Thursday, October 22, 2015

இந்த படத்தைப் பார்த்தாவது புரிந்து கொள்ளுங்கள்




சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு படம் இது.

கொல்கத்தாவில் ஒரு துர்கா பூஜை பந்தலில்  எடுக்கப்பட்ட படம். மத வேறுபாடு இல்லாமல் கடவுள் என்ற அடிப்படையில் ஒரு முதியவர் வழிபடுகிற காட்சி இது.

இதுதான் உண்மையான இந்தியா.

சாதாரண் மக்கள் யாரும் மதரீதியில் தங்களை பிரித்துக் கொண்டு நிற்பதில்லை. சக மனிதர்களை நேசிக்கத்தான் செய்கிறார்கள். மாற்று மதத்து பண்டிகைகளை கிண்டல் செய்வதில்லை. கொழுக்கட்டைகளும் கேக்குகளும் பிரியாணியும் சாதாரண மக்கள் மத்தியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

மதத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற  தீய சக்திகளை மக்களை மனிதர்களாகப் பார்க்காமல் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர், நாத்தீகர்  என்று பிரித்து அடையாளம் கொடுக்கின்றனர். 

சுரண்டலுக்கு எதிராக தொழிலாளியாக அணி திரள வேண்டிய உழைப்பாளி மக்களை பிரித்து வைக்கவும் முயல்கிறது.

அந்த முயற்சி வெற்றி பெறாது என்பதே என் திடமான நம்பிக்கை.

  

3 comments:

  1. மதத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற தீய சக்திகளை மக்களை மனிதர்களாகப் பார்க்காமல் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர், நாத்தீகர் என்று பிரித்து அடையாளம் கொடுக்கின்றனர்.
    உண்மை உண்மை

    ReplyDelete
  2. in kolkatta the labour exploits the capitalists, That is why no industry survives there. You can contain capitalist from exploiting the labour by legistlation. but the labour does not come under any law. He thinks he is law unto himself

    ReplyDelete