சூரியன் உக்கிரமாய்
கொதிக்கும் வேளையில்,
வியர்வை ஆறு
பெருக்கெடுத்து ஓடுகையில்,
தாகத்தில் தவிக்கும்
ஒவ்வொரு நொடியும்
வாராதா மழை என்று
ஏங்கிய உள்ளம்,
வீட்டில் வசதியாய்
அமரும் நேரம்,
சில்லென்ற காற்றோடு
பெய்திடும் மழையை
வேண்டும், வேண்டும் என
உற்சாகமாய் ரசித்து
அனுபவித்த உள்ளம்,
கால்கடுக்க காத்திருந்து,
பணிகளெல்லாம் பாதிக்கையில்
ஏன் இந்த மழை என்று
எரிச்சல்படும்
இரட்டை உள்ளம்
ஏனோ எனக்கு?
கொதிக்கும் வேளையில்,
வியர்வை ஆறு
பெருக்கெடுத்து ஓடுகையில்,
தாகத்தில் தவிக்கும்
ஒவ்வொரு நொடியும்
வாராதா மழை என்று
ஏங்கிய உள்ளம்,
வீட்டில் வசதியாய்
அமரும் நேரம்,
சில்லென்ற காற்றோடு
பெய்திடும் மழையை
வேண்டும், வேண்டும் என
உற்சாகமாய் ரசித்து
அனுபவித்த உள்ளம்,
கால்கடுக்க காத்திருந்து,
பணிகளெல்லாம் பாதிக்கையில்
ஏன் இந்த மழை என்று
எரிச்சல்படும்
இரட்டை உள்ளம்
ஏனோ எனக்கு?
ஒன்றின் அருமையை மற்றொன்றில்
ReplyDeleteஇருந்துதானே உணரமுடிகிறது
மனம் இரு நிலை கொண்டால் இது சாத்தியம்
இரண்டு மனம் இருந்தால் இது நிச்சயம் சாத்தியம்
இல்லைதானே ?
மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
அருமையான கவிதை..
ReplyDelete