கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வருகின்றேன்.
நேற்றும் நேற்று முன் தினமும் எங்கள் வேலூர் கோட்டத்தின்
வெள்ளி விழா ஆண்டு நிறைவு இருபத்தி ஆறாவது பொது மாநாடு.
வெள்ளி விழா ஆண்டை ஒட்டி எங்களது கோட்டத்தின் இயக்கங்கள்
குறித்த ஒரு நூல் ஒன்று எழுதினேன். அதன் வெளியீடும்
இம்மாநாட்டில் நிகழ்ந்தது. மீண்டும் பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
புத்தக வெளியீட்டு நிகழ்வின் புகைப்படம் கீழே
புத்தகப் பணிகள், மாநாட்டுப் பணிகள் காரணமாக வலைப்பக்கம்
வர முடியவில்லை. எழுத வேண்டும் என்று நினைத்தும் நேரம்
இன்மையால் சில விஷயங்களை எழுத முடியவில்லை.
விரிவாக எழுதுவது இப்போது பொருத்தமாக இருக்காது என்றாலும்
மனதில் தோன்றிய கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
கடந்த வியாழன் அன்று ஆனந்த விகடனில் பாரதிராஜா
கேள்வி பதில்களில் மணிவண்ணன் பற்றி மிகவும் தரக்குறைவாக
எழுதியிருந்தார்.
அப்போது கேட்க நினைத்த கேள்விகள் இப்போது.
காதல் ஓவியம் படத்திற்கு வசனம் எழுதும் போதே சொல்லாமல்
கொள்ளாமல் தனியாக இயக்கப் போன மணிவண்ணனை
எதற்காக மீண்டும் கொடி பறக்குது படத்தில் நடிக்க கூட்டிக்
கொண்டு வந்தீர்கள்? அரண்மனை ஒப்புக்கொள்ளாத ஒருவரை
ஏன் மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வந்தீர்கள்? உங்கள்
அரண்மனை பாழடைந்து போகாமல் இருக்கத்தானே?
பொதுவாகவே கொள்கை தடுமாற்றம் கொண்டவர் என்று
உங்களுக்கு ஒரு "நல்ல " பெயர் உண்டு. உங்கள் கதாநாயகன்,
கதாநாயகி களை அடித்து வேறு " நல்ல " பெயர் வாங்கியவர்.
இந்த பதில் மூலம் ரசிகர்கள் மனதில் கீழிறங்கி போய்விட்டீர்கள்
என்பது தெரியுமா உங்களுக்கு?
மணிவண்ணன் இறப்புச்செய்தி அறிந்த பின்பு மனதிற்குள்ளாவது
உங்களின் தகாத பதிலுக்காக வருத்தம் கொண்டீர்களா?

வெளியில் வந்த பின்னர் வார்த்தைகளுக்கு நாம் அடிமை. சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான் . பாரதி ராஜா சொன்ன வார்த்தைகளே அவரை திருப்பி அடிக்கும் ஒருநாள்.! நாகரீகம் இல்லா காட்டு மிராண்டி அந்த ஆள்.
ReplyDelete