அடுக்கு மொழி அபத்த வசனம் பேசுவதில் டி. ராஜேந்தர் தான்
முன்னோடி என்று நினைத்திருந்தேன். காப்டன் டி.வி யில்
சிறிது நேரம் கந்தன் கருணை பார்த்த பிறகுதான்
தெரிந்தது அவரது முன்னோடி சிவாஜி கணேசன் என்று.
சிவாஜி கணேசன் வீர பாகுவாக சூர பத்மன் அசோகனிடம்
தூது சென்று பேசும் அத்தனை வசனங்களும் அத்தனை
அடுக்கு மொழி, அத்தனை அபத்தம்.
எத்தனையோ திரைப்படங்களில் அழகு தமிழ் வசனம்
எழுதிய ஏ.பி.நாகராஜன், கந்தன் கருணை க்கு மட்டும்
என் இப்படி ஓர வஞ்சனை செய்தார் என தெரியவில்லை.
சீரியசான அந்த காட்சி அடுக்கு மொழி வசனங்களால்
பாவம் காமெடிக் காட்சியாகி விட்டது.
பின் குறிப்பு : நான் பார்த்த முதல் திரைப்படம் கந்தன் கருணை
என்று என் வீட்டில் சொல்வார்கள். எனது முதல் வயது
பிறந்த நாளில் என்னைக் கூட்டிச் சென்று எல்லோரும்
பார்த்த திரைப்படமாம் அது.
உண்மைதான் ..
ReplyDeleteT.R போட்டோ சூப்பர்
ReplyDeleteகந்தன் கருணையில், ராமாயணத்தின் பிரசித்தி பெற்ற, இன்று போய் நாளை வா, என்பதை சூர பத்மன் சொல்வது போல சொல்லி , பயங்கரமாக குழப்பியிருப்பார்கள். சிவாஜி கொஞ்ச நாள் கால்ஷீட் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்த படம் போல இருக்கும்!
ReplyDelete