Wednesday, October 12, 2011

அராஜகத்திற்கு அளவில்லையா? ரத்தம் கொதிக்குதே!



இன்று காலை நாளிதழ் படிக்கும் போதே  ரத்தம்
கொதித்தது. 

நகரத்தில் 32  ரூபாயும்  கிராமத்தில் 26 ரூபாயும்  
சம்பாதிப்பவர்கள்   வறுமைக் கோட்டிற்கு மேலே
வசிப்பவர்கள்  என்று  மத்தியரசு கூறியதற்கு 
நாடெங்குமே  எதிர்ப்பு வந்துள்ள நிலையில் 
அதனை மெத்தப் படித்த மேதாவி, அமெரிக்க 
எடுபிடி  மாண்டேக் சிங் அலுவாலியா அதனை
நியாயப்படுத்தியுள்ளார். 
அவர்களது நிர்ணயம் சரிதானாம். இந்த தொகை
கொண்டு ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ
முடியுமாம்.


எவ்வளவு அராஜகமான  செயல் இது?
இந்த பொருளாதார மேதைகளால் இந்த
தொகை கொண்டு ஒரு நிமிடம் கூட 
வாழ முடியாது.


சாதாரண மக்கள் யாருக்கும் அரசு  எதுவும்
செய்யாது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டு
சாகட்டும்  என்று மட்டும் இவர்கள் நேரடியாக
சொல்லவில்லை. 
 

1 comment:

  1. கிரெடிட் கார்டு, பர்ஸ், எல்லாவற்றையும் பறித்து வைத்துக்கொண்டு, தினமும் காலை ஐந்து மணிக்கு, அலுவாலியவுக்கு வெறும் முப்பத்து இரண்டு ரூபாய் கொடுக்கவேண்டும். இந்த முப்பத்தி இரண்டு ரூபாய்க்குள் ஒருனாளை டெல்லியில் செலவிடவேண்டும். பிச்சை எடுக்கக்கூடாது. கடன் வாங்கக்கூடாது. இத்தகைய சூழலில் இந்த அலுவாலியா மூன்று நாள்களுக்குள் உயிரோடு இருப்பானென்றால், இவன் சொல்வதை உண்மையென்று நாம் ஒத்துக்கொள்ளாலாம்!

    ReplyDelete