Sunday, December 30, 2012

அவசியம் படியுங்கள் - சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

தீக்கதிர் நாளிதழில் வந்த இந்த செய்தியை அவசியம்
படியுங்கள். 

கடந்த 24 அன்று இரவு வெண்மணி தியாகிகள் அஞ்சலிக்காக
திருவாரூக்கு நாங்கள் வேலூரிலிருந்து சென்ற போது
இரவு பத்தரை மணி இருக்கும். நாங்கள் சென்று பத்து
நிமிடங்கள் கழித்தே தோழர் குருமூர்த்தி வந்தார்.

காலையில் அவரைப் பார்க்க முடியவில்லை. அப்போதுதான்
அந்த துயர செய்தியை அறிய முடிந்தது. அந்த துயரம்
வேறு ஒருவருக்கு வாழ்வில் வெளிச்சம் அளித்துள்ளது
என்பது நெகிழ்ச்சியான செய்தி.

தோழர் குருமூர்த்தி அவர்களுக்கும் அவர்களின் 
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த
தாயை சிரம் தாழ்த்தி வணங்கிறேன்.



இப்போது பத்திரிக்கைச் செய்தி


ஜே.குருமூர்த்தியின் மாமியார் உடல் தானம் 

 

 
சென்னை, டிச.29-நீண்ட கால தீக்கதிர் வாசகரும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க செயலாளர் ஜே. குரு மூர்த்தியின் மாமியாருமான ஏ. ருக்மணி அம்மாள் (87) கடந்த செவ் வாயன்று (டிச. 25) அதிகாலையில் காலமானார். 

அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ ஆய்வுக் காகஅரசிடம்ஒப்படைக்கப்பட்டது. அவரது கண்கள் அரசு கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டன.குருமூர்த்தியின் பணி ஓய்வு விழாவின்போது அவரும் அவரது மனைவி ரமாவும் தங்களது உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப் பதிவு செய்வதாக அறி வித்தனர். 

அதன் தாக்கத்தில் பின்னர் ருக்மணி அம்மாள் தமது கண்களையும், உடலையும் தானம் செய்ய முன்வந்து, எழுத்துப்பூர்வமாகவும் ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி அவரது மறைவை அடுத்து உடன் தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு கள் செய்யப்பட்டன.சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறுவியல் பிரிவு தலைமை இயக்குனர் சுதா சேஷய்யன் உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள, அன்று மதியம் 12 மணிக்கு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ருக்மணி அம்மாள் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

அன்று கிறிஸ்துமஸ் விடுப் பில் இருந்தபோதிலும், ஆய்வகப் பொறுப்பாளர் மேத்யூஸ் நேரடியாகத் துறைக்கு வந்து இந்த உடல்தானம் நடை முறைகளுக்கு ஒத்துழைத்தது குறிப்பிடத் தக்கது.

ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவரான ருக்மணி அம் மாள் தீக்கதிர் வாசகராக, முற்போக்குச் சிந்தனைகளின் ஆதர வாளராக இருந்துவந்தார். அவருக்கு கோவிந்த ராஜன், ராம சுந்தர் ஆகிய மகன்களும் ரமா என்ற மகளும் உள்ளனர்.

நன்றி - தீக்திர் 30.12.2012

2 comments:

  1. ருக்மணி அம்மாள் அவர்களின் நற்செயலுக்கு எனது வீரவணக்கம்.

    ReplyDelete