சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, September 19, 2018
Tuesday, September 18, 2018
வெள்ளையன் முதல் கொள்ளையன் வரை . . .
"வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில்
வாழ்க்கையை துவக்கியவர்.
இளமைக்காலத்திலேயே சிறைத்தண்டனையை
ஒன்றரை ஆண்டுகள் அனுபவித்தவர்.
தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியில்
சேர்ந்து எல்.ஐ.சி யிலும் தட்டச்சராய் தொடர்ந்தவர்.
சங்கம் அமைத்து வளர்த்தெடுத்ததால்
கொல்கத்தாவிலிருந்து நாக்பூருக்கும் கோவைக்கும்
தூக்கி அடிக்கப்பட்டவர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
இணைச்செயலாளராய் இருந்த அவருக்கு
மக்களவை உறுப்பினர் எனும் பொறுப்பை
மார்க்சிஸ்ட் கட்சி அளித்தது.
அங்கே காட்டிய திறத்தாலே
"பொதுக் கணக்குக் குழு தலைவர்" எனும்
பொறுப்பும் தேடி வந்தது.
ஆலமரமாம் எல்.ஐ.சி யை ஐந்தாய் வெட்டிப் போட
இந்திரா அம்மையார் கொண்டு வந்த மசோதாவை
அபிமன்யுவின் தீரத்தோடு மக்களவையில் எதிர்த்து நின்றார்.
இவர் உடைத்த பத்ம வியூகத்தை பின் எவராலும் சேர்க்க
முடியவில்லை. இன்றும் எல்.ஐ.சி கொடி ஒளி வீசி பறக்கிறது.
உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகள்
என்ற வடிவில் வந்த கொள்ளையர்களை எதிர்த்து
என்ற வடிவில் வந்த கொள்ளையர்களை எதிர்த்து
"வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தொடங்கிய
அவரது பொது வாழ்வு இறுதி நாள் வரை
போராட்டத்தில்தான் தொடர்ந்தது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராய், "பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" இதழின் ஆசிரியராய்.
இன்று ஆட்சியாளர்களே கொள்ளையர்களாய், கொலைகாரர்களாய் மாறிய சூழலில் அவர்களை வீழ்த்திட
அவரின் எழுத்துக்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்.
செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா !!!
Monday, September 17, 2018
எம்.ஆர்.ராதா- அவருக்கு நிகர் . . .
தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர்களில் முக்கியமானவரான நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திரைக்காட்சி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பாடல் வரிகள் உண்மையானது.
அவரே அவருக்கு நிகரானவர்
பின் குறிப்பு :
யூட்யூப் இணைப்பு கொடுக்கலாம் என்று யோசித்த வேளையில் வாட்ஸப் குழுவில் காணொளியை பகிர்ந்து கொண்ட தோழர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நன்றி
எடப்பாடி ஆளுங்க உஷாராயிட்டாங்க . . .
இந்த சுவர் விளம்பரத்தை நேற்று வைத்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாக மரண தூதுவனாக மாறிய எடப்பாடி அழைக்கும் இடம் சுடுகாடு என்பது மிகவும் பொருத்தமாகவே இருந்தது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பும் ஆனது.
ஆனால் எடப்பாடி ஆட்கள் உஷாராகி விட்டார்கள்.
எடப்பாடி அழைக்கிறார் என்று எழுதியதை இன்று அழித்து விட்டார்கள்.
ஆக அதிமுகவில் அனைவரும் செல்லூர் ராஜூ அல்ல போலும் !
அன்றும் இன்றும் அஞ்சி நடுங்கி . . .
பெண்களை பேதையாய் எண்ணி
அடிமைகளாய் நடத்திய
அக்கிரமம் நீங்க
குரல் கொடுத்தீர்.
சமத்துவமும் சமூக நீதியும்
மலர காலமெல்லாம்
உழைத்தீர்கள்
மூளைச்சலவை செய்து
மூடத்தனத்தை வளர்த்த
மதங்களுக்கு எதிராய்
உயிருள்ளவரை பாடுபட்டீர்.
உடல் பிணி சுமந்து
ஊரூராய் அலைந்தாலும்
போகப் பொருளாய்
பெண்களைப் பார்க்கும்
பார்வை மங்கிடவில்லை.
அரசியல் ஆதிக்கம் பெற
ஜாதியின் ஆதிக்கத்தை
நீட்டிக்கும் அவலம்
மாறிடவில்லை.
கடவுளின் பெயரால்
சிலைகள் வைத்து
சில சில்லறைகள் ஆடும்
ஆட்டமும் நிற்கவில்லை.
அன்றும் இன்றும்
அவர்கள் வெறுப்பதும்
அஞ்சி நடுங்குவதும்
உம்மைக் கண்டென்றால்
நீங்கள் பற்ற வைத்த
பகுத்தறிவு நெருப்பு
இன்னும் வெப்பத்தோடு
அவர்களை
சுட்டுக் கொண்டுதான் இருக்கிறது!
தொடர்வோம் உம் பயணத்தை . . .
உரக்கச் சொல்வோம்
உம் கருத்துக்களை . . .
Sunday, September 16, 2018
இடதின் வெற்றி தொடரட்டும்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில்
இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடதுசாரி மாணவர் அணி மாபெரும் வெற்றி.
SFI-AISA-AISF-DSF ஆகிய நான்கு அமைப்புக்கள் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றிக்கனியை கொய்துள்ளது.
தலைவராக.... சாய் பாலாஜி
துணைத் தலைவராக...சரிகா
செயலாளராக..... அஜாய் அகமது
துணைச் செயலாளராக.... அமுதா ஜெயதீப்.
துணைத் தலைவராக...சரிகா
செயலாளராக..... அஜாய் அகமது
துணைச் செயலாளராக.... அமுதா ஜெயதீப்.
ஆகியோர் முக்கியப் பொறுப்புக்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மத்தியரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் கையிலிருக்கும் திமிரில் எத்தனையோ ஆட்டம் போட்ட காவிக் கூட்டத்தின் ஏ.பி.வி.பி அனைத்து இடங்களிலும் தோற்றுப் போயிருக்கிறது.
இடதின் வெற்றி தொடரட்டும்.
காவிக்கயவர்கள் இந்திய அரசியலில் இருந்தும் துடைத்தெறியப் படட்டும்.
Subscribe to:
Posts (Atom)








