Friday, December 21, 2012

அவசியமற்ற அந்த தலைவர்களின் சிலைகள் எதற்கு? அகற்றி விடுங்கள் மருத்துவர் ஐயா.....

நேற்று திண்டிவனம் புதுவை சாலையில் தைலாபுரம்
தோட்டம் வழியாக சென்ற போது தோன்றிய எண்ணம்
இது.

மருத்துவர் ஐயாவின் தைலாபுரம் தோட்டத்தின் முன்பாக
மாமேதை காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர்,
தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகள் உள்ளது.



உழைக்கும் மக்களை ஒன்றுபடச் சொன்ன 
மார்க்ஸின் சிலையை 
ஜாதியாக பிரிந்து நிற்கச் சொல்லும் 
நீங்கள் ஏன் வைத்துள்ளீர்கள்?

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக 
தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட
அண்ணல் அம்பேத்கரின் சிலையை
தலித் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக
பிரகடனம் செய்துள்ள நீங்கள் வைத்துள்ளது
எவ்வளவு மோசமான விஷயம்?

ஜாதிய மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்த
தந்தை பெரியாரின் சிலையை 
ஜாதிய மறுப்புத் திருமணங்களை 
நாடகம் என்றும் சொல்லும் நீங்கள்
வைத்திருப்பது முரண்பாடில்லையா?

உங்களுக்கு இவர்கள் யாருடைய 
கொள்கையும் அவசியமில்லை.

பிறகு அவர்களின் சிலைகள் மட்டும் எதற்கு?

அகற்றி விடுங்களேன்.

அந்த மரியாதையையாவது அளியுங்கள்...
 

3 comments:

  1. உழைக்கும் மக்கள் ஒன்று சேரவேண்டும் என்பதற்கும் - உழைக்கும் மக்களுக்காக கட்சி நடத்துகிறேன் என்று கூறிக்கொண்டு சிலர் கட்டைப்பஞ்சாயத்து, பணப்பறிப்பில் ஈடுபடுவதை எதிர்ப்பதற்கும் எங்கே முரண்பாடு இருக்கிறது?

    பாமக தலித் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பது உங்கள் பார்வைக் கோளாறு. தலித் இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துவதை மட்டுமே பாமக எதிர்த்தது.

    20 வயதுக்கு மேல்தான் பெண்கள் திருமணம் முடிக்க வேண்டும். அதற்கு முன்பு பெண்கள் படிப்பும் தொழில் திறனும் பெற வேண்டும் என்று கூறிய தந்தை பெரியாரின் கருத்துதான் மருத்துவர் அய்யாவின் கருத்தும்.

    பெரியார், அம்பேத்கர், மார்க்சினை வழிகாட்டிகளாகக் கொள்ளக்கூடாது என்று உத்தரவிட ஒருவருக்கும் அதிகாரம் இல்லை. உங்களுக்கும்தான்...

    ""சாதிக்கலவர கொலைகளும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியும்!""

    http://arulgreen.blogspot.com/2012/12/Violence-against-Vanniyars.html

    ReplyDelete
  2. திரு அருள் - காமெடி பண்ணாதீங்க

    ReplyDelete
  3. //அவர்களின் சிலைகள் மட்டும் எதற்கு?//
    நியாயமான கேள்வி.

    ReplyDelete