Saturday, October 8, 2011

ராமபிரான் பெயரில் ஒரு குழந்தையின் மரணம்





தமிழகத்தில்  கந்த சஷ்டி அன்று பல ஊர்களில் சூர சம்ஹார
விழா நடக்கும். முருகன் வேடம் போட்ட மனிதன் பொம்மை
சூர பத்மனை கொல்வது  என்பது அந்நிகழ்வு. 


அது போல ராவணனின் பொம்மை அல்லது கொடும்பாவியை
ராமன் வேடமிட்டவர்கள்  கொல்வது என்ற விழா வட இந்தியாவில்
விஜய தசமி அன்று நடைபெறும்.




இயக்குனர் வசந்த், தனது ஆசை பட க்ளைமாக்ஸ் காட்சியில் 
மிகவும் பொருத்தமாக  இதனை பயன்படுத்தியிருப்பார். 
அதே போல கமலின் ஹேராம் திரைப்படத்திலும்  இவ்விழா
வரும்.


புராணத்துக் கதையை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி  
ஒருவனை ஒவ்வொரு ஆண்டும் கொள்வதில்  என்ன
சிறப்பு இருக்கின்றது  என தெரியவில்லை. துரியோதனன்
படுகளம்  என்று  வேலூர் மாவட்டத்திலும்  இப்படி 
ஒரு நிகழ்வு நடக்கும்.


மனிதனுக்குள்  ஒளிந்திருக்கிற கொலை வெறி தான் 
இப்படி கடவுளின் பெயரால்  வெளிப்படுகின்றதோ 
என எனக்கு எப்போதும்  தோன்றும். இந்த நிகழ்விற்கு
பிரதமரும் சோனியா காந்தியும் வேறு  ஒவ்வொரு 
ஆண்டும் வந்து செல்வார்கள். எல்லாம் ஓட்டுக்கள் 
படுத்தும் பாடு. 


இந்த பதிவில் நான் சொல்ல வந்த முக்கிய விஷயம்
வேறு. 

நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த  தசரா 
விழாவில்  ராமன், ராவணனை தீயிட்டதும்  
இருபது அடி உயர கொடும்பாவியின்  ஒரு 
எரியும் மூங்கில் கம்பு கீழே  விழுந்தது. 


அந்த எரியும் மூங்கில் பவ்யா என்ற ஆறு 
வயது  சிறுமியின்  மேல்  விழ அந்த  சிறுமி
மருத்துவமனையில்  இறந்து போனாள்.
எவ்வளவு பெரிய துயரம்  இது? 


கடவுளின் அருள் பெறச் சென்றவர்கள் 
கடவுளின்  பெயரால் மரிப்பது  என்பது 
எவ்வளவு பெரிய கொடுமை! கடந்தாண்டு
சபரி மலையில் பலருக்கு  நடந்தது
இந்த ஆண்டு பவ்யாவிற்கு  நிகழ்ந்தது.


மொத்தத்தில் ராமன் விட்ட அம்பு 
பவ்யாவின்  உயிரைப் பறித்து விட்டது.
கடவுளை நம்பினோர்  கைவிடப் படுவார்.



 



  

6 comments:

  1. what were kids parents doing?
    you fool it is a pure accident..just like bus,train accidents.
    do you know how many people die in Mecca during the festival? do you have guts to write about that?

    ReplyDelete
  2. I do not agree with you.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதால் ராம் லீலா கொண்டாட்டத்தால் தான் இது நடந்தது என்பது சரியில்லை. கார் ஓட்டினால் ஆக்சிடென்ட் ஆகிறது அதனால் யாரும் கார் ஓட்டக்கூடாது என்பது போல் உள்ளது நீங்கள் சொல்வது!

    ReplyDelete
  3. திரு பந்து, என் பதிவின் கடைசி வரியை படியுங்கள். எனது இப்பதிவின் கருத்து அதிலே அடங்கியுள்ளது.

    ReplyDelete
  4. ஐயா அனானி, மெக்காவில் அல்ல வாடிகனிலும் னிகழ்ந்தாலும் எழுதுவேன். ஏன் எங்கள் சங்க மாத இத்ழிலும் எழுதியுள்ளேன். மற்ற மதத்தை காண்பித்து தங்களைப் போல புத்திசாலியாக தப்பித்துக் கொள்ள மாட்டேன். ஆன்மீகவாதிகள் மூர்க்கத்தனமானவர்கள்
    என்பதை அடிக்கடி காண்பித்து விடுகின்றார்கள். மூர்க்கத்தனம் அடுத்தவரை முட்டாள் என்றே அழைக்க வைக்கும், தங்களின் குணம் மறந்து

    ReplyDelete
  5. I totally agree with the comment made by Com., Raman. Accident is happening still every one is traveling. But people knows that accident will happen if they are careless. But people(devotee) were here that God will save us and the thing is different both in Ram maidaan as well as macca. So that people must safeguard themselves because god is not going to save us. At any cost.

    ReplyDelete