Friday, October 30, 2015

பாகிஸ்தானில் அல்ல பட்டாசு, இங்கேதான்




பாஜக வை தோல்வி பயம் கவ்விக் கொண்டிருக்கிறது. மோடியின் மோசடி வித்தைகள் பீகாரில் எடுபடாது என்ற அச்சத்தில் வெறியூட்டும் பேச்சுக்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களுக்காக இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கப் போகிறார்கள் என்று மோடி கிளப்பிய பீதியை யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதனால் நேற்று அமித் ஷா பேசுகையில் "இங்கே பாஜக அரசு அமையாவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அப்படி ஒரு நிலையை ஏற்படுத்துவீர்களா?" என்று சம்பந்தமே இல்லாமல் பாகிஸ்தானை பீகார் தேர்தலில் இழுத்துள்ளார். 

அமித் ஷா விற்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பீகாரில் உங்கள் ஆட்சி அமையாவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்களா என்று எனக்கு தெரியாது. இங்கே நாங்கள் இந்தியாவில் ஜனநாயகத்தை  நேசிக்கிற, மக்களை நேசிக்கிற, ஒற்றுமையை விரும்புகிற, அமைதியை நாடுகிற அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். 

பீகாரில் உங்களுக்கு கிடைக்கும் பின்னடைவு உங்களின் தோல்வியின் துவக்கம்.

இந்தியாவிற்கு தேவைப்படுகிற நல்லதொரு மாற்றத்தின் அடையாளம்.

ஆகவே நாங்கள் கண்டிப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடுவோம்.

7 comments:

  1. அரசியலில் எதனையும் எதிர்கொள்ளும் துணிவு தேவை.

    ReplyDelete
  2. பாகிஸ்தானை வைத்து தேவையே இல்லாமல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அதாவது வெறியூட்டுகிறார்களாமாம்...

    பாகிஸ்தானை இந்திய இஸ்லாமியர்கள் கைகழுவி பல ஆண்டுகளாகியும், இவர்கள் இன்னும் பாகிஸ்தானை வைத்தே அரசியல் நடத்துகிறார்கள். கேவலம்!

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  4. பட்டாசுகள் ரெடியாக வாங்கி வைத்துகொள்வோம்

    ReplyDelete
  5. நல்லா கொளுத்தி போட்ராங்கையா.

    கோ

    ReplyDelete
  6. நீங்க எல்லாம் பட்டாசு கொளுத்தவேண்டி வந்தா, அப்படி பட்டாசு கொளுத்தி கொண்டாடும் போது தமிழனின் ஆரோக்கியம், தமிழகத்தின் தூய்மையான சுற்று புறசூழல் கெடுவதை கவனத்தில் எடுங்க.

    ReplyDelete