இது எனது நேற்றைய அனுபவம்.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி பின் இரவு எட்டு மணி
போல வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்க
வெளியே கிளம்பினேன்.
என்ன புழுக்கம் என்று புலம்பிக் கொண்டே வண்டியைக்
கிளப்பினேன்.
கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர்தான் போயிருப்பேன்.
சாலையின் நடுவே ஸ்கேல் வைத்து கோடு போட்டது
போல மழை பெய்த அடையாளம் தொடங்கியது. அந்தப்
பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் வரை அரை மணி நேரம்
நன்றாக மழை பெய்துள்ளது. இன்னொரு பகுதியிலோ
அந்த சுவடே இல்லை.
இது போன்ற நிலையை வேலூரில் மட்டும் அடிக்கடி
பார்க்கலாம்.
சில வருடங்கள் முன்பாக வேலூரில் இசையமைப்பாளர்
(சங்கர்) கணேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்றை
நடத்தினோம். திறந்த வெளி அரங்கு நிகழ்ச்சி அது.
ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி நடந்து களை கட்டிய
நேரத்தில் கடுமையான மழை வந்து நிகழ்ச்சியை
பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.
இதிலே மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அரங்கிற்கு
அந்தப்பக்கம் அரை கிலோ மீட்டர், இந்தப்பக்கம் அரை கிலோ
மீட்டர் வரைதான் மழை பெய்திருந்தது.
நிகழ்ச்சிக்கு வந்து மழையில் தொப்பமாக நனைந்து
போனவர்கள் அரை கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த
ஹோட்டல்களில் நுழைந்த போது அவர்களை அங்கிருந்தவர்கள்
பார்த்த பார்வை இருக்கிறதே, அது வேறு கதை....

உலகின் பல பாகங்களில் இவ்வாறு நடைபெறுவதுண்டு, குறிப்பாக கோடை மழைக் காலங்களில் இவ்வாறு ஆங்காங்கே சிறு மழை பொழிவதுண்டு. உண்மையில் இயற்கையின் விளையாட்டில் இதுவும் வியப்பே.
ReplyDelete