தேசிய வளர்ச்சி கவுன்ஸில்
கூட்டத்தில் நேற்று ஜெயலலிதா வெளி நடப்பு செய்தது பற்றி அங்கங்கே விவாதம் நடக்கிறது.
எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும்
அதற்கு ஒரு நேர வரையறை இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால் ஒதுக்கப்படும் நேரம் என்பது கொஞ்சம் பொருத்தமாக
இருக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சி, பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ஒரு கூட்டத்தில்
ஒரு மாநிலத்திற்கு வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் என்பது மோசமான ஒன்று. வெறும் சடங்கிற்கான
கூட்டத்தை நடத்த மட்டுமே மத்தியரசு விரும்பியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
இதிலே ஜெ பேசுகிற போது பத்து
நிமிடம் ஆனதும் மணியடித்ததும் அடுத்தவரை பேச அழைத்ததும் நிச்சயமாக அசிங்கப்படுத்திய
வேலைதான்.
இதற்கு அவர் வெளிநடப்பு
செய்தது என்பது மிகவும் சரியான நடவடிக்கை. மத்தியரசை கண்டிக்கிறேன் என்பதை பதிவு செய்து
விட்டு வெளிநடப்பு செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
No comments:
Post a Comment