Monday, October 17, 2011

அடிச்சுக்க ஆரம்பிச்சாட்டாங்கப்பா


 
மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் 
கொள்ள ஒரு வார கெடு அளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்
தொண்டர்களை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்த 
போது மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளே 
இல்லை என சாதித்தவர் மம்தா.  
 
 
இவரது கட்டுப்பாட்டில்இருந்த ரயில்வே துறையின்
ஒரு ரயிலை வெடி குண்டு வைத்து நூற்றுக் 
கணக்கானவர்களை கொன்ற போதும் 
கூட மாவோயிஸ்டுகள் இல்லவே இல்லை  என அவர் 
சாதித்தார்.  
 

மம்தாவின் ஆட்சியை  ஏற்படுத்துவதுதான் புரட்சி 
என செயல்பட்டவர்கள்  மாவோயிஸ்டுகள்.
 


கொள்கையற்ற இரு கூட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
எதிராக கை கோர்த்தது . அவர்களின் நோக்கம் 
நிறைவேறியதும்  முரண்பாடுகள் இப்போது 
வெளி வந்து விட்டது.
 


முன்பு இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மேற்கு
வங்க மாநிலத்தில் இல்லாத மாவோயிஸ்டுகள்
இப்போது மட்டும் எங்கிருந்து வந்தார்கள்? 
 
 
 
இனி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க  
மம்தா தீதியும்  துப்பாக்கியின் மூலம்
புரட்சியை உருவாக்க  மோதப்போகின்றார்கள்.
இந்திய முதலாளித்துவ ஊடகங்களும், 
மெத்தப் படித்த மேதாவிகளும்  யார் பக்கம்
நிற்பார்கள்? 
இவர்கள் அடித்துக் கொள்வார்கள்  என்பது
எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு 
விரைவில்  இது நடக்கும்  என்று 
எதிர்பார்க்கவேயில்லை.


பின் குறிப்பு 


சில மணி நேரம் முன்பு எழுதிய 
பதிவில் சில கூடுதல் விஷயங்களை
இணைத்துள்ளேன்.

No comments:

Post a Comment