Wednesday, October 28, 2015

சதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல


இன்று சென்னை சென்றிருந்தேன். கடந்த முறை கோயம்பேட்டில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பஸ் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட அனுபவத்தால் இந்த முறை ரயில் செல்ல முன்பதிவு செய்திருந்தேன். திரும்பி வரும் போது சதாப்தி எக்ஸ்பிரஸில்தான் முன்பதிவு கிடைத்தது. சதாப்தியில் பயணம் செய்வது இதுதான் முதல் முறை.

மிகச் சரியாக சென்னையில் 05.30 மணிக்கு புறப்பட்ட மூன்றாவது நிமிடம் தண்ணீர் பாட்டில் வந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு தட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதிலே ஒரு துண்டு அல்வா, ஒரு மிக்ஸர்  பாக்கெட், ஒரு சமூசா, பிரெட் சாண்ட்விச் இருந்தது. அதிலே அல்வாவையும் சமூசாவையும் சாப்பிட்டு விட்டு மற்றதை பையில் வைத்துக் கொண்டேன்.

இது முடிந்து பத்து நிமிடத்திற்குப் பிறகு காபியும், டீயும் வந்தது. ரயிலில் காபியோ டீயோ சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  அடுத்து ஒரு இருபத்தி ஐந்து நிமிடம் இருக்கும், தக்காளி சூப் சீட் சீட்டாக வந்தது. அதையும் வேண்டாம் என்று நான் சொல்லி விட்டு அக்கம்பக்கம் பார்த்தேன். என் இரு புறமும் உட்கார்ந்திருந்தவர்கள், வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

சரி, நம்மால்தான் முடியலை. அவர்களாவது வீண் செய்யவில்லையே என்று தோன்றியது. 

நல்ல வேளை, அடுத்த உணவு வருவதற்குள் காட்பாடி வந்து விட்டது. இறங்கும் முன்பு கவனித்தேன்.

தட்டுக்களில் ஏதோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பின் குறிப்பு : அதிசயிக்கக் கூடிய விதத்தில் அல்வா, சமூசா, பிரெட் சாண்ட்விச் (வீட்டிற்கு வந்து சாப்பிட்டேன் என்பதை சொல்லாவிட்டால் யாராவது அனானி விளக்கம் கேட்பாரல்லவா?) எல்லாமே நன்றாக இருந்தது.

ஒளி வீசும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று இரண்டு இந்தியா இருப்பது போல சதாப்திக்கு ஒரு உணவு, சாதாரண ரயிலுக்கு ஒரு உணவு போல. 

13 comments:

  1. எங்கள் அனுபவமும் அதுதான்

    ReplyDelete
  2. சதாப்தி எக்ஸ்பிரஸ் உபசரிப்பை சொல்லி அதில் பயணிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள்.
    //ரயிலில் காபியோ டீயோ சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால்.....//
    காரணத்தை அறையில் இருந்து நான் யோசித்ததில் கண்டுபிடித்தது நீங்க போடும் காபி டீ சுவையானது என்பதே

    ReplyDelete
    Replies
    1. அதற்கான காரணத்தை நாளை நினைவுபடுத்துகிறேன்

      Delete
  3. உண்மைதான் நண்பரே
    இதுதானே உண்மையான இந்தியா

    ReplyDelete
  4. in Shathabhi express ticket rate includes the food charges also.
    when u pay more or right amount for the food, u ll get good food.
    when u pay less for the food always u ll get pathetic only.
    in normal trains they charge Rs 35 for lunch, u ll get the food for that amount only.

    did karl marx did not told this concept to you?
    will u do the same quality of service if ur salary is cut by half?

    ReplyDelete
    Replies
    1. Have you recovered just Coma? Where do you get lunch for Rs 35 in which train? Don't try to divert the issue of discrimination in quality. Your dragging of Karl Marx and cut in salary is sheer absurd which does not deserve a reply when you don't have the guts to come with your identity

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. வக்கிர புத்தி கொண்ட கோழைகள் மட்டும்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். If I don't bother about the perverted comment in my page, who else can?

      Delete
  5. அட! உண்மையிலே நல்லா இருந்துச்சா?!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவே நல்லா இருந்தது

      Delete
  6. அருமையான பதிவு! சதாப்தியில் நானும் பயணித்திருக்கிறேன். அருமையான அனுபவம் நேரம் இருந்தால் எனது பதிவையும் படித்துப் பாருங்கள்.

    http://senthilmsp.blogspot.com/2015/03/1.html

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வருகிறேன்

      Delete
  7. இந்த அனுபவம் எனக்கு, ஆக்ரா டு டெல்லி பயணத்தில் கிடைத்தது, மகிழ்ச்சியான பயணம்.

    காட்பாடியில் இருந்து தொடர்ந்து கொஞ்சம் தூரம் சென்று அடுத்த உணவையும் ஒரு கை பார்த்து விட்டு ஜோலார்பெடையில் இறங்கி அங்கிருந்து சதா ற்றின்ல வந்திருக்கலாமே? நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டீங்களே.

    கோ

    ReplyDelete