Monday, July 9, 2012

அந்த ஆணுக்கு என்ன தண்டனை? இரக்க சிந்தனை உள்ளவர்கள் படிக்க வேண்டாம்
 மேலே உள்ள புகைப்படங்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர்
காபூலுக்கு  அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டது.

தகாத உறவு என்று குற்றம் சுமத்தப்பட்டு அந்த பெண்ணை
தாலிபன் கூட்டம் பல பேர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு
கொன்று விட்டனர். அந்தப் பெண் துடித்து இறக்கும் போது
கூடி இருந்தவர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்துள்ளனர்.

இந்த அரக்கத்தனம் நிகழ்த்தியவர்களுக்கு சில கேள்விகள்...

அந்தப் பெண் தகாத உறவு கொண்டிருந்ததாக கொன்று 
போட்டீர்களே, படு பாவிகளே, அந்தப் பெண்ணோடு உறவு
வைத்திருந்த அந்த ஆணை என்ன செய்தீர்கள்?

அந்த தவறுக்கு அவனும்தானே காரணம்?

அவனுக்கு தண்டனை கிடையாதா?

உங்கள் கறுப்பு சட்டத்தில் பெண்களுக்கு மட்டும்தான்
கற்பு, ஒழுக்கம் போன்றவற்றை போதிப்பீர்களா?

ஆண்கள் அவிழ்த்து விட்ட  கோயில் மாடுகளாய் திரியலமா?

அமெரிக்காவிற்கான கேள்வி:

பல ஆண்டுகளாக ஆப்கானில் உள்ளீர்களே, உங்களால்
தாலிபன் கூட்டத்தை அடக்க முடியவில்லையா?
இத்தனை வருடம் என்ன கிழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
கோடிக்கணக்கான டாலர்கள் கொட்டியும் உங்களால்
எதுவும் கிழிக்க முடியாது என்றால் என்ன இழவிற்காக
அங்கே இன்னும் குப்பை கொட்டுகின்றீர்கள்?

12 comments:

 1. பெண்ணை மட்டும் தண்டிப்பது கொடுமையானது.

  ReplyDelete
 2. //ஆண்கள் அவிழ்த்துவிட்ட கோயில் மாடுகளாய்த் திரியலாமா?//

  தலிபான்களுக்கு உறைக்கவா போகிறது?

  பயனுள்ள பதிவு.

  பாராட்டுகள்.

  ReplyDelete
 3. ரமன் அவர்களே!நஜிபுல்லாவை அழிக்க தாலிபானை (மாணவர் இயக்கம்) உருவாக்கினவர்கள் அமெரிக்கர்கள்.சொவியத் செல்வாக்கைக் குறைக்க அவர்கள் செய்த சதி .இப்போதும் தாலிபான்களோடு ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஆப்கான் அரச பரம்பரையா,தலிபானா,இரண்டும் செர்ந்த கூட்டாட்சியா என்பது முடிவாகவில்லை.---காஸ்யபன்.

  ReplyDelete
 4. அண்ணே, நாங்க அல்லாவால் இயற்றப் பட்ட ஷரியத் சட்டத்தை பின் பற்றுபவனுங்க எங்க சட்டத்தில் இப்படி தான் இருக்கு
  சும்மா பொத்திகினு போ

  ReplyDelete
 5. பல ஆண்டுகளாக ஆப்கானில் உள்ளீர்களே, உங்களால்
  தாலிபன் கூட்டத்தை அடக்க முடியவில்லையா? reason USSR communist

  ReplyDelete
 6. அனாமதேய அனானி அண்ணே, இப்படி அனாதயமா வந்து நீங்க ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆளுனு அம்பலமாகி விட்டீங்களே! இப்படி ஒரு மத வெறி பிரச்சாரம் செய்யும் இந்திய தாலிபான் நீங்கதான்.

  ReplyDelete
 7. திரு குணா, தவறான புரிதல். சோவியத் யூனியன் ஆதரவோடு இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதுதான் தாலிபன் மற்றும் ஒசாமா பின் லேடன். இப்போது சோவியத் யூனியனும் கிடையாது, ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சியும் கிடையாது. அமெரிக்காவால் தாலிபனை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்

  ReplyDelete
 8. அவர்கள் அப்படி என்ன தவறாக செய்துவிட்டார்கள் ??? அவர்கள் என்ன இயேசுவா உங்களில் குற்றம் செய்தவர் கல் எறியலாம் என்று சொல்ல ...

  அவர்களின் ஷரியாவில் ஒழுக்கம் கெட்ட பெண்ணைக் கொல்ல வேண்டும் என சொல்லி இருக்கு அதனை செய்கின்றார்கள் ...

  அவள் கெட்டுப் போனாளா ? கெடுத்தவன் யார் ? என்பதெல்லாம் தேவையற்றது ... !!!

  தாலிபான் மட்டுமல்ல குரானை முழுதும் நடைமுறைப் படுத்திய நாடுகளிலும் இதே நிலை தான் ... !!!

  ReplyDelete
 9. காட்டு மிராண்டிகள் ! தமிழ்மணத் தாலிபான்கள் ஒருத்தரைக் கூட காணோமே ?

  http://www.smh.com.au/world/woman-executed-by-taliban-on-trumped-up-adultery-charge-20120709-21r1r.html


  One of the Taliban says the Koran prohibits adultery. Killing the woman is "God's order and decree," he says. "If the issue was avenging deaths, we would beg for her amnesty. But in this case, God says, 'You should finish her."'
  He concludes by saying, "It's the order of God, and now it is her husband's work to punish her." Then someone else says, "Give him a Kalashnikov."


  Read more: http://www.smh.com.au/world/woman-executed-by-taliban-on-trumped-up-adultery-charge-20120709-21r1r.html#ixzz20DYBUKw0

  ReplyDelete
 10. திரு இக்பால் செல்வன், ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? கற்பு என்றால் அதை பொதுவில் வைப்போம் என பாரதி சொன்னது எல்லா மதத்தினருக்கும் பொதுவான நியாயமாக இருக்க வேண்டும். அவர்கள் செய்ததில் என்ன தவறு உள்ளது என்ற உங்கள் கேள்வி அதிர்ச்சி அளிக்கிறது

  ReplyDelete
 11. தகாத உறவு வைத்திருந்தால் உறவை முறித்துக் கொள்ள ஆண்-பெண் இருவருக்குமே உரிமை உண்டே.அது ஒன்றும் கொலை குற்றம் கிடையாதே.கடைசியில் மதம் என்கிற நிறுவனம் எதற்காக வந்ததே அதே அடிபட்டுப்போகிறது இந்த மதநிறுவனங்களால்.எந்த மதமும் இதற்கு விதிவிலக்கே அல்ல.
  விலங்குகள் தங்கள் இணைகள் வேறொன்றுடன் உறவு வைத்திருந்தால் தாக்கிக் கொல்லும்.அல்லது காயப்படுத்தும்.மனிதன் அதையே துப்பாக்கி கண்டுபிடித்து செய்கிறான் போலும்.

  ReplyDelete
 12. இந்த காட்டுமிராண்டிகள் இனி எப்போதும் திருந்தப்போவதில்லை.

  ReplyDelete