புதுவைக்கு ஒரு பணியாக சென்று
திரும்பி வருகையில் நாங்களாகவே தேடிக் கொண்ட வில்லங்கம் இது.
நாங்கள் வந்த வாகனத்தில்
தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஏதேனும் சி.டி உள்ளதா என்று ஓட்டுனரைக் கேட்க அவர்
பேய்ப்படம் ஒன்று உள்ளது. பார்க்கிறீர்களா என்று கேட்டு அவர் அதைப் போட்டார். பாதியில்தான்
அந்த சி.டி தொடங்கியது.
ஒரு அடர்ந்த காட்டில் ஒரு
தம்பதியை நான்கு பேர் துரத்துகிறார்கள், துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான்
பிரச்சினை என்று தொடர்ந்து பார்த்ததுதான் தவறாகி விட்டது.
ஆபாசம், வக்கிரம், வன்மம்,
அபத்தம் என அத்தனையையும் கலக்கி அதை ஒரு படம்
என தயாரித்துள்ளார்கள். இவ்வளவு கேவலமான அந்த படத்தின் பெயர் என்ன? இயக்கிய அதி மேதாவியின்
பெயர் என்ன என்று டைட்டில் பார்க்க அந்த சி.டி யை மீண்டும் போட்ட போதுதான் அந்த அதிர்ச்சி
கிடைத்தது.
அந்த படத்தின் பெயர் ‘ பொல்லாங்கு
‘.
இப்படி ஒரு படம் வந்ததோ,
வந்து போனதோ யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் இயக்குனர் பெயர் வந்தபோது நொந்தே போய்
விட்டேன்.
இப்படி ஒரு அபத்தக் களஞ்சியத்தை
இயக்கிய அந்த மகானுபாவனின் பெயர் காந்திமார்க்ஸ்.
இரண்டு மகத்தான தலைவர்களை
இதை விட வேறு யாராலும் இழிவு படுத்த முடியாது.
ஐயா காந்திமார்க்ஸ் அடுத்த
படம் ஒன்னு ஒழுங்கா எடு
இல்லை உன் பெயரையாவது மாத்திக்க
படம் வெளிவந்து இரண்டாவது நாளே திரையரங்கில் முதல் வரிசையில் பார்த்தவன் நான்...
ReplyDeleteபதிவு கூட போட்டிருக்கிறேன்... நேரம் இருப்பின் படிக்கவும்...
ReplyDelete