Thursday, November 17, 2022

ஆஜான் துப்பினா தொடைச்சுப்பார்.

 


நேற்று முகநூல் முழுதுமே ஆஜான் எனும் அறை கலனை (அதாங்க ஃபர்னிச்சர்)  சுக்கு நூறாக உடைத்தெறிந்த பதிவுகளாகவே  இருந்தது.

“ஃபர்னிச்சர் என்பதற்கு அறை கலன் என்ற வார்த்தையை நான்தான் உருவாக்கினேன். நான் தமிழுக்கு கொடுத்த கொடை அந்த வார்த்தை”

என்று மிகுந்த திமிரோடு பேச அரை மணி நேரத்திற்குள்ளாக ஆஜானை முச்சந்தியில் நிறுத்தி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையின் மீது உட்கார வைத்து விட்டார்கள்.

சில  பதிவுகள் உங்கள் பார்வைக்காக.

மனுஷ்ய புத்திரன்

 Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.

என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள்.
நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்க காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி?

 சூர்யா சேவியர்


சாய் லட்சுமிகாந்த்


 ஊருக்கு எல்லாம் பாடம் நடத்தும் சுயமோகனின் திருட்டத்தனம் அம்பலம்..

------------------------------------------------------------------2005 ஆம் அண்டு எஸ் ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் வெளியானது. அப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் Best friend, சுருக்கமாக BF. இந்த ஆங்கிலப் பெயரை மாற்றச் சொல்லி மருத்துவர் ராமதாஸ், தொல். திருமாவளவன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்படத்தில் பெயர் அன்பே ஆருயிரே என மாற்றப்பட்டது. சுருக்கமாக அ ஆ. அந்த கோபத்தில் படத்தின் டைட்டில் கார்டு முழுமையும் ஆங்கிலத்தில் வரும்படி செய்திருப்பார் எஸ்ஜே சூர்யா. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு எங்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என பல போராட்டங்களும் நிகழ்ந்தன.

2007, 2008 ஆம் ஆண்டுகளில் பர்னிச்சர் விற்கும் பல கடைகள் தங்கள் நிறுவன பெயரை தமிழில் வைக்க நினைத்து அறைக்கலன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தினர். அதற்கு முன்னரும் அப்பெயரை கேள்விப்பட்டிருந்தாலும், உறுதியாகக் கூற வேண்டும் என்றால் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறைக்கலன் எனும் வார்த்தைப் பயன்பாட்டை பல வணிக நிறுவனங்களில் கண்டுள்ளேன். நீங்களும் கண்டிருக்கலாம்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் 22.03.2014 அன்று தனது இணையதளத்தில் “அறைக்கலன்” எனும் வார்த்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள சில பகுதிகள்….

//Furniture’ விற்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன. கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்னும் விதியை அரசு கறாராக அமல்படுத்தியபோது ‘Furniture’ கடைகள் எல்லாம் ‘அறைகலன்கள்’ என்னும் பெயர் பூண்டன. இச்சொல்லை உருவாக்கியவர்கள் யாரெனத் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையினர் உருவாக்கிய சொல்லாக இருக்கலாம். இச்சொல் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பு எனக்குச் சென்ற ஆண்டு உருவாயிற்று.//

// காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உருவான அந்நாவலின் மொழிநடையைச் செம்மை, மெய்ப்பு ஆகியவற்றிற்காக மூன்று நாள் நாகர்கோவிலில் தங்கினேன்…… அந்நாவலில் ‘Furniture’ என்னும் சொல்லுக்கு ‘அறைகலன்’ எனச் சுகுமாரன் பயன்படுத்தியிருந்தார். அச்சொல் பற்றிய என் கவனம் அதற்கு முன் நேரவில்லை.//

(தனிமையின் நூறு ஆண்டுகள் - மொழிபெயர்ப்பு நூல், காலச்சுவடு பதிப்பகம், ஜூன், 2013ல் வெளியானது)

இச்சொல்லைப்பற்றி அரசுத்துறையில் பணிபுரிபவர்களிடம் கேட்கும் போது
//ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1968ஆம் ஆண்டு எழுதிய “ஆட்சித் துறைத் தமிழ்” என்னும் நூலில் FURNITURE என்பதற்கு “அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் //
என்று ஒரு தகவலும் கிடைக்கிறது. இதன் உண்மை நிலையை யாரேனும் உறுதிப்படுத்தினால் மகிழ்வேன்.

1991-96 காலகட்டத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, தமிழ்நாடு சிறுதொழில்கள் கழகத்தின் நிலத்தை முறைகேடாக வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. டான்சி நிலபேர வழக்கு எனக் கூறினால் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த டான்சி நிறுவனத்தின் கீழ் வரும் ஒரு தொழிற்சாலையின் பெயர் “டான்சி அறைகலன் தொழிலகம்”. சென்னை கிண்டியில் உள்ளது.

இவைகளின் மூலம் 2014ம் ஆண்டுக்கு முன்னரே அறைக்கலன் / அறைகலன் எனும் சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தது. அதுவும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்துமளவு பிரபலமாகவும் இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. 2014க்கு முன்னர் பல நாளேடுகளிலும் அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயமோகன் என்பவர், ஒரு காணொளியில் அந்தச் சொல்லை தான் 2014 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய வெண்முரசு எனும் நாவலில் அதைப் பயன்படுத்தியதாகவும், அங்கிருந்து அது wiktionary சென்றதாகவும், அதன் பிறகு அந்த சொல் புகழ்பெற்று மக்களின் பழக்கத்திற்கு வந்ததாகவும், அந்தச் சொல்லை கண்டுபிடித்தது “நான் தான்” என்றும் போகிற போக்கில் கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.

உண்மையில் வெண்முரசு எனும் நூலில் இந்த வார்த்தையை இவர் முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியிருந்தால் அதைத் தகுந்த தரவுகளுடன் நிறுவுதல் வேண்டும். அதற்கு முன்னர் அவ்வார்த்தை புழக்கத்தில் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் எவரோ கண்டறிந்து, பல காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்லுக்கு ஜெயமோகன் உரிமை கோருகிறார்.

விழித்திருக்கும் போதே கண்ணுக்கு எதிரே திருடுபவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். எனது இன்னொரு கவலை, எளிதில் கண்டுபிடிக்க முடிந்த விசயங்களிலேயே இவ்வளவு பொய்களை அள்ளி வீசுகின்றாரே, மற்ற விசயங்களில் இவரது நேர்மை எப்படி இருக்கும்?

இப்படி எல்லாம் பொய்யாகப் பேசி, புரளிகளை பரப்பி, இல்லாத பெருமைக்கு சொந்தம் கொண்டாடி, அடிப்பொடிகளை வைத்து டுபாக்கூர் விக்கியில் பதிந்து, அதை வரலாறாக மாற்றி, வீடியோவாக எடுத்து பிரபலம் அடைய முயல்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன்.

இதற்கு பதில் யூடியூபில் ஃபுட் ரிவ்யூ செய்து “வேற லெவல் ப்ரோ” என வீடியோ வெளியிடலாமே. அதிக வியூஸ் கிடைக்கும். சீக்கிரமே பிரபலம் ஆகிவிடலாம். சோற்றுக்கும் பிரச்சனை இல்லை. சமூகத்திற்கும் தீமை இல்லாமலும் அமையும்.

இதற்கெல்லாம் ஆஜான் கவலைப்படுவார் என்று நினைக்கிறீர்களா என்ன?

 

“நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு” படத்தில் அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் சொல்லும் வஜனம் ஆஜானுக்குத்தான் பொருந்தும்.

 

“துப்பினா தொடைச்சுக்குவேன்” என்று சொல்லி அடுத்து என்ன கதை அளக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கிடுவார்.

 

ஆனால் ஒரு அபாயம் உள்ளது. எப்படி துடைத்துக் கொண்டேன் என்று இருபது பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விடுவார்.

 

 

 

Wednesday, November 16, 2022

மோடியை டிஸ்மிஸ் செய்யச் சொல்வார்களா?

 


இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் துயரமான மரணத்தை தொடர்ந்து சங்கிகளும் இதர சங்கி அடிமைகளும் இந்த சம்பவத்திற்காக திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று துவக்கியுள்ளார்கள்.

 இந்த மரணத்துக்கு பொறுப்பான மருத்துவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்லியுள்ளது. அந்த குடும்பத்திற்கு  இழப்பீடு பத்து லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இழப்பீட்டை அதிகப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைப்பது கூட நியாயமாக இருக்கலாம். அதிலே எடப்பாடி கேட்டுள்ளது ஒரு கோடி. அதை மிஞ்ச ஆட்டுக்காரன் கேட்டுள்ளது இரண்டு கோடி.

 இது அரசின் கொள்கை முடிவால் ஏற்பட்ட மரணம் என்றால் அரசை பதவி விலகச் சொல்வது கூட ஏற்புடையதாக இருக்கும். ஆனால் இது அப்படியா?

 செல்லா நோட்டு எனும் மோடியின் முட்டாள்தன முடிவால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்களே, அதற்கு மோடியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இவர்கள் கேட்டார்களா? அது கொள்கை முடிவு. அதற்கு மோடியை பதவியிலிருந்து தூக்குவது என்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி.

 கொரோனா காலத்தில் அவசரகதியிலான லாக்டவுனால் இறந்து போனார்களே, அதற்காக மோடியை டிஸ்மிஸ் செய்யச் சொன்னார்களா?

 குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோர்பி தொங்கும் பாலத்தை திறந்து விட்டார்களே, அதற்கு குஜராத் முதல்வரை டிஸ்மிஸ் செய்யச் சொன்னார்களா?

 ஆக்ஸிஜன் சிலிண்டர் கம்பெனிக்கு பணம் கொடுக்காமல் அலட்சியப் படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கோரக்பூரில் இறந்தனவே, மொட்டைச் சாமியார் அரசை டிஸ்மிஸ் செய்யச் சொன்னார்களா?

 மோடியும் குஜராத் முதல்வரும் மொட்டைச் சாமியாரும் டிஸ்மிஸ் செய்யப்பட தகுதியானவர்கள். அவர்கள் விஷயத்தில் வாய் பேசாத யாருக்கும் இப்போது வாய் திறக்க அருகதையே கிடையாது.

உங்களை நம்பித்தானே டாக்டர்?

 


இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் துயரமும் கோபமும் தருகிறது.

ஜவ்வு கிழிந்ததற்கு தரப்பட்ட சிகிச்சை மரணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைத் தவிர வேறெதுவும் காரணமில்லை என்பதுதான் மிகவும் கோபம் அளிக்கிறது.

அந்தப் பெண் தன் உடல் நலன், எதிர்காலம், உயிர் எல்லாவற்றையும் உங்களிடம் முழுமையாக நம்பி அளித்ததே,, அந்த நம்பிக்கைக்கேற்றார் போல பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டாமா? இந்திய கால்பந்து அணியில் இணைய வேண்டுமென்ற கனவை சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன் காலை அகற்றிய போதே இறந்து போயிருப்பாள்!

அந்தப் பெண்ணின் நம்பிக்கை மட்டுமா தகர்ந்தது?

கொரோனா காலத்திற்குப் பின்புதான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்த நம்பிக்கையையும் சிதைக்குமே உங்கள் அலட்சியம்!

Tuesday, November 15, 2022

ஆஜான்-சப்பாணி- நம்பர் ஒன்

 


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகமும் கும்ப மேளாவும் வருவது போல ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம்பர் ஒன் எழுத்தாளர் யார் என்றொரு சர்ச்சை வந்திடும் போல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வந்த போதும் அந்த சர்ச்சைக்குப் பின்னாலும் ஆஜான்தான் இருந்தார்.

 அப்போது தோழர் பாவெல் சக்தி எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை பதிவின் கீழே இணைத்துள்ளேன். அந்த கட்டுரையே சொல்லும் ஆஜான் நம்பர் ஒன் என்பது அவரே உருவாக்கிக் கொண்ட ஒரு மாயை என்பதை.

 நம்பர் ஒன் என்பதற்கு என்ன வரையறை? அதை யார் வகுத்தது? அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவரா?

 கோபாலகிருஷ்ணன் என்று கூப்பிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்ன காரணத்தினாலேயே மயிலைத் தவிர வேறு யாரும் அப்படிக் கூப்பிடவில்லையே! ஆஜானின் குண்டர் படை சொல்வதனாலேயே அவரை நம்பர் ஒன் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு பாட்சாவைப் போல அவர் கையில் முத்தமிட வேண்டுமா என்ன?

 மிகப் பெரும் பொய்யன்,

வலதுசாரி அடிப்படைவாதி,

தற்பெருமையில் மூழ்கித் திளைப்பவர்,

பெண்களை வெறுப்பவர், அதிலும் பெண் எழுத்தாளர்களை கீழ்த்தரமாக பேசுபவர்,

கடைந்தெடுத்த பிற்போக்குவாதி,

ஜாதி, மதக் கலவரங்களை தூண்டி விடக்கூடிய விதத்தில் எழுதுபவர்.

சாமானிய மக்களை அசிங்கப்படுத்துபவர்,

 இவையெல்லாம்தான் ஆஜானின் கல்யாண குணங்கள். இவ்வளவு மோசமான ஒருவர் எழுதுவது மட்டும் எப்படி இருக்கும்!

 அவரது கட்டுரைகளைப் படித்த அளவிற்கு கதைகளை படித்தது இல்லை. கட்டுரைகளே விஷம்தான். கதைகள் இனிப்பு முலாம் பூசப்பட்ட விஷம் என்பதை கொரோனா காலத்தில் அவர் எழுதிய கதைகளே உணர்த்தியது. அழகாக இருக்கிறது என்பதற்காக நாகப்பாம்பை நாம் கழுத்தில் அணிய முடியுமா என்ன?

 புறக்கணிக்கப்பட வேண்டிய பிற்போக்கு எழுத்தாளரை நம்பர் ஒன் எழுத்தாளர் என்று சொல்வதே எழுத்தாளர்களுக்கு பெரும் இழுக்குதான்.

 ஆஜான் எழுதிய நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்னவென்பதை தோழர் பாவெல் சக்தியின் கட்டுரை தெளிவாக விளக்கும்.

 பதினாறு வருடங்களாக சென்னை புத்தக விழாவில் கலந்து கொள்பவன் என்ற அனுபவத்தில் நானும் சொல்கிறேன்.

 சுஜாதா, கல்கி, பாலகுமாரன் ஆகியோரின் நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் நூல்களின் விற்பனை ஆகியவற்றை ஆஜான் எந்நாளும் நெருங்கவே முடியாது. ஆஜானின் ஆசான் சுந்தர ராமசாமி அளவுக்குக் கூட, ஏன் தற்கால எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் அளவுக்குக் கூட ஆஜான் நூல்கள் விற்குமா என்பது சந்தேகமே!

 “சப்பாணின்னு கூப்பிட்டா சப்புனு அடிக்கச்சொல்லி மயிலு சொல்லிச்சு” என்ற வஜன அடிப்படையில் ஆஜானோ (முன்பொரு முறை என் பதிவுக்கு அவர் தளத்தில் செய்தது போல செல்பி கேள்வி பதில் மாடலில்) அவர்தம் குண்டர் படையோ சப்பென்று அடித்தாலும் உறுதியாகச் சொல்வேன்.

 ஆஜான் நம்பர் ஒன் எழுத்தாளர் இல்லை, இல்லை, இல்லவேயில்லை.

இதோ தோழர் பாவெல் சக்தியின் கட்டுரை

ஜெயமோகன் என்ன எழுதினாலும் அது பெரும் சர்ச்சை ஆகிவிடுகிறது. அவரும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடதுசாரிகள் என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு சுழற்றி அடிக்கிறார். அவரை மறுக்க ஒரு பெருங்கூட்டம் புறப்படுகிறது. சில நாட்கள் பின்பு இன்னொரு கட்டுரை, இன்னொறு மறுப்பு.

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான்.

 ஜெயமோகன் எப்போதிருந்து தமிழிலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கிறார்? எப்படி அந்த இடத்தைப் பிடித்தார்? எதனடிப்படையில் அவர் அங்கே இருப்பதாகக் கருதப்படுகிறது? அவரை அந்த அளவுக்கு வாசகர்கள் மதிக்கிறார்களா? அல்லது அது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமா? என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். அதற்காக அவரது நூல்கள் எவ்வளவு விற்றுள்ளன என்று ஒரு சிறிய சர்வே எடுத்து பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

நாம் பட்டியலிடுகிற விபரங்களில் லைப்ரரி ஆர்டர் எனப்படும் நூலகங்களுக்கான பதிப்புகளும் அடங்கும். கூடவே இப்போதெல்லாம் ஒரு பதிப்பு என்பது 1000 பிரதிகள் என்றில்லை. அவரவர் வசதிக்கு தகுந்தபடி 300, 500 என புத்தகங்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதன்படி ஜெயமோகனின் நூல்கள் 1000 வீதமா, 500 வீதமா, 300 வீதமா என்று யாருக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் அவரது எந்த நூலும் விற்பனையில் சாதனை படைக்கவே இல்லை என்பதைத்தான் எனது தேடலில் கண்டறிய முடிந்தது.  அவரது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் உடைவதால் ஒரு சின்ன வருத்தம் கூட ஏற்பட்டது.

எண்நூலின் பெயர்வெளிவந்த ஆண்டுபதிப்பு
1விஷ்ணுபுரம்19975 (19 வருடங்களில்)
2பின்தொடரும் நிழலின் குரல்19994 (17 வருடங்களில்)
3கொற்றவை20053 (11 வருடங்களில்)
4காடு20032 (13 வருடங்களில்)
5ஏழாம் உலகம்20002 (16 வருடங்களில்)
6ரப்பர்1990
2 (26 வருடங்களில்)
7கன்னியாகுமரி20002 (16 வருடங்களில்)
8வெள்ளையானை20132


இந்த நூல்கள் எல்லாம் முதலில் நற்றிணை பதிப்பகத்தில் வந்தன. சென்ற ஆண்டு ஏதோ பிரச்சினையில் நூல்கள் விற்றுத் தீராத நிலையிலேயே கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனவே இன்னொரு பதிப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளிவிபரங்களின்படி பார்த்தால்,
  • இவருக்கு ஆன்ம வெளிச்சம் பாய்ச்சிய 'விஷ்ணுபுரம்' நாவல் வெளிவந்த ஆண்டு 1997. கடந்த 20 வருடத்தில் அந்த நாவல் 5 பதிப்புகளைக்கூட தாண்டவில்லை. அந்த நாவலின் பெயரில் வருடா வருடம் விருது வேறு கொடுக்கிறார்கள்.
  • புதுக்காப்பியம் என்கிற பெயரில் இவர் 2௦௦5-இல் எழுதிய 'கொற்றவை' கடந்த 12 வருடங்களில் இதுவரை கண்ட பதிப்புகள் மொத்தம் 3 மட்டுமே.
  • 1999-இல் வெளிவந்த 'பின் தொடரும் நிழலின் குரல்' 18 ஆண்டுகளாகியும் 4-வது பதிப்போடு திணறிக் கொண்டிருக்கிறது.
  • 'ரப்பர்', 'காடு', 'ஏழாம் உலகம்', 'கன்னியாகுமரி', 'வெள்ளை யானை' என பத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் பதிப்பு பராக்கிரமங்களும் இதே அளவுதான்.
  • இதில் சிறுகதை தொகுப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாரிவேந்தர் பச்சைமுத்து கையில் விருது வாங்கியும் கூட 'அறம்' 6 பதிப்புகள்தான்.
  • அதைத்தவிர 'திசைகளின் நடுவே'யிலிருந்து 'வெண்கடல்' வரை ஒன்றிரண்டு பதிப்புகள்தான்.
  • இவர் ஆன்மிகம், தத்துவம், அரசியல், பண்பாடு, வரலாறு என்று அதாவது இந்து ஞான மரபிற்கும், இன்றைய காந்திக்கும், கண்ணகிக்கும் என பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த நூல்கள் அதன் பக்கங்களின் எண்ணிக்கை அளவிற்கு கூட விற்றிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
  • இவைத்தவிர தனது அனுபவம், இலக்கிய விமர்சனங்கள், அறிமுக நூல்கள் என வெளியிட்ட வெளியீடுகளுக்கும் இதே கதிதான்.
  • நாடகம், சிறுவர் இலக்கியம், தற்காலம், இன்றைய காலம், சமகாலம் என்ற தலைப்பில் ஜெயமோகன் மொழிபெயர்த்தவை, எழுதியவை பதிப்புகளாக வந்திருப்பது பற்றி அவரின் தீவிர விசிறிகளுக்குக்கூட தெரியவில்லை. விசாரித்தால் ‘என் தலைவன் எழுதாதை எழுதியதாகக் கூறி அவதூறு செய்ய வேண்டாம்’ என சட்டென்று நம் முகத்தில் அறைந்தார்போல பேசுகிறார்கள். அப்படியானால் எவ்வளவு விற்றிருக்கும் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
  • இதேபோல இந்துமதம் சில விவாதங்கள் என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தமிழ்ஹிந்து.காமில் (http://www.tamilhindu.com/) வரவேற்பு விமர்சனம் வந்தும்கூட இப்போது அந்த நூலை மறுபதிப்பு போட யாருக்கும் துணிச்சலில்லை.

இத்தனைக்கும் சினிமா வசனகர்த்தா என்ற 'புகழும்' ஜெயமோகனுக்கு இருக்கிறது.

இங்கே நாம் தமிழில் பத்து பதிப்புகளைக் கடந்த மற்ற எழுத்தாளர்களின் நாவல்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழில் எழுதினால் வரவேற்பே கிடைப்பதில்லை என்ற இவர்களின் உள்நோக்கம் கொண்ட காரியவாத புலம்பலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
  • சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை', 'ஜேஜே சில குறிப்புகள்' நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன. இதில் புளிய மரத்தின் கதை மலிவுப் பதிப்பாக பல்லாயிரம் வெளியிடப்பட்டு அதன் பின்பு இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறது.
  • ப.சிங்கரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யும் அப்படித்தான்.
  • 'வாடிவாசல்' நாவல் 26000 பிரதிகள் வரை போயுள்ளது.
  • இன்றையச் சூழலை கணக்கில் கொண்டால், 2004ம் ஆண்டு வெளிவந்த ச.பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' 10 பதிப்புக்கும் மேல் சென்று விட்டது.
  • 2007ம் ஆண்டு வெளிவந்த, மொழிபெயர்ப்பு நாவலான பி.எச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு' 10வது பதிப்பு வெளிவந்து விட்டது.
தவிர தரம், வணிக இதழ் பிரபலம் என்றெல்லாம் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களைச் சேர்க்கவில்லை. கி.ரா போன்றவர்களின் நூல் பற்றிய தகவல்களை இப்போதைக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அண்மையில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற நாவல்களைப் பார்த்தால்,
1. 'பார்த்தீனியம்', 'நஞ்சுண்ட காடு' நாவல்கள் வெளிவந்த உடனே இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. இந்நாவலாசிரியர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இல்லை என்றாலும் இந்நூல்களுக்கு ஏராளமான விமர்சனக் கூட்டங்களும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

2. நக்கீரனின் 'காடோடி' நாவலுக்கு இரண்டு ஆண்டுகளில் 30 கூட்டங்களுக்கு மேல் நடந்துள்ளன. சுற்றுச் சூழல் அரங்கில் மிக முக்கியமான நாவலாக காடோடி பேசப்படுகிறது.

3. இவர் புதுக்காப்பியம் என்று கண்ணகியை வைத்து எழுதிய 'கொற்றவை'யுடன் ஒப்பிடும்போது 2014-இல் வெளியான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய இரா.முருகவேளின் 'மிளிர்கல்' மூன்றே ஆண்டுகளில் 1000 வீதம் 5 பதிப்புகளைக் கண்டுள்ளது.

  ஜெயமோகனை விட அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியல் முழுமையானது அல்ல. இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் நூல்கள் இருக்கிறார்கள். உதாரணம் தொ.பரமசிவன். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’ இதுவரை 14 பதிப்புகள் கண்டு, 15,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது.

தனது ஆக்கங்கள் பெரிய அளவில் வாசகர்களிடம் கவனம் பெறாத நிலையில், அவர் “எழுதும் கலை” என்கிற தலைப்பில் ஒரு வழிகாட்டி நூலை எழுதியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை.

ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு மாணவர், மகளிர், மீனவர், தலித், பழங்குடி, மத்தியதர வர்க்கம் என சமூகத்தின் எந்தப் பிரிவினராலும் அல்லது அப்பிரிவினர்களின் முன்னோடிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஒரு பிரிவு மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தனது நூல்களின் நாலைந்து பதிப்புகளை வைத்துக்கொண்டு தமிழின் முதல்தர எழுத்தாளன் தான்தான் என தனக்குத்தானே கூறிக்கொள்ள ஒருவரால் முடியுமென்றால் அது ஜெயமோகனால் மட்டுமேதான் முடியும்.

திராவிட எதிர்ப்பு, பெண்ணிய எதிர்ப்பு, சிறுபான்மை எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு ஆகியவற்றை வெளிப்படையாகப் பேச ஆளில்லாத காரணத்தால் இவரை அந்தப் பிரிவு உயர்த்திப் பிடித்தது. ஆனால் ஜெயமோகனால் தன்னை அதற்கு ஏற்றாற்போல வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நவீன சமூகம் பற்றி அவரால் எழுத முடியவில்லை. சமூகத்தை அவதானிப்பதற்கு ஏற்ற சமூக அறிவு இல்லை. சமூகத்துக்குச் சொல்ல எதுவும் இல்லை. எனவேதான் வெண்முரசில் இறங்கிவிட்டார்.

தனது ஆக்கங்கள் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லையென வெளிப்படையாகவே பேசுகிற சாருவிடம் கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால் ஜெயமோகன் தனிரகம். ஒன்றுமே இல்லாத மோடியை ஊடகங்கள் காசு வாங்கிக் கொண்டு ஊதிப் பெருக்கியதே… அதே கதைதான் இவருடையதும். மோடிக்கு ஊடகங்கள் இருக்கிறது. இவரோ “தனக்குத் தானே திட்டம்” மூலம் அதை செயல்படுத்தி வருகிறார்.

தான் உன்னதமான, கூர்மையான, ஆழமான எழுத்தை எழுதுவதாக தனக்குத்தானே கூறிக்கொள்ளும் இவரை இன்றுவரை தமிழக வாசகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள விபரங்கள் உணர்த்துகின்றன.

 இவர் கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா போல பெஸ்ட் செல்லரும் கிடையாது. புதுமைபித்தன் போல சமகால அல்லது கடந்தகால தமிழ்ச் சமூகத்தை அதன் காலத்தை, இடத்தை, அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் புனைவாசிரியரும் கிடையாது.

‘நானும் ரௌடி, நானும் ரௌடி’ என்று இவர் கூவிக் கொண்டிருக்கும் காலத்திலேயேதான் பலரின் நாவல்கள், மொழிபெயர்ப்புகள், தத்துவ - அரசியல் நூல்கள் ஆயிரக்கணக்கில் பல பதிப்புகளைத் தாண்டி விற்றுத் தீர்ந்திருக்கிறது.

  இவர் ஊடக பிரமை என்றும், குருவிமண்டை என்றும் அருந்ததிராயைச் சொன்னாலும், அது ஜெயமோகனுக்கே அதிகம் பொருந்துகிறது. இப்போது இந்த விபரங்களை பரிசீலிக்கிற எல்லோருக்கும் ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர் இல்லையென்பது விளங்கி விடுகிறது. நல்ல ஆக்கங்களை கொடுத்து வாசகர்களிடம் பிரபலமாக முடியாத அவரது இயலாமை சமூகப் பிரச்சினைகள் குறித்து விதண்டாவாத கருத்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தவும், அதன்மூலம் பிரபலமடையவும் தூண்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருந்த மற்றவர்களுக்கு வாசகர்கள் கொடுத்திருந்த மதிப்பைப் பார்க்கும் போது ஜெயமோகன் ஒன்றுமே இல்லை. அவர் முதலிடத்திலும் இல்லை என்பதே தெளிவாகிறது. எத்தனை குழந்தைகளுக்கு ஜெயகாந்தன் என்று பெயர்? ஜெயகாந்தன் வருகிறார் என்றால், விடிய விடிய காத்திருந்த கூட்டம்... இத்தனைக்கும் அவர் தெருமுனைகளிலும், கிராமங்களிலும் உழைக்கும் மக்கள் நடுவே பேசினார்.

அண்மையில் ஜெயமோகன் தான் வழக்கமாகச் செல்லும் வங்கியின் ஊழியர்களுக்குத் தன்னைத் தெரிவதில்லை என்று சொல்லியிருந்தார். அதே இடத்தில் சுஜாதாவையோ, பாலகுமாரனையோ வைத்துப் பாருங்கள். மேனேஜர் ஓடி வந்திருப்பார் அல்லவா? இன்றுவரை தங்கள் வீட்டிலும் கடைகளிலும் மு.வ. படத்தை வைத்திருக்கும் அவரது வாசகர்களை நினைத்துப் பாருங்கள்.

மத்தியதர வர்க்கமோ வேறு எந்த வர்க்கமோ அதற்காக ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார்? அவர்கள் ஏன் இவரைக் கொண்டாட வேண்டும்? வாசகர்கள் எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆக அறிவுஜீவிகள்தான் பிம்பங்களைப் பார்த்து குழம்பிப் போய், இவரைத் திட்டி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: “எழுதியவனைக் கண்டுபிடித்தல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் ஒரு நூலை எழுதி இருக்கிறார். கூடிய விரைவில் அது சாத்தியமாகும்.

- பாவெல் சக்தி

நேரு இல்லையேல் மோடியில்லை.

 


ஆமாம். நிஜம்தான்.


நேரு இல்லாமல் மோடியால் என்று எதுவுமே செய்ய முடியாது.

நேரு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியிருக்காவிட்டால் அவற்றை மோடி எப்படி விற்க முடியும்! எப்படி அந்த பணத்தில் ஊதாரித் தனமாக செலவழிக்க முடியும்!


நேரு தொலை நோக்குப் பார்வையோடு துறை முகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்காவிடில் மோடியால் எப்படி அவற்றை தன் நண்பன் அதானிக்கு தாரை வார்க்க முடியும்!

 

நேரு ஏர் இந்தியாவை உருவாக்கியதால்தான் அதனை மோடியால் டாடாவிற்கு தாரை வார்க்க முடிந்தது.

 

நேரு உருவாக்கிய எல்.ஐ.சி யின் பங்குகளை மோடியால் விற்க முடிந்தது.

 

இவை மட்டுமா, மோடி தன்னுடைய கையாலாகததனத்திற்கு பழி போட கிடைத்த பெரிய பொக்கிஷமல்லவா நேரு!

 

நேரு மட்டும் இல்லையென்றால் இன்று மோடியின் பிழைப்பே நடக்காது.

 

ஆனாலும் சங்கிகளுக்கு ஏன் நேரு மீது கடுப்பு?

 

சங்கிகள் இந்தியாவை அவர்கள் நினைத்தது போல

 

ஒரே நாடு-ஒரே மதம்-ஒரே மொழி- ஒரே கலாச்சாரம்

 

என்று திணிக்க முடியாத அளவிற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் மக்களின் மனதில் விதைத்து விட்டுப் போயிருக்கிறாரே! அவரை எப்படி சங்கிகள் ஏற்றுக் கொள்வார்கள்!

 

பாஜக யாரையெல்லாம் வெறுக்கிறதோ, அவர்களையெல்லாம் நாம் உயர்த்திப் பிடித்திட வேண்டும்.

 

பிகு: கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த வருடமும் கலந்து கொண்டது போல தெரியவில்லை. பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் எந்த செய்தியும் இல்லை. அதே நேரம் நரேந்திர மோடியின் பக்கத்தில் இரு வரி செய்தி உள்ளது. 



ஆனால் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் படு கேவலமாக, நேருவை இழிவு படுத்துவதாகவே அமைந்துள்ளது. சங்கிகளின் புத்தி வேறெப்படி இருக்கும்!

Monday, November 14, 2022

நேரு எனும் சிற்பி




 *நாளொரு கேள்வி: 14.11.2022*


தொடர் எண்: *898*

*பொதுத் துறைகளின் சிற்பி நேரு பிறந்த நாள்*

இன்று நம்மோடு இன்சூரன்ஸ் ஒர்க்கர் ஆசிரியர் *அமானுல்லா கான்* (தமிழில் கோவை *சுதா*)
#########################

*தன்னாட்சி செயல்பாடா? - அரசாங்க கட்டுப்பாடா?*

கேள்வி: பொதுத் துறை நிறுவனங்களை கட்டுப்பாடு என்ற பெயரில் கழுத்தை நெரிக்கும் மத்திய அரசின் அணுகுமுறை, இன்சூரன்ஸ் துறை மீதான தாக்கம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

*அமானுல்லாகான்*

மத்திய அரசு எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தன்னாட்சிபெற்ற பொதுத்துறை நிறுவனங்களாக கருதாமல், அரசின் துறைகளைப் போன்றே கருதுகிறது என்பதை சமீப காலத்திய வளர்ச்சிப்போக்குகள் தெளிவாக காட்டுகின்றன.

தங்கள்வணிகங்களை நடத்த இந்நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்பதுஏட்டளவிலேயே உள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் (Board) அரசின் அதிகாரமுடிவுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அமைப்புகளாக மட்டுமே செயல்படும் நிலைக்கு தாழ்ந்துள்ளன.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகமட்டங்களின் முடிவெடுக்கும் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் இத்தகைய *அதிகாரமட்டத் தலையீடு அந்நிறுவனங்களுக்கு பெரும் தடையாக* உள்ளது. 

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகாரத்துவ தலையீடு காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே எல்.ஐ.சி மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ்  நிறுவனங்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசால் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தலையீடும், கட்டுப்பாடும் தற்போது இருப்பது போல் அப்பட்டமாக கடந்த காலத்தில் இருந்ததில்லை. இத்தகைய தேவையற்ற தலையீடுகள் வணிகத்தேவைகளுக்காகவும், கடுமையான போட்டிச் சூழலை எதிர்கொள்ளவும் இயக்குனரவை திறம்பட முடிவெடுப்பதில் சிக்கலை உருவாக்கும் எனவும், தொழில்துறை உறவகளை மோசமாக பாதிக்குமெனவும் கூறக் தேவையில்லை.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் ஊதிய உயர்வு, நிலுவைக் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. *முதல் முறையாக PSGI நிறுவனங்களின் ஆட்சிக் குழுவான GIPSA ஐ ஓரங்கட்டி, நிதிஅமைச்சக அதிகாரிகள், ஊழியர் சங்கங்களோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை இந்தத் துறை கண்ணுற்றது.* ஏப்ரல் 2019ல் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போதே GIPSA ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை விரைவில் தீர்க்க ஆர்வமுடன் இருந்தது. நீண்டகால நடைமுறையினைப் போன்று எல்.ஐ.சிக்கு இணையான ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவைகளாக அந்நிறுவனங்கள் உள்ளதென GIPSA தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நேர்மறையான உத்திரவாதத்திற்குப் பிறகு, ஜிப்சாவிடம் கனத்த மெளனம் நிலவியது. ஓவ்வொரு முறை பிரச்சனை எழுப்பப்படும் பொழுதும் கோரிக்கைகளை நிதிஅமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்ற பதிலைக் தந்தது...தீவிரமான பிரச்சாரங்களும், தொடர்ந்த போராட்டங்களும் GIPSA வை பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தினை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய இரண்டு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முன்னெப்போதும் இல்லாதது.

இந்த விவாதங்களில் 1.8.2022 முதல் தரப்பட வேண்டிய ஊதிய உயர்வின் முற்றிலும் புதிய வடிவத்தினை தொழிற்சங்கங்களை ஏற்கச் செய்வதில் நிதி அமைச்சக பிரதிநிதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்கால ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற திருத்தத்தினை உள்ளடக்கி ஊதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து.. செயல்திறனை தீர்மானிக்கும் அளவுகோல்கள் குறித்து எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. சமூக பொறுப்புக்கள் மற்றும் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு என்ன மதிப்பீடு வழங்கப்படும் என்பதை குறித்து அரசு எதுவும் கூறவில்லை. 

*பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா* போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய பாலிசிகளுக்கான பிரிமிய விகிதங்களை நிர்ணயிக்க PSGI  நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை, மேலும் இந்நிறுவனங்கள் இதனால் அடைந்த இழப்புகளுக்கான இழப்பீட்டையும் அரசு வழங்குவதில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை  
அனுமதிப்பது தான் சிறந்தது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளில் அரசின் தலையீடு தொழிலக உறவுகளை சீர்குலைப்பது மட்டுமன்றி தொழிலக ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையுமாகும்..

எல்.ஐ.சி நிர்வாகக்குழு *குடும்ப ஓய்வூதியத்தை ஒரே சீராக 30% ஆக உயர்த்துவதற்கான தனது பரிந்துரைகளை 2019ம் ஆண்டில் அரசிற்கு அனுப்பியது. இப்பிரச்சனை இன்று வரை நிதிஅமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது.* எல்.ஐ.சி திறமையான, செயல்பாட்டு சுதந்திரமிக்க நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது என்னும் கூற்றை கேலிக்குரியதாக்கவில்லையா? அல்லது நிதி அமைச்சக அதிகாரிகள் எல்.ஐ.சி நிர்வாகக்குழு தனது முடிவுகளின் விளைவுகளை புரிந்து கொள்ளும் தகுதியற்றது என எண்ணுவதின் வெளிப்பாடா? எல்.ஐ.சியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் மெத்தனத்தினால் ஓய்வூதியதாரர்கள் பெரியதுன்பத்தை சந்தித்து வருகின்றனர். இந்த இடைப்பட்டகாலத்தில் கணிசமான ஓய்வூதியதியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் துன்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் எல்.ஐ.சி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியுமா? பரிந்துரை செய்த பிறகு அரசின் ஒப்புதலை பெறுவதும், அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதும் எல்.ஐ.சியின் பொறுப்பல்லவா? நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் நிர்வாகக்குழு தனது நிலைபாட்டில் நின்று அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதை உறுதி செய்து, அதன் பலன்கள் உத்தேசிக்கப்பட்ட தேதிகளிலிருந்து ஊழியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இச்சூழல் தொழிலுறவுகள் உட்பட நிறுவனத்தை நிர்வகிக்க எவ்வளவு தன்னாட்சி அதிகாரத்தை எல்.ஐ.சி தன்னகத்தே கொண்டுள்ளது என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

பாலிசிதாரர்களின் நலனைப் பாதுகாப்பதனை முதன்மையாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சேமிப்புகளை திரட்டுவதை அடுத்தபடியாகவும் கொண்டு எல்.ஐ.சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை, பாலிசிதாரர்களுக்கு நலன்களுக்கு எதிராக கடினமான பொருளாதார சூழலில் அரசை மீட்டெடுக்க  எல்.ஐ.சியை எதிர்பார்க்கும் பொழுது இந்த உத்திரவாதம் நீர்த்து போகிறது. *ஐடிபிஐ* அதற்கு சரியான உதாரணமாகும். ஐடிபிஐ பாரம்பரியமாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தது, ஆனால் துரதிர்ஷடவசமாக அரசின் குறுகிய நோக்கத்தினால் வளர்ச்சி வங்கி வணிக வங்கியாக மாற்ற பட்டது. அதன் காரணமாக இயல்பாகவே குறுகிய காலக்கடனை வாங்கவும், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவும் நிர்பந்தித்ததன் காரணமாக வங்கி நொடிந்து போனது. வங்கியை மீட்டெடுக்க அரசு எல்.ஐ.சியை நாடியது. *பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி எல்.ஐ.சி வங்கியின் பெரும்பகுதி பங்குகளை வாங்கி கடுமையாக முயன்று வங்கியை ஆரோக்கியமானதாக மாற்றியது. இந் நடவடிக்கையின் காரணமாக ஐடிபிஐ எல்.ஐ.சியின் மிகப்பெரிய வங்கி காப்பீட்டுக் கூட்டாளியாக மாறியது. நிலைமைகள் மாறி வரும் தருணத்தில் அரசு ஐடிபிஐ வங்கியை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு முடிவெடுத்து, தனது பங்குகளை விற்பதோடு எல்.ஐ.சி வைத்துள்ள பெரும்பகுதி பங்குகளையும் விற்குமாறு பணித்தது.* தற்போது ஐடிபிஐயில் 49.24% பங்குகளை வவைத்கிருக்கும் எல்.ஐ.சி 20.24% பங்குகளை விற்கும்படி கேட்டுக்கொள்ளப் படுவதால் நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.  எல்.ஐ.சி நீண்ட கால ஆதாயங்களுக்காக ஐடி.பிஜயில் முதலீடு செய்திருந்தால், பங்குகளை விற்க ஏன் தற்போது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? 

ஒவ்வொரு பெரிய தனியார் நிறுவனமும் ஒரு வங்கியால் ஆதரிக்கப்படும் நிலையில் போட்டிச் சூழல் சவாலை எதிர்கொள்ளும் எல்.ஐ.சிக்கு நிர்வாகக் கட்டுப்பாடு இல்லையென்றால் பின்னடைவாகிவிடாதா? உத்தேசித்துள்ள ஒப்பந்தத்திலிருந்து எல்.ஐ.சி லாபம் பெறுமா அல்லது பாலிசிதாரர்களின் நிதிகளுக்கு இழப்பை ஏற்படுத்துமா? பாலிசிதாரரின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் அடிப்படைப் பொறுப்பு என்பதை எல்.ஐ.சி நினைவில் கொள்ளவேண்டும், எந்த ஒப்பந்தமும் இந்தக் கொள்கையை சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. 
எல்.ஐ.சி பங்கு விற்பனை என்னவாயிற்று? அது அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்குகளை சரி செய்வதற்காக மிகவும் புகழ் பெற்ற பொதுத்துறை நிதி நிறுவனத்தை விற்றதாகும்... வணிகத்தில்  ஈடுபடுவது அரசின் பணி அல்ல என்ற கருத்தியல் மட்டுமல்லாமல் நிதிப்பற்றாக்குறையினால் அரசு தவிக்கிறது. எனவே எல்.ஐ.சி நிர்வாகத்தை அவசரகதியில் பங்கு விற்பனைக்கு ஓப்புதல் அளிக்குமாறு வற்புறுத்திய்து. பொருளாதார தேக்கநிலை, போர் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் எந்த முதலீடும் செய்யாமல் எச்சரிக்கையாக உள்ளனர் என்பதை அறிந்திருந்தும், அரசு எல்.ஐ.சியின் 3.5% பங்குகளை விற்க முன்வந்தது. எல்.ஐ.சியின் பிராண்ட் மதிப்பும், மக்களிடையே அது ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் பங்கு விற்பனையின் வெற்றியை உறுதி செய்தன. ஆனால் பட்டியலிடுவதன் காரணமாக அதீத லாபத்தை எதிர்பார்த்த முதலீட்டாளர்கள், பட்டியலிடப்பட்ட விலை, பங்குகளின் விலையில் சரிவு ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தனர். இது மிகுந்த அதிருப்தியையும் புதுவணிகத்தில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தியது. *நிறுவனத்திற்கு நிதித்தேவை இல்லாத நிலையிலும், நிதி வரவிற்கான தேவை ஏற்படாத நிலையில் எல்.ஐ.சி நிச்சயமாக பங்கு விற்பனை முடிவை எடுத்திருக்கக் கூடாது.* இது அரசு சிக்கலான பொருளாதார சூழலில் தனது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட எடுக்கப்பட்ட முடிவு என்பதற்கு சரியான உதாரணமாகும்...

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு ஏற்ப ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு மிகவம் அவசியமான செயல்பாட்டு தன்னாட்சியை அரசின் அதிகாரத்துவம் எவ்வாறு தர மிறக்கியுள்ளது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். அதீதமான அதிகாரத்துவ தலையீடு பாலிசிதாரர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வணிக முடிவுகளையே தோற்றுவிக்கும். எத்தகைய, சமூக நோக்கங்களுக்காக “தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தங்களது செயல்பாடுகளை நிர்வகிக்க எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்  தேவையான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரிப் பெற வேண்டிய தருணம் இது.

*செவ்வானம்*

Saturday, November 12, 2022

பூங்காற்றிலே உன் சுவாசத்தை . . .

 


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான "உயிரே" திரைப்படத்தின் பாடலான "பூங்காற்றிலே உன் சுவாசத்தை" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே