Wednesday, July 11, 2012

பதவி மோகத்தில் தடுமாறும் தா.பாண்டியன்

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ஆர்
எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது. 

தா.பா விற்கு எனது கேள்வியும் ஒன்று உண்டு.
அது கட்டுரையின் முடிவில்.
 

தோழர் தா.பாண்டியன் பேச்சு யாருக்கு உதவிடும்?


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசிய விபரம் தினகரன் நாளிதழில் 10.7.2012 அன்று வெளிவந்துள்ளது. அந்தப் பத்திரிகையில்:“கம்யூனிச கொள்கைக்கு எதிராக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்படுகின்றனர். கேரளாவில் அக் கட்சியினர் கொலை செய்ய அஞ்ச மாட்டார்கள். அவர்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது” - என்று பேசியுள்ளார். அவரது பேச்சை நேரடியாக கேட்டவர்கள் இன்னும் கடுமையாகப் பேசியதாகத் தெரிவிக் கிறார்கள்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரங்களை தோழர் தா. பாண்டியன் அப்படியே வழிமொழிந்துள்ளார். இவை அவதூறுகள் என்பதையும், கம்யூனிஸ்டு களைக் குறிவைத்து நடத்தப்படும் விரிந்து பரந்த சதியின் ஒரு பகுதி என்பதையும் தோழர் தா.பா. அறியாதவரல்ல. இத்த கைய அவதூறுகளும், பொய்களும், புனைவுகளும் கம்யூனிஸ்டுகள் மீதும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும் ஆரம்ப காலம் தொட்டே ஏவப்பட்டு வந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளை, அவர்களின் கொள்கைகளை எதிர்கொள்ள தார்மீக திராணியற்றோர் வரலாற்றின் வழி நெடுகி லும் இத்தகைய அணுகுமுறைகளை கடைப்பிடித்தே வந்துள்ளனர். 


இவர்களின் தாக்குதலுக்கு மார்க்சிய மூலவர்களும் தப்பவில்லை என்பதை தோழர் தா.பா. அறிவார்.மக்கள் வாழ்வாதாரத்தை சூறையாடும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரத் தாண் டவத்திற்கும் எதிராக சமரசமின்றி தொடர்ச் சியாகப் போராடிக் கொண்டிருப்பது இடது சாரிக் கட்சிகளே. இந்தக் காரணத்தினால் தான் தங்கள் கொள்கைகளை நியாயப் படுத்த முடியாதவர்கள் கம்யூனிஸ்டுக ளின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் அவதூறுகளைப் பரப்பி இந்தப் போராட் டங்களை மழுங்கடித்து விட முடியும் என்று நினைக்கிறார்கள்.இடதுசாரிகளின் வலுவான தளமான மேற்குவங்கத்தைக் குறிவைத்து வலது அதிதீவிர சக்திகள் முதல் இடது அதிதீவிர வாதிகள் வரை ஒன்றிணைந்து நின்றார் கள். அவதூறுகள் பொய்களோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. மார்க்சிஸ்ட் டுகள் கொலைகாரர்கள் என்று உரக்கச் சொல்லிக் கொண்டு, மார்க்சிஸ்ட் மற்றும் இடது முன்னணி ஊழியர்களை கொன் றார்கள். கொன்று கொண்டே இருக்கிறார்கள்.இப்போது இவர்கள், தங்கள் கவ னத்தை கேரளாவை நோக்கி திருப்பி யிருக்கிறார்கள்.


மதவெறியர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்களால் மார்க்சிஸ்ட் கட்சி யினர் தொடர்ச்சியாக கொலை செய்யப் பட்டு வருகின்றனர். ஆனால் ஆர்.எம்.பி. கட்சித் தலைவர் டி.பி. சந்திரசேகரன் கொடூர படுகொலையை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்த எதிரிக ளும், அரசியல் எதிரிகளும், வர்க்க எதிரிக ளும் மார்க்சிஸ்ட் கட்சியை கொலைகாரக் கட்சி என சித்தரிக்க முயல்கிறார்கள். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், கேரள மாநிலக் குழுவும் அப்படுகொலையை வன்மை யாகக் கண்டித்ததோடு, கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண் டுமென்றும், விசாரணையை நியாயமாக நடத்த கட்சி அனைத்து வகையிலும் ஒத் துழைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் கள். ஆனால் கட்சியின் எதிரிகள் அவதூறு களை புதிது புதிதாக வீசிக் கொண்டேயி ருக்கிறார்கள். பெரு நிறுவன ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டே இருக்கின்றன.

இந்தச் சூழலில் தோழர் தா.பா. அதே அவதூறை சொல்லியிருப்பது நியாயம் தானா என்று கேட்க விரும்புகிறோம்.
இதற்கு முன்னரும் கூட தா.பா. மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான கடுமையான கருத்துக் களைப் பேசியிருக்கிறார்.

 மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு,“நவீன தாராளமயமாக்கல் மற் றும் ஏகாதிபத்திய தாக்கத்தை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளால் மட்டுமே உறுதிமிக்க போராட்டத்தை நடத்த முடி யும் என்பதால் இடதுசாரி ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயமாகும்.” - என்று வலியுறுத்துகிறது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஏ.பி. பர தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநில மாநாட்டில் ஆற்றிய உரையில்;“இரண்டு கட்சிகளையும் ஒற்று மைப்படுத்த பத்தாயிரம் விஷயங்கள் இருக்கிற போது, பிளவுபடுத்துகிற ஓரிரு விஷயங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்” - என்று பேசியிருக்கிறார். 

அதே காலத்தில் நடைபெற்ற மார்க் சிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத்தும் இருகட்சிகளின் ஒன்றுபட்ட செயல்பாட்டை வலியுறுத்திப் பேசியுள்ளார்.உண்மையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவுபடுத்துகிற பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டுமென்று தோழர் ஏ.பி. பரதன் இடதுசாரி ஒற்றுமைக்கான வழிகாட்டு தலை வழங்கியிருக்கிற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல், சித் தாந்த வர்க்க எதிரிகளின் அவதூறுகளை தோழர் தா.பா. வழிமொழிவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டோடு உகந்ததா?

இடதுசாரிகள் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்; இந்திய மக்களின் வளமான எதிர்காலத்திற்கு அது முன்நிபந் தனை என்கிற புரிதலோடு தோழர் தா.பா. வின் பேச்சு அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி -  தீக்கதிர்

தா.பா விற்கு எனது கேள்விகள்.

உங்கள் கட்சி  தளி  எம்.எல்.ஏ, ஓடி வந்த ராமசந்திரன் மீது
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால்
சி.பி.ஐ கூட கொலை காரக் கட்சியா?

உங்களுக்கு எதிராக உங்கள் கட்சியில் உருவாகியுள்ள
கொந்தளிப்பை திசை திருப்ப ஏன் மார்க்சிஸ்டுகள்
மேல் பாய்கின்றீர்கள். 

எம்.பி சீட் அப்போதுதான் கிடைக்குமா?

மார்க்சிஸ்டை திட்டினால்தான் மேடமின் அருட்பார்வை
கிடைத்திடுமா?

  

3 comments:

 1. dear raman

  i was under the impression, you are all reading and updating the out side world/nation news regularly (idle communist/comreat) but here you are proving like kalaga thondar. your own communist person in kerala in open stage agreed the committed murders who worked against party. then only the news came to news line. the same quoted by mr pandiayan and as usual you are all try to hide/burry the truth.

  well done.

  seshan

  ReplyDelete
 2. திரு சேஷன்,

  இடுக்கி மாவட்டச் செயலாளர் தோழர் மணி பெசியதை யாரும் ஏற்கவில்லை. அரசியல் தலைமைக் குழு கண்டித்துள்ளது. தா.பா பேச்சு விஷமத்தனமானது. இடதுசாரி ஒற்றுமையை தனது பதவி மோகத்திற்காக குலைப்பவர் அவர். மார்க்சிஸ்ட் கட்சியை சாடும் அவர் தனது கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரனை பாதுகாக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றார். தவறிழைத்தவர்களை மார்க்சிஸ்ட் கட்சி என்றும் பாதுகாப்பதில்லை.

  ReplyDelete
 3. இடுக்கி மாவட்டச் செயலாளர் தோழர் மணி பெசியதை யாரும் ஏற்கவில்லை.

  Good joke....

  There is a proverb in Tamil .. "marumakal udaicha....."

  ReplyDelete