Tuesday, October 13, 2015

கறுப்புச்சாயம் பூசப்பட்டது மோடியின் முகத்தில்தான்http://images.indianexpress.com/2015/10/kulkarni1.jpg?w=654?w=599

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சுதேந்திர குல்கர்னி முகத்தில் சிவசேனை குண்டர்கள் கறுப்புச்சாயத்தை பூசி அசிங்கப்படுத்தி உள்ளனர்.

ரௌடியிசமே வழிமுறையாக உள்ள கட்சி சிவசேனா. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மும்பையில் விளையாடக் கூடாது என்று மைதானத்தை சேதப்படுத்தியவர்கள். தங்கள் தலைவர் மரணத்தின் போது “இவர் ஒன்றும் மிகப் பெரிய தியாகியல்லவே” என்ற உண்மையைச் சொன்னதற்காக இரண்டு இளம் பெண்களை சிறையிலடைத்தவர்கள், முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் பிறகு பீகார், உ.பி மாநில மக்களுக்கும் எதிராகவும் குண்டாந்தடியை தூக்கியவர்கள். பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சிக்கு எதிராக சமீபத்தில் மிரட்டல் விடுத்தவர்கள். குண்டர்கள் மட்டுமே தொண்டர்களாக இருக்கிற கட்சி இவ்வாறு செய்ததில் எந்த வியப்பும் இல்லை.

முன்னாள் பிரதமருக்கு நெருக்கமான ஒருவரையே, அதுவும் இவர்களின் கூட்டணிக் கட்சியில் முக்கிய இடத்தில் இருந்தவரை இவர்களால் இப்படி இழிவு படுத்த முடியுமென்றால் சாதாரண மக்களை என்ன பாடு படுத்துவார்கள்?

எங்கிருந்து வந்தது இந்த தைரியம்? யார் கொடுத்த தைரியம்?

பகுத்தறிவுக் கொள்கைகளை பேசுபவர்கள் கொல்லப்படுவார்கள்.

மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கொல்லப்படுவார்கள்.

மந்திரி பிரதானிகள் வெறிப் பேச்சு பேசுவார்கள்.

ஆட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள், இந்தியக் கொடியின் நிறத்தை மாற்று என்பார்கள். இட ஓதுக்கீடு வேண்டாம் என்றும் சொல்வார்கள்.

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னனின் ரீ மேக்காக இந்தியா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கையில் உலகம் சுற்றும் வாலிபனாக ஒரு நாளைக்கு நான்கு முறை உடை மாற்றி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் பிரதமரின் கள்ள மௌனம் கொடுத்துள்ள தைரியமின்றி வேறொரு காரணமும் உண்டோ இந்த அராஜகத்திற்கு?

மோடி அரசின் மீது பூசப்பட்டுள்ள கறுப்புச் சாயம் இது.

என்ன அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் கறுப்புச் சாயத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். வேறு அப்பாவி என்றால் உயிரையே எடுத்து முகத்தை ரத்தத்தால் மூடியிருப்பார்கள், தாத்ரியில் கொல்லப்பட்டவரைப் போல.


 1 comment:

 1. பசுவின் பிள்ளைகளே?
  கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
  ..
  ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
  **************
  .
  பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
  .
  பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
  .
  மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே படித்து சிந்தியுங்கள் <<<

  .

  ReplyDelete