Wednesday, February 8, 2017

குடிதான் கூத்துதான்

 




தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் காட்டில் நல்ல மழைதான். தங்கக்கூண்டு சிறையாக இருந்தாலும் உல்லாசத்திற்கு குறைவிருக்கப் போவதில்லை என்பதையே இந்த அமைச்சரின் வீடியோ பதிவு உணர்த்துகிறது.

 https://youtu.be/0qbFOzOzOLs



அந்த் காணொளிக் காட்சியை இது வரை பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து விடுங்கள்.

குடித்திருந்தவரை பேச வைத்தார்களா?

இல்லை

குடிக்க வைத்து பேச வைத்தார்களா?

 

ஜெ வின் ஆன்மாதான் சொல்ல வேண்டுமோ?



முதலில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். 

ஜெ சமாதியில் நாற்பது நிமிடம் ஆடாமல் அமர்ந்திருந்து ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் மேல் குவிக்க வைத்ததும் அதன் பின்பு அளித்த பேட்டியும் பன்னீர் அடித்த மிகப் பெரிய சிக்ஸர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 

பன்னீரின் பின்னே இருந்து பாஜக இயக்குகின்றது என்பதற்கு கவர்னரின் தலை மறைவையும் அடுத்த வாரம் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் என்ற அறிவிப்பையும் நம்மால் சொல்ல முடியும்.

பாஜக பாரம்பரியப்படி எச்.ராசா போன்றவர்கள் ஓ.பி.எஸ்ஸை ஆதரிப்பது போல காண்பித்துக் கொள்ள சுனா.சாமி சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார்.

பாஜக விற்கும் பன்னீரின் அதிரடிக்கும் சம்பந்தம் கிடையாது என்றுதான் சசிகலா  சொல்கிறார். பாஜக காரணமாக இருக்கலாம் என்று சொல்லக் கூட அவர்  தயங்குகிறார்.

ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார், அவரும் இவரைப் பார்த்து சிரித்தார் என்று உப்பு சப்பில்லாமல் ஏதேதோ சொல்கிறாரே தவிர மத்தியரசு பற்றி வாய் திறக்க அவர் தயாராக இல்லை. எங்களுக்கும் பன்னீருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஸ்டாலினும் சொல்கிறார்.

அப்படியானால் பன்னீரை இயக்குவது யார்?

ஜெ வின் ஆன்மா வந்துதான் பதில் சொல்ல வேண்டுமோ? 

அப்படி வந்து சொன்னால் அப்பல்லோவில் நடந்தது என்ன என்பதையும் கேட்டு சொல்லுங்கப்பா. 

ஆனால் ஒன்று சசிகலா வகையறாக்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 

Tuesday, February 7, 2017

இந்த சந்தைக்கடையில அவரு என்னத்தை பேச?

ஓ.பி.எஸ் தியானம் ஏதோ மர்மத்தின் வெளிப்பாடுதான். தன் மீது கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஊடகக்காரர்கள் இப்படி சந்தைக்கடை மாதிரி சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுத்தால் அவர் என்னத்தை பேசுவார்?

கொஞ்சம் அமைதியா இருந்து அவரை பேச விடுங்கப்பா.


இன்று தமிழகத்தின் சாலைகளெங்கும் . . . . . .










தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் சென்றவர்கள் ஒரு காட்சியைக் கண்டிருக்கலாம். கண்டபடியே அதனை கடந்தும் சென்றிருக்கலாம். இவர்களுக்கு வேறு வேலை கிடையாது என்று சிலர் மனதுக்குள் அலுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

தமிழகத்தின் விவசாயிகள் பிரச்சினைகளுக்காக, வறட்சியை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தற்கொலையெனும் கொடிய தீர்வை நோக்கி விவசாயிகள் நாடாமல் தடுத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும்  இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தின்  காட்சிகள் அவை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு முன்பாகவும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் விவசாயிகளுக்காக மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு போராட்டமென்பது வெறும் ஒரு வார விழா அல்ல. தொடர்ந்து கொண்டிருக்கும் சுவாசத் துடிப்பு.

“இவர்களுக்கு வேறு வேலை கிடையாது” என்று அலுத்துக் கொண்டிருந்தவர்கள் யாராவது இதைப் படித்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்காக சில வார்த்தைகளை சொல்லியாக வேண்டும்.

ஆம். மார்க்சிஸ்டுகளுக்கு பின்வரும் முக்கிய வேலைகள் கிடையாது.

அரசியல் என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்டு லஞ்சம், கமிஷன் எல்லாம் வாங்கி பிழைப்பு நடத்தும் வேலை கிடையாது.

மதத்தின் பெயரிலும் கடவுளின் பெயரிலும் மக்களை ஏமாற்றி அவர்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுகிற அபாய வேலை கிடையவே கிடையாது.

ஜாதிய உணர்வுகளை தூண்டி விட்டு ஆதிக்கம் செய்கிற வேலை கிடையாது.

அரசியல் போர்வை போர்த்திக் கொண்டு சேர்த்து வைத்த மூலதனத்தை பாதுகாக்கிற, அதிகரிக்கிற வேலை கிடையாது.

தலைவர்களின் கால்களில் வீழ்ந்தே கிடக்கிற மானம் கெட்ட வேலை கிடையாது.

வெறியைக் கிளப்புகிற எரிச்சல் மூட்டும்  வேலைகளும் கிடையாது.

இப்படிப்பட்ட முக்கியமான வேலைகள் ஏதுமில்லாத  காரணத்தால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இந்நாட்டின்  உழைப்பாளி மக்களுக்காக கவலைப்படுகிறது. கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடுகிற்து. பல சமயங்களில் காவல்துறையின் கொடூரத் தாக்குதல்களில் அடி வாங்கி மண்டை உடைந்து மருத்துவமனையிலும் சேர்க்கப்படுகிறது.

பின் குறிப்பு : மேலே உள்ள படங்கள் மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கமாகச் சொல்லும். கீழே உள்ள படங்கள் இன்று வேலூரில் நடந்த மறியல் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை.








தீர்ப்பு - ரொம்ப எதிர்பார்க்காதீங்க



கவர்னரால் பதவியேற்பு தள்ளி வைப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு என்ற செய்திகளால் கடைசி நிமிட மாற்றம் வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு சிலருக்கு உள்ளது.

தசாவதாரம் படத்தில் கமல் சொன்னது போல "தீர்ப்பு இப்படி வந்தா நல்லா இருக்கும்"  என்ற கதைதான்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் அந்த அமைப்பை தாங்கிப் பிடிப்பதாகத்தான் நீதித்துறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கங்கே இளைப்பாறல்கள் போல வேண்டுமானால் சில தீர்ப்புக்கள் வரலாம். 

பேரங்களை இறுதிப்படுத்துவதற்கான அவகாசம் போல தெரிகிறது. அது முடிந்த பின் விக்கிரமன் படத்து பாசக்குடும்பம் போல "இனி எல்லாம் சுகமே" என்று மத்தியில் மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பாடும் காட்சியை நாமெல்லாம் தரிசிக்கலாம்.

ஆகவே சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி எல்லாம் ரொம்ப எதிர்பார்க்காதீங்க.

 

Monday, February 6, 2017

லண்டன் டாக்டர் வராமல் இருந்திருக்கலாம்




சில சமயங்களில் அதி புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்துக் கொண்டு செய்கிற செயல்கள் எல்லாம் கடைசியில் எதிராகப் போய் விடும். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத வடிவேலு போல ஆகி விடும்.

ஜெ இறந்து எவ்வளவோ நாள் ஆகி விட்டது. அவர் அப்பல்லோவில் இருந்த காலம் முதல் இன்று வரை எல்லாம் மர்மம்தான்.

சசிகலா நேற்று அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக தயாராகிக் கொண்டிருக்கிறார். இன்று லண்டர் டாக்டர் பேட்டி கொடுத்து ஜெ மரணம் இயற்கையானது என்று சான்றிதழ் தருகிறார்.

ஜெ வின் மரணம் மர்மமானது என்று சந்தேகத்தில் இருந்தவர்களைக் கூட அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நம்ப வைத்த பெருமை இன்றைய லண்டன் டாக்டரின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கே உண்டு.

தன் மீதான அதிருப்தியை இன்னும் அதிகப்படுத்தி விட்டார் சசிகலா.