Monday, December 17, 2012

பெண்களுக்கு இப்படியும் ஒரு அநீதி......

இன்று  படித்த ஒரு தகவல்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உலக கபாடி
போட்டிகள் நடந்துள்ளது. ஆடவர் மற்றும் பெண்கள்
ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியாவே வெற்றி 
பெற்றுள்ளது.

இது உண்மையிலேயே மகிழ்ச்சியான தருணம்.
ஆனால் இந்த வெற்றி குறித்து எந்த ஒரு 
ஊடகமும் வழக்கம் போலவே முக்கியத்துவம்
தரவில்லை.

நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.

சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட
இரண்டு ஆண்களுக்கு ட்ராக்டர் பரிசு 
கொடுத்துள்ளவர்கள், 

சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட
இரண்டு பெண்களுக்கோ வெறும் 
மோட்டார் பைக்தான் பரிசு....

ஏன் இந்த பாரபட்சம்?

இங்கே மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களிலும்
இப்படித்தான் நடக்கிறது விம்பிள்டன் உட்பட.

இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போமே...
 

1 comment:

  1. Also note the title prize is Rs.2 Crore for men and Rs.51 Lakhs for women, which will be increased to Rs.1 Cr from next year.
    Namma oorla ponnungala padikkavaikkirade kammi, vilayaada anuppuvathu innum kammi, award/reward-galum athea pola kammithaan.

    ReplyDelete