Saturday, June 1, 2013

சச்சின் மவுனத்தை உடைச்சிட்டாராம்...


தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் அவரது

முகநூல் பக்கத்தில் எழுதியதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

நன்றி தோழரே
 




மவுனத்தை உடைச்சிட்டாராம்...
=========================

ஒரு வழியாய் வாயைத் திறந்துட்டாரப்பா சச்சின் டெண்டுல்கர். ஐபிஎல் சூதாட்ட விவகாரங்கள், கைது நடவடிக்கைகள், பெரும்புள்ளிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்த சச்சின் நேற்று (மே 31) கருத்துச் சொல்லியிருக்கிறார். என்ன சொன்னார் தெரியுமா?

“எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது.”

இதைச் சொல்வதற்குத்தான் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டாராமா நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்?

“அதிகாரிகள் சரியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களோடு நானும் சேர்நதுகொள்கிறேன்,” என்றும் சொல்லியிருக்கிறார்.

அதெப்படிங்க, யாருக்கும் கொஞ்சமும் வலிக்காமல், எதையும் சிறிதும் விமர்சிக்காமல், தனது நட்சத்திர பீடத்திற்கு எப்வித இடையூறும் ஏற்பட்டுவிடாமல் “கருத்து” சொல்ல முடிகிறது? அந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கோபத்தில் சேர்ந்துகொள்ள மாட்டாராமா?

வேடிக்கை என்னவென்றால், இந்த அளவுக்கு இவர் சொல்லியிருப்பதற்கே, “மவுனத்தை உடைக்கிறார் சச்சின்” என்பதாக ஊடகங்கள் தலைப்புக் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கின்றன!

இவர்தான் இப்படியென்றால், கேப்டன் எம்.எஸ். தோனி, மூன்று நாட்களுக்கு முன் தம மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அவர்கள் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாகக் கேட்ட எந்தக் கேள்விக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார். எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும், எந்தக் கேள்விக்குப் புன்னகைக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரிகள் ஆணையிட்டுக்கொண்டிருந்தார்கள். பிரிட்டனின் பிர்மிங்காம் நகரில் நேற்று அந்தநாட்டுச் செய்தியாளர்கள் மறுபடியும் இதுபற்றிக் கேட்டபோது, “உரிய நேரம் வரும்போது கருத்துக்கூறுவேன்” என்று சொல்லியிருக்கிறார் இந்திய அணி கேப்டன் (இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அணி அல்ல என்கிறபோது இந்திய அணி என்று சொல்லலாமோ? பிசிசிஐ அணி என்றும், பிசிசிஐ அணியின் கேப்டன் என்றும். சொல்வதுதானே சரியாக இருக்கும்?). “உரிய நேரம்” எப்போது வரும்?

பேட்டி கொடுப்பதற்கும் நல்ல நெட் பிராக்டிஸ் எடுத்திருப்பார்கள் போலும். இவர்கள் இளைய தலைமுறையினருக்கு நல்ல முன்னுதாரணங்களாக முடியுமா? ஆட்டக்களத்தில் தங்களது தனித்திறன்களைக் காட்டி அசத்துகிற இப்படிப்பட்ட சாதனையாளர்களின் நாவைக் கட்டிப்போடுகிற சக்தி எதுவோ?

2 comments:

  1. வேறென்ன , கள்ள பணம் தான் ...
    எளிய மக்களின் நேரத்தையும், பணத்தையும் கொள்ளை இடுபவர்கள் இவர்கள்.
    எவ்வளவு மனித சக்தி வீணாகிறது இந்த கிரிகெட் விளையாட்டில்..
    மக்களை மடையர்களாகவே வைத்திருக்க பாடுபடும் ஊடகங்கள் ..
    வேறென்ன விளையும் ..வேதனயும் சோதனையும் தவிர ..
    இதில் நூல் கூட்டத்துக்கு சிறப்பான இடம் உண்டு .

    ReplyDelete
  2. \\ஆட்டக்களத்தில் தங்களது தனித்திறன்களைக் காட்டி அசத்துகிற இப்படிப்பட்ட சாதனையாளர்களின் நாவைக் கட்டிப்போடுகிற சக்தி எதுவோ?\\ பணம்...........பணம்...........பணம்...........

    ReplyDelete