ஆரவாரக் குரல்கள்,
பகிர்தலில் பிரச்சினைகள்,
பாட்டில்கள் திறக்கும் ஓசைகள்,
பிளாஸ்டிக் த்ம்பள்ர்களில்
நிரம்பும் மது வகைகள்,
மசாலாவின் மணம்
எதுவுமே இன்றி
அமைதியாய் இருந்தது
அந்தப் பகுதி,
டாஸ்மாக்கின் அருகில்
இருந்த அரசாங்க சாலை
எனும் வெட்ட வெளி பார்.
தன் வீட்டிற்கு
எடுத்துச் செல்ல
எதுவும் இல்லாத
இந்தியக் குடிமகன்
குபேரனாய் பகிர்ந்து
கொண்ட மிச்சம் மீதியில்
உயிர் வளர்த்த
நாய்கள் மட்டும்
சோர்விலே சுருண்டு போய்
ஓரமாய் கிடக்கின்றது,
ஆதரவளிக்கும்
வள்ளல்களின் வருகை இன்றி.
தேசத் தந்தையின்
பிறந்த நாளில்
பாவம் அந்த நாய்களும்
இன்று உண்ணா விரதம்.
அவைதான் அறியுமா?
இன்று காந்தி ஜெயந்தி.
மதுக்கடைகள்
விடுமுறை என்று?
( என் வீட்டுக்கு வரும் ஒரு
பிரதான சாலையில் அன்றாடம்
பார்க்கிற சூழல் இன்றி போவோர்
வருவோர் யாரேனும் ஏதாவது
உணவளிப்பார்களா என்று
ஏக்கத்துடன் தலை நிமிர்த்துப்
பார்த்து சுருண்டு போய்க் கிடந்த
பத்து நாய்களின் நிலை உருவாக்கிய
தாக்கம், இந்த கவிதை போன்ற
ஒரு வடிவம்)
அருமை
ReplyDelete