மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா?
தேசியக் கொடி தலைகீழாக உள்ளது கூட
தெரியாத ஒரு மத்திய மந்திரி, அவருக்குக்
கீழே ரத கஜ, துராக பதாதிகள் (சரிதானே) .
என அதிகாரிகள் பட்டாளம்.
ஆனால் யாருமே இதைக் கவனிக்கவில்லை.
இந்த அலட்சியம்தானே இவர்கள் ஆட்சியின்
அடையாளம்!
ஆனால் எப்போதும் கபில் சிபலின் வாய்
மட்டும் காது வரை நீளும் . . .
(இந்த படத்தை இணைய தளத்திலிருந்து
எடுத்துத் தந்த எனது மகனுக்கு நன்றி)
இந்தியாவை தழைகீழாக தொங்க விடும் அளவுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்... இந்த லட்சணத்தில் இவர் சட்டம் படித்தவர்...
ReplyDeleteஇவருக்கு இதை இப்படி யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
ReplyDeleteஓர் ஆசிரியர் வகுப்பில் தன் மாணவர்களுக்கு, இந்திய கொடியை 'பச்சை- வாழையிலையிட்டு, வெள்ளை- சோறிட்டு, சிவப்பு- குழம்பூற்றி' என நினைவில் வை எனச் சொல்லிக் கொடுத்தாராம்.
இவருக்கும் சொல்லுங்கோ!!!
இவனுங்க ஆட்சியே சரியில்ல ...
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteபா. ம. க சின்னம் மாறுகின்றதா?
பெங்களூரில் காலை Peak Hour Service பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஒருவர் ஓடோடி வந்து பஸ்ஸை பிடித்து ஏறினார். உடனே, விதான சவுதா ஒரு டிக்கட் கொடுங்க என்றார் கண்டக்டரிடம். அதற்கு கண்டக்டர் நிதானமாக ஜிப்-பை போட்டுக்கோங்க சார், டிக்கட் கொடுக்கிறேன் என்றார். டிக்கட் வாங்கி அவர் நகர்ந்ததும் 'ஜிப் போடத்தெரியாத இவனுங்களெல்லம் கவர்ன்மென்ட் ஆபீஸருங்க' என்றார் எங்களிடம்.
ReplyDeleteஇதுவும் அதுபோலத்தான். இந்த புகைப்படத்தில் கொடியை வட்டமிடாதிருந்தால் உங்களைப்போன்ற படித்தவர்களுக்கு கூடகொடி தலைகீழாக உள்ளது தெரிந்திருக்காது. கையில் கொண்டுவரும் பைல்களையே சரியாய் படிக்க நேரம் இல்லாதவர்களுக்கு, எதிரில் உள்ள தலைகீழ் கொடி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரி, நீங்கள் எப்போதாவது ஜிப்-போடாமல் public-ல் மாட்டிக்கொண்டதுண்டா?
நாட்டுப்பற்றை பொதுமக்களிடம் தான் எதிர்பார்க்கின்றனரே தவிர அதிகார வர்க்கத்தினரிடம் அல்ல! இது போன்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தாங்கள் செல்லும் வண்டியில் தலைகீழாக கொடிபறக்கவிடுவது ஜகஜமுங்கோ!
ReplyDeleteநாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் இவர்களுக்கு கொடியெல்லாம் ஒரு ஜுஜுப்பி! இவர்களை தண்டிக்க ஒரு சட்டம் வேணுமுங்கோ!
தாங்கள் ’கூகிள் கனெக்ட்’டை தங்கள் வலைப்பூவில் அமைத்தீர்களேயானால், புதிய பதிவுகள் அனைத்தும் எங்கள் வலைப்பூ வாயிலாக காண இயலும்.
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
ReplyDelete