவர்கள்தான் அதிமுகவினர். இந்த நிலையில் இப்படிச் சொன்னால் நல்ல நகைச்சுவை என்று வாய் விட்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.



இன்னொரு விஷயத்தைச் சொல்லாமல் இந்த பதிவை நிறைவு செய்வது சரியாக இருக்காது.



ஜனநாயக பூர்வமாக விவாதித்து முடிவு எடுக்கப்படுவது என்பது இடதுசாரிக் கட்சிகளில் மட்டும்தான்.



பிரதமர் பதவி தேடி வந்த போதும் அது அவசியமில்லை, ஆட்சியில் பங்கேற்க வேண்டிய தேவை இல்லை என்ற முடிவை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு விவாதித்து முடிவெடுத்தது. இந்த ஜனநாயகம் வேறு எந்த கட்சியிலாவது உண்டா?



ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அது வேண்டாம் என்று  அதிமுக வின் எந்த உறுப்பினராவது சொல்ல முடியுமா? 

2 comments:

  1. enna sir, oru comedy, oru suspension, oru walk-out illamalea satta sabai nadantha athu school assembly- maadirithan irukkum. Konjam swarasyam vendaamaa?

    ReplyDelete
  2. enna sir, oru comedy, oru suspension, oru walk-out illamalea satta sabai nadantha athu school assembly- maadirithan irukkum. Konjam swarasyam vendaamaa?

    ReplyDelete