Wednesday, May 24, 2023

உன்னிடம் இருக்காதுதான் ஆட்டுக்காரா

 

ஆட்டுக்காரனின் ட்வீட் கீழே . . .



மாதச் செலவு எட்டு லட்ச ரூபாயை நண்பர்களிடம் வாங்கி பிழைப்பு நடத்தும் உன்னிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்க வாய்ப்பில்லை என்பது எங்களுக்கும் தெரியும் ஆட்டுக்காரன். உன்னைப் போன்ற தத்திக்கு மாதாமாதம் படியளக்கும் உன் பணக்கார தியாக  நண்பர்களை கேட்டுப்பார், அவர்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற உதவி செய். அதுதான் நீ அவர்களுக்கு செய்ய வேண்டிய செஞ்சொற்றுக் கடன். எப்படி மாற்றுவது என்ற கேடித்தனமெல்லாம் உனக்கே தெரியும். ஒருவேளை எக்ஸ்பர்ட் அட்வைஸ் தேவைப்பட்டால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை மாற்றிய பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் ஒருவரான அமித் ஷாவை கேட்டுக் கொள்.

 

Tuesday, May 23, 2023

டிஜிட்டலைஸேஷன் பவுசு இவ்வளவுதான் . . .

 


இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.  இதைப் படிக்கும் போது இன்னொரு கேள்வி மனதில் வந்தது. அது என்ன கேள்வி என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.


 
"On Friday, the RBI has said the total value of these banknotes in circulation has declined from Rs 6.73 lakh crore at its peak as on March 31, 2018 (37.3 per cent of Notes in Circulation) to Rs 3.62 lakh crore constituting only 10.8 per cent of Notes in Circulation on March 31, 2023." (இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 22, 2023)

 

மேலே உள்ள செய்தி கூறுவது இது தான்: 

 

1. 2018 மார்ச் 31 இல் புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டு களின் மொத்த மதிப்பு  ரூ 6.73  லட்சம் கோடி. இது அப்பொழுது புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 37.3 %. அப்படியானால், 2018 மார்ச் 31 இல் மொத்த பணப்புழக்கம் ரூ 6.73 x 100 / 37.3 = 17.96 லட்சம் கோடி ரூபாய்.

 

2.  2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ 3.62 லட்சம் கோடி. இது அன்றைய மொத்த பண புழக்கத்தில் 10.3 %. அப்படியானால் அந்த தேதியில் மொத்த பண புழக்கம் ரூ 3.62 x 100 /10.8 = 33.5 லட்சம் கோடி ரூபாய். 

 

3. அதாவது, 2018-2023 ஆகிய ஐந்து  ஆண்டுகளில்  பணப்புழக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ஆகியுள்ளது. 

 

ஆக, " எங்கள் ஆட்சியில் பொருளாதார பரிவர்த்தனைகள் அனைத்தும் அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகி வருகிறது, இனி ரூபாய் நோட்டுக்களே தேவை இல்லாமல் ஆகிவிடும்" என்ற சங்கி பிரச்சாரம் எவ்வளவு அபத்தமானது என்பதை இங்கே காணலாம்!

 

தலையாட்டி பொம்மைகள் என்று தெரிந்தே

 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். டிமோ திறந்து வைப்பது சரியல்ல, குடியரசுத் தலைவரை இழிவு படுத்தி விட்டார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கொதித்துள்ளார்.

ஆனால் இந்த கொதிப்பு ஜனாதிபதிக்கு இருக்கவே இருக்காது. தாங்கள் வெறும் தலையாட்டி பொம்மை என்பதை அறிந்தே அந்த பொறுப்பிற்கு இப்போதுள்ளவரும் முன்பிருந்தவரும் வந்தனர்.

பட்டியலினத்தவரையும் பழங்குடியினத்தவரையும் கௌரவப்படுத்தி உள்ளோம் என்று டிமோ சொன்னதெல்லாம் அவருடைய வழக்கமான ஜூம்லா என்று புரிந்து கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே கிடையாது. 

Monday, May 22, 2023

முட்டாள் சங்கிகளின் முட்டுக்களுக்கு

 



ரூபாய் 2000 நோட்டுக்கள் இனி செல்லாது என்ற அறிவிப்பிற்கு சங்கிகள் கொடுக்கிற முட்டுக்கள் இருக்கிறதே, முடியலை. தாங்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை ஒவ்வொரு முட்டிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சங்கிகளின் சில முட்டுக்களையும் அதற்கான என் எதிர்வினைகளையும் பார்ப்போம்.

முட்டு :  2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லவில்லை, அது புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுகிறது.

எதிர்வினை:  இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதால்தானே திரும்பப் பெறப்படுகிறது. வங்கிகளில் 30.09.2023 க்குள் செலுத்தி மாற்றிக் கொள்ளச் சொன்ன ரிசர்வ் வங்கி அதுவரை மக்கள்  மற்ற இடங்களில் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏன் சொல்லவில்லை? 30.09.2023 க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டை யாராவது வைத்திருந்தால் அந்த நோட்டிற்கு ஏதாவது மதிப்புண்டா? ஆக அது வெறும் செல்லாத நோட்டுதான்.எதற்கு வெட்டித்தனமான வார்த்தை விளையாட்டு?

முட்டு : ; CLEAN NOTE POLICY என்று அழுக்கு நோட்டுக்களின் சுழற்சியை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

எதிர்வினை : அடப்பாவிகளா! 2000 ரூபாய் நோட்டுக்களில் மட்டுமா அழுக்கு நோட்டு இருக்கிறது! டிமோ கலர் கலராக வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுக்களும்தான் அழுக்கோ அழுக்கு என்றுள்ளது. பிறகு ஏன் அதையெல்லாம் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறவில்லை. அழுக்கு நோட்டுக்களை திரும்பக் கொடுத்து விட்டு வேறு புதிய நோட்டுக்களையோ அல்லது வேறு மதிப்பிலான நோட்டுக்களை கொடுக்கலாமா! ஒட்டு மொத்தமாக 2000 ரூபாய் நோட்டுக்களையே திரும்பப் பெற வேண்டாமே!

முட்டு : கள்ள நோட்டுக்களை அச்சிடுவது எளிதாக உள்ளது என்பதாலும் இந்த முடிவு

எதிர்வினை :  கள்ள நோட்டு அடிக்க முடியாத என்றுதானே  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணம் சொன்னார்கள். ஒரு  ரூபாய் போட்டை கூட ஒழுங்காக அச்சடிக்க லாயக்கில்லாதவர்களுக்கு ஏன் ஆட்சி?

முட்டு : கறுப்புப் பணத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை. 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இப்போது சிக்கிக் கொள்வார்கள். 2000 நோட்டை அறிமுகப்படுத்தியதே கறுப்புப் பணம் உள்ளவர்களை தூண்டி அவர்களை பதுக்க வைத்து இப்போது வெளியில் கொண்டு வரத்தான்.

எதிர்வினை :  கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து சூரியனின் சூட்டில் அந்த வெண்ணை உருகி நெய்யாக வழியும் போது கொக்கின் கண்களை அந்த நெய் மூடும் போது கொக்கை பிடித்து விடலாம் என்று கொக்கை பிடிக்க யோசனை சொன்ன ஆளுக்கு டிமோ வை விட அறிவு அதிகம்.

முட்டு : முதல்வர் குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ள 30,000 கோடி ரூபாய்க்கு ஆப்பு வைக்கத்தான் இந்த முடிவே.

எதிர்வினை : ஆட்டுக்காரன் வெளியிட்ட தரகர் சங்கர் கொடுத்ததாக சொல்லப்பட்ட  ஆடியோ போலியானது என்று பிடிஆர் தியாகராஜன் சொன்னாலும் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கட்டும், அது உண்மையாகவே இருந்தாலும்  அந்த 30,000 கோடி ரூபாயை 2000 ரூபாய் நோட்டுக்களாகவே பதுக்கி வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதே! அது முட்டாள் டிமோவின் முட்டாள் தொண்டர்கள் என்பதற்கான சான்று.

முட்டு : கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இந்த நடவடிக்கைக்காக கதறுகிறார்கள். அரசின் முடிவை விமர்சிக்கிறார்கள்.

எதிர்வினை : 2000 ரூபாய் நோட்டுக்களாக கறுப்புப் பணம் உள்ள பெரும் பண முதலைகள் யாரும் கதறவில்லை. அதை  மாற்றும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். முன்பு கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததை புதிய வித பொருளியல் நடவடிக்கை என்று புளிச்ச  மாவு  ஆஜான் சொன்னது நினைவில் உள்ளது. நானெல்லாம் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது.  ஆனாலும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.

ஏன்?

1000 ரூபாய் நோட்டை செல்லாத  நோட்டாக்கி விட்டு 2000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தது ஒரு தேவையில்லாத ஆணி என்று அன்றே சொன்னேன். அந்த தேவையில்லாத ஆணியை இப்போது பிடுங்கும் போது “ நாங்கதான் அப்பவே சொன்னோம் கேட்டியா?” என்று இந்தியாவுக்கே தேவையில்லாத பெரிய ஆணியான டிமோவை கேட்கும் வாய்ப்பை எப்படி நழுவ விட முடியும்!

 

உலகத் தலைவராம்யா அவரு

 


டிமோ உலகத்துக்கே தலைவர் என்று சங்கிகள் பீற்றிக் கொள்ளும் நிலையில் ஜப்பான் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் டிமோ வை யாரும் கண்டு கொள்ளாத இந்த அவல நிலையை பின் வரும் இணைப்பைப் பார்த்து பரிதாபப்படுங்கள்

ஹிரோஷிமாவில் மோடியின் தனிமை




Sunday, May 21, 2023

ராஜீவ் காந்தி கொலையான அன்று.

 


அந்த இரவு நானும்  அன்றைய நெய்வேலி கிளைச்சங்கத் தலைவர் தோழர் கே.ராமலிங்கமும்  நெய்வேலி அமராவதி திரையரங்கில்   வீர பாண்டிய கட்டபொம்மன் (அன்று பார்த்தது ஐந்தாவது முறை) இரவுக் காட்சி  பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.


ஒரு அனிச்சை செயலாக நானும்  தோழர் ராமலிங்கமும் மறைந்த தோழர் விஸ்வேஸ்வராவும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு, ஹெச்.எம்.எஸ் என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.

அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.

அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.

அப்போதே அந்த பயம்!

மீள் பதிவு 

Saturday, May 20, 2023

டிமோ சொல்லாதாததால் செல்லாது

 


இந்தியப் பொருளாதாரத்தின் கறுப்பு நாளான 8, நவம்பர், 2016 அன்று தொலைக்காட்சியில் தோன்றி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பணம் ஒழிந்து புதிய இந்தியா பிறந்து விட்டது என்று அறிவித்து ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், கங்கனா ரணாவத் போன்ற பொருளாதார மேதைகளின் வரவேற்பு இல்லாமல்

ரிசர்வ் வங்கி அறிவித்த 2000 ரூபாய் செல்லாது 

என்ற அறிவிப்பு

செல்லாது.

வந்தே பாரத் ட்ரெயினுக்கு கொடியசைக்கச் செல்லும் டிமோ, இன்னொரு புதிய இந்தியாவின் பிரசவச் செய்தியை மட்டும் சொல்லாமல் இருப்பாரா என்ன!

ஆகவே 2000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு

செல்லாது, செல்லாது, செல்லாது 

பிகு: இதற்கும் முட்டாள் சங்கிகள் கொடுக்கும் முட்டுக்கள் இருக்கே, அது தனி. பிறகு எழுதுகிறேன்.