வேலூரின்
தற்போதைய பரபரப்புச் செய்தி இதுதான்.
நேற்று
கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திமுக வைச் சேர்ந்த வார்ட்
கவுன்சிலர் ஆர்.பி.ஈ.சசிகுமார் என்பவர் , வேலூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அம்மா
உணவகம் சென்று அங்கே வரிசையில் நின்றிருந்த அனைவருக்காகவும் அவரே கலைஞர் பிறந்த
நாளுக்கு நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கித் தரேன் என்று சொல்லி டோக்கன் வாங்கி
கொடுத்துள்ளார்.
கலைஞர் பிறந்த
நாளை சிக்கனமாகக் கொண்டாட திமுகவினர் கூட ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தைத்தான்
பயன்படுத்த வேண்டியுள்ளது.
எப்படி அவர்
செய்யலாம் என்று ஒரே வாதப் பிரதி வாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு
எங்கே சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் என்ன? இதில் ஒன்றும் தவறில்லை என்பது என்
கருத்து. ஒரு வேளை அதிமுகவினர் யாராவது செய்திருந்தால் அவர்கள் இத்தனை நேரம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். ஆனால் திமுகவில் அப்படி ஒன்றும் நடக்காது.
ஏனென்றால் தலைவர் அவ்வளவு பலவீனமாகப் போய்விட்டார். இன்னொரு காரணம் இந்த
கவுன்சிலரின் அப்பா, திமுகவின் வேலூர் ஒன்றியச்செயலாளர், அஞ்சாநெஞ்சன் என அழைக்கப்படும்
ஆர்.பி.ஏழமலை.அஞ்சா நெஞ்சன் என்பதற்கு திமுக மொழியில் என்ன அர்த்தம் என்பது
தெரியுமல்லவா?
No comments:
Post a Comment