Saturday, December 15, 2012

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் கதை என்ன தெரியுமா?





கோவா மாநிலத்தில் வாழும்  மீனவர்கள் பற்றிய கதையாம். இதை நான் எப்படி கண்டு பிடித்தேன் தெரியுமா?

இந்தப் படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடல் கேட்டேன். அவரது பெரும்பாலான பாடல்கள் போல அந்தப்பாடலும் புரியவில்லை. வார்த்தைகள் சிதைக்கப்பட்டிருந்தன. அதனால்தான் அவருக்கும் வைரமுத்துவிற்கும் ரசாயனம் நன்றாக உள்ளது போலும்.

உன்னிப்பாக கவனித்தால் போனா போகிறது என்று “குண்டு மீன் புடிச்சுட்டு வாரேன்” என்று ஒரு வரி புரிகிறது. மீனவர்கள் பற்றி தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. அதிலே பாடல்களும் வந்திருக்கிறது.

அவை ஒரளவு மீனவர்களின் வாழ்க்கையோடு பொருந்தி இருக்கும். ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகச் சந்தை நாயகர் அல்லவா? அதிலும் இயக்கம் யார் மணி ரத்னம் அல்லவா? அக்ரஹாரம் போல தலித் காலனியும் அரண்மனை போல மலைவாழ் மக்கள் வீடுகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு படம் பிடிக்கிற யதார்த்தவாதி அல்லவா?

அதனால்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் பற்றிய படத்தின் பாடல் ஏதோ கோவா மாநிலத்து பாடல், போர்ச்சுகல் நாட்டு இசை போல ஒலிக்கிறது.....

என்ன செய்ய? எல்லாம் உலகமயம் செய்யும் வேலை....

என்ன கொடுமை சார் இது?

பின் குறிப்பு : விரைவில் எதிர் பாருங்கள்

தமிழ் திரை இசையின் அடையாளத்தை சிதைத்த குற்றவாளி ஏ.ஆர்.ரஹ்மான்

5 comments:

  1. Saar, intha Raman enra kosu thollai thaangalai.

    ReplyDelete
  2. இவுகளுக்கு கவிஞர் டைமன் முத்து வக்காலத்து. தமிழை கொலை பண்றதுக்கு இசையமைப்பாளனும், பாடகனும் போட்டி போடுறான். அதுக்கு டைமன் முத்து அய்யா நடுவர்.

    ReplyDelete
  3. நானாவது கொசு, இவர்களெல்லாம் ?

    தைரியமில்லாத அனானி ?????

    மனுச ஜன்மும் கிடையாது, மிருக ஜன்மமும் கிடையாது.

    எதுக்குமே லாயக்கில்லாத ..............

    ReplyDelete
  4. தமிழ் திரை இசையின் அடையாளத்தை சிதைத்த குற்றவாளி ஏ.ஆர்.ரஹ்மான்

    இந்த கருத்தை தமிழ்ப் பாடல்கள் கேட்கும் எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் . இன்று மற்ற மொழி பேசுபவர்களையும் தமிழ் பாடல்கள் கேட்க வைக்கிற திறமை ரகுமானுக்கு நிரம்பவே இருக்கிறது.

    ReplyDelete
  5. திரு சுதாகர் கணேசன், அவை தமிழ்த் திரைப்பட பாடல்கள், தமிழ்ப் பாடல்கள் அல்ல. பல்வேறு பணிகள் காரணமாக நேரம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்

    ReplyDelete