மேலே படத்தில் உள்ளவர் ராதிகா யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த டென்னிஸ் வீராங்கனை.
அவரை இரண்டு நாட்கள் முன்பாக அவரது அப்பா தீபக் யாதவ் சுட்டுக் கொன்று விட்டார்.
காரணம் என்ன?
டென்னிஸ் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மூலம் டென்னிஸ் பயிற்சிப் பள்ளி மூலமும் அவருக்கு பணம் குவிகிறது.
சமூக வலைதளங்களிலும் அவருக்கு லைக்குகள் குவிகிறது.
பெண்ணின் பணத்தில் பிழைப்பு நடத்துபவன் என்று கிராமத்தினர் கிண்டல் செய்ய, வலைதள செல்வாக்கு பொறாமையை வளர்க்க, தந்தையே மகளை சுட்டுக் கொன்று விட்டு இப்போது சிறையில் . . .
நாலு பேர் சொல்வதைக் கேட்டு நம்ம வீட்டு முடிவுகளை எடுப்பதன் விளைவுதான் இந்த கொலை.
மனதில் ஊறிப் போன ஆணாதிக்க சிந்தனை மகளையும் கூட பலி வாங்குகிறது. மாநிலத்தின் பிற்போக்குச் சிந்தனையும் ஒரு காரணி. பல வருடங்களாக பாஜக திணித்த பிற்போக்கு இது . . .
No comments:
Post a Comment