Sunday, December 9, 2012

ரிக்கி பாண்டிங் மனிதன், சச்சின் டெண்டுல்கர் ??????????






மூன்று இன்னிங்ஸ் சரியாக விளையாடவில்லை, இனியும் தான் அணியின் நீடிப்பது சரியில்லை  என்று ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன்  ரிக்கி பாண்டிங்க்   ஒரு மனிதன்.

புகழின் உச்சியில் இருக்கும் போதே ஓய்வைத் தேடிச்சென்ற பாண்டிங்கை பாராட்டும் போதே  ஒரு கேள்வி இயல்பாய் எழுகிறதே....

வரிசையாக பல போட்டிகளில்  மோசமாக விளையாடினாலும் அந்த மோசமான ஆட்டம்  அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்த போதும்  என்னுடைய இடத்தை  விட மாட்டேன் என்று  அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கரை எப்படி அழைப்பது?

இந்திய கிரிக்கெட்டின் தெய்வம் என்று  பலரும் பாய்ந்து வருவார்கள்.
ஒரு பழமொழி நினைவுக்கு  வருகிறது.

அரசன் அன்று கெடுப்பான் தெய்வம் நின்று கெடுக்கும்.

இந்த தெய்வம் அணியில் நின்று  இளைஞர்களின்  வாய்ப்பைக் கெடுத்துஇந்திய கிரிக்கெட்டை  நின்று கெடுக்கிறதோ?

பின் குறிப்பு : இப்படி ஒரு பதிவு எழுதப் போகிறேன் என்று இன்று மதியம் உணவு இடைவேளையின் போது சொன்ன போது கடுமையான விவாதம் வந்தது. அதே போல் இன்னொரு எதிர்ப்பும் எதிர் பாராத ஒருவரிடமிருந்து வந்தது.

தோழர் ஒருவர் மிகக் கடுமையாக ஆட்சேபித்தார். சச்சின் விரும்பும் வரை விளையாட வேண்டும். அவரை ஓய்வு பெறச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நேற்று கூட எழுபது ரன் அடித்துள்ளார். அவர் சரியாக விளையாடவில்லை என்று எப்படி சொல்கின்றீர்கள், அடுத்த உலகக் கோப்பை வரை அவர் விளையாட வேண்டும். அப்போதுதான் அதிகமான உலகக் கோப்பையில் விளையாடியவர் என்ற சாதனையையும் அவர் படைப்பார் என்று சொல்லி அவர் ஆட்சேபித்தார். அதற்கு கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இன்னொரு தோழரே பதிலளித்து விட்டார்.

பத்து, பதினைந்து மேட்சுகளுக்கு ஒரு முறை ஒழுங்காக விளையாடி அணியில் இடத்தைத் தக்க வைப்பதே அவருக்கு வழக்கமாகி விட்டது. இவர் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பத்து பேரோடு விளையாட முடியுமா என்று கேட்டு விவாதத்தை நிறைவு செய்து விட்டார்.

இரண்டாவது எதிர்ப்பு என் மகனிடமிருந்து மிகக் கடுமையாக வந்தது. சச்சின் சரியாக விளையாடவில்லை. ஓய்வு பெறாவிட்டாலும் கூட தற்காலிகமாக அணியிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு தரலாம். மற்ற எத்தனையோ வீரர்களை நினைத்தால் ஒதுக்கி விடும் கிரிக்கெட் வாரியம் சச்சினுக்கு மட்டும் இத்தனை வாய்ப்பு தருவது நியாயமில்லை என்பது அவனது கருத்து.

ஆனால் இந்த பதிவை அவன் எதிர்த்தது வேறு இரண்டு காரணங்களுக்காக.

கிரிக்கெட்டையே பிடிக்காத, கிரிக்கெட்டை திட்டிக் கொண்டிருக்கும் உனக்கு அணியில் யார் விளையாடினால் என்ன என்பது அவன் கேள்வி.

இன்னொன்று சச்சினோடு ஒப்பிடும் அளவிற்கு ரிக்கி பாண்டிங் அப்படி ஒன்றும் பெரிய யோக்கியமான ஆளல்ல. ஸ்போர்ட்மேன்ஷிப் சிறிதும் இல்லாத ஒரு நபர். பல போட்டிகளில் அவரது எதிர் மறைப் போக்கு வெளிப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஒப்பீடு சரியல்ல என்பது அவனது வாதம்.

கிரிக்கெட் ரசிகர்கள், உண்மையான ஆர்வலர்கள் இது பற்றி என்ன சொல்கின்றனர்?

4 comments:

  1. விடும்யா ராமன்! விலையாடலைனா என்ன? F.D.I கு ஆதரவா ஒரு ஒட்டுகூடியிருக்கும் !.சவம் விளையாடியே ---ட்டும் ! ---காஸ்யபன்

    ReplyDelete
  2. We have to understand the huge money invested by corporates on S.T. I feel he cannot retire now, even if he wishes to.

    ReplyDelete
  3. பெரியவர் சச்சின் மேல் உங்களுக்கென்ன இப்படியொரு காண்டு ?....அவர் வயதுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்.... அவரை சச்சின் என்று அழைப்பதையே வன்மையாகக் கண்டிக்கிறேன்....மரியாதையாக சச்சிர் தெண்டுல்கர் என்று அழைக்க வேண்டும்....ர் ஐ விட்டுட்டீங்களே . பத்துப் பேரு வயசுப்பசங்களா இருக்குற வீட்டுல ஒரு பெரியவர் இருந்தா என்ன தப்பு சாமி ?

    ReplyDelete
  4. I THINK, THESE DEMANDS OF QUITTING OF CRICKET BY SACHIN IS RAISED ONLY AFTER HE BECAME AS MP(CONGRESS). HE IS THE HONOUR OF INDIAN CRICKET. HE WILL RETIRE SOON AS YOU WISH. BECAUSE, HE KNOWS ONLY CRICKET AND NOT POLITICS.

    ReplyDelete