ஆக உலகம்
அழியும் என்று கணிக்கப்பட்ட 12.12.12 அன்று உலகம் அழியவவில்லை.
ஆனாலும் இந்த தேதிக்கு மிக மிக அதிகமான முக்கியத்துவம் பெரும்பாலானவர்களால் கொடுக்கப் பட்டது.
நான் எழுதப்
போவது நேற்றைய தினத்தைப் பற்றி அல்ல. இருபத்தி நான்கு வருடத்திற்கு
முன்பு ( 12.12.1988) நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி.
அப்போது நான்
நெய்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊழியர் குடியிருப்பு ஒதுக்குவது தொடர்பாக ஊழியர்களுக்கும் மற்ற ஒரு
பிரிவினருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்கக்
கூடிய ஒரு பிரச்சினைதான்.
கிளை அளவில்
முடியாவிட்டால் கூட கோட்ட அளவில் தீர்ந்திருக்கும். ஆனால் அப்பிரச்சினையை முடித்து
வைத்து கதாநாயகனாக மாற நினைத்த ஒரு உயர் அதிகாரி நெய்வேலிக்கு வந்தார்.
பேச்சுவார்த்தை நடக்கும் போது அவரது அணுகுமுறை மிகவும் எதிர்மறையாக இருந்தது. முரட்டுத்தனமாக
மோசமான சில வார்த்தைகளை அவர் சொல்கிற போது ஊழியர்கள் கொந்தளித்து விட்டோம்.
அந்த
கொந்தளிப்பை அது இன்னொரு தரப்பு தங்களுக்கு எதிரானதாக கருதி நேரடியாக மோதுவது என முடிவெடுத்து விட்டனர்.
அவர்கள் தங்களுக்கு ஆதரவாக முரட்டு உருவம் கொண்ட ஆட்களை கொண்டு வந்து விட்டனர்.
நிலைமையை
சமாளிக்க காவல்துறையை அழைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. தொலை தொடர்பு
வசதிகள் மேம்படாத அந்த காலத்தில் கோட்டத்தில் உள்ளவர்களுக்கு தந்தி மூலம்
தெரிவிப்போம் என்று நினைத்து நானும் இன்னொரு தோழரும் எதிரே இருந்த தபால் அலுவலகம்
செல்கிறோம்.
தந்தி
கொடுத்து விட்டு வெளியே வந்தால், அலுவலகத்திற்கு வந்த அந்த முரட்டு உருவங்கள்
இப்போது அஞ்சல் நிலையத்திற்கு வெளியே. இப்போது கையில் தடிகளும் சைக்கிள்
செயின்களும். மீண்டும் தபால் அலுவலகத்திலேயே தஞ்சம் புகுந்து அலுவலகத்திற்கு தகவல்
தெரிவித்தோம்.
அதற்குள்
அலுவலகத்திற்கு காவலர்கள் வந்திருந்தனர். அவர்கள் தபால் அலுவலகம் வர போலீஸ்
பாதுகாப்போடு அலுவலகம் திரும்பினோம்.
சாதாரணமான ஒரு
பிரச்சினை, ஒரு மனிதரின் தவறினால் மிகப் பெரிய பிரச்சினையாகி, அதிலிருந்து புதுப்புது பிரச்சினைகள் வெடித்து மீண்டும்
அமைதி திரும்ப சில ஆண்டுகள் ஆனது.
தபால்
அலுவலகத்திற்கு வெளியே பார்த்த அந்தக் காட்சி இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அந்த
பதட்டத்தை குறைக்க அன்று பற்ற வைத்த சிகரெட் இன்னும் என்னை ஆக்கிரமிப்பு செய்து விலக முடியாது என அடம் பிடிக்கிறது.
Two errors - 1. according to mayan calander, the world ends on 21.12.2012, not 12.12.2012.
ReplyDelete2. cigaretea - neenga thaan pidikkireenga, vittu vittaal athu tholainth pogum.
athu sari, sk magendiran meeting pathi eathum bloggavillaiye, neengal ezhuthinaal, maruppum-varuttathaiyum solla ninaithean.
thozharae appothu naan kooda neyveli vanthirunthaen. paraparappaana antha naatkal marakka koodiyaivaiyaa.
ReplyDeleteதோழர் சாந்தலட்சுமி, உங்கள் வருத்தமும் உணர்வுகளும் புரிகிறது. உரிய முறையில்
ReplyDeleteதெரிவித்து விட்டேன்.