Thursday, October 6, 2011

உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட குரலாய்



செப்டம்பர் மாதம் ஏழாம் நாள்  புது டெல்லியில்  நடைபெற்ற அனைத்து
தொழிற்சங்கங்களின்  மாநாடு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 
மாநாட்டில்  வெளியிடப்பட்ட பிரகடனம் மிகவும் முக்கியமானது. 
அப்பிரகடனத்தின்  முக்கிய அம்சங்கள் 

23  பிப்ரவரி 2011  அன்று  அனைத்து தொழிற்சங்கங்கள்  நாடாளுமன்றம்
நோக்கி பேரணி நடத்தி அளித்த மனு மீது மத்தியரசு எவ்வித 
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உழைக்கும் மக்கள் மீது
மேலும் பல தாக்குதல்களைத்தான்  நடத்தியுள்ளது. பெட்ரோல் 
விலை உயர்வு மூலம் விலைவாசி உயர வழி வகுத்துள்ளது. 
பொதுத்துறை நிறுவனப் பங்குகளை பல்வேறு முறைகள் மூலம்
விர்கப்பார்க்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் 
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை  பாதிக்கப்படுகின்றது. 

அனைத்து தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் ஐந்து முக்கிய
கோரிக்கைகள்.

விலைவாசி  உயர்வு கட்டுப்படுத்தப் படவேண்டும்

முதலாளிகளுக்கு மானியம் அல்லது சலுகைகள் வழங்கும் 
அரசுகள், அத்தொகையை  வழங்க வேலை வாய்ப்பு உருவாக்கம்,
பணிப்பாதுகாப்பு  ஆகியவற்றை நிபந்தனையாகக வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் கடுமையாக அமுலாக்கப் 
படவேண்டும். மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படவேண்டும். 

ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களுக்கான  சமூகப்
பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட வேண்டும். பயனளிக்கும் 
விதத்தில் செயல்பட வேண்டும். 

பொதுத்துறை பங்கு விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.   

இவற்றைத்தவிர  

அரசு உடனடியாக எடுக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் 
பற்றியும் பட்டியல் அளித்துள்ளது.  

ஒப்பந்த / தற்காலிக ஊழியர் முறை ஒழித்துக் கட்டப்படவேண்டும்.

குறைந்த பட்ச ஊதியம் 10000  ரூபாய் என குறைந்தபட்ச
ஊதியச்சட்டம் திருத்தப்பட வேண்டும். 
பென்ஷன், பணிக்கொடை என எதற்கும் உச்சவரம்பு கூடாது.

உறுதி செய்யப்பட பென்ஷன் அனைவருக்கும் தரப்படவேண்டும். 

தொழிற்சங்கங்களை  45 நாட்களுக்குள் பதிவு செய்திட வேண்டும். 
தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த சர்வதேச தொழிலாளர் 
அமைப்பின் தீர்மானங்கள் 87  மற்றும் 98  ஏற்றுக் கொள்ளப்பட்டு
அமுலாக்கப்பட வேண்டும். 
வரும் 8 நவம்பர் அன்று  சிறை நிரப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள்
ஆகியவை நடத்துவது  என்று ஜனவரி மாதம் வேலை நிறுத்தம்
செய்வது என இம்மாநாடு முடிவெடுத்துள்ளது. 

மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்ற புரிதலோடு
தொழிற்சங்க இயக்கம்  ஒன்றுபட்டு போராட முன் வந்துள்ளது. 
மத்திய சங்கங்கள், துறைவாரி  சங்கங்கள் பங்கேற்ற இம்மாநாட்டில்
காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி சங்கங்கமும் பாஜகவின் 
பி.எம்.எஸ் சங்கமும் திமுகவின் தொ.மு.ச. வும் பங்கேற்றது 
என்பது சிறப்பானது. 

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து 
இயக்கங்கள் மேற்கொள்வது நம்பிக்கையளிக்கிற ஒன்றாகும்.

 
   

2 comments: