Monday, May 24, 2021

கொரோனா காலத்திலும் குரூரம்



 *வெறும் செய்திகள் அல்ல...*

*மூலதனத்தின் குரூரம்...*



 _*//க.சுவாமிநாதன்//*_ 

நன்றி : தீக்கதிர் 24.05.2021

*******************************************

*//கொரோனா உரு மாற்றம் பெறுவது போல ஒரு புதிய புதிய வகையிலான  லாப வேட்டைகளும் உருப் பெறுகின்றன பாருங்கள்!//*

*//பொது மருத்துவத்தை கை கழுவி உலகமயப் பாதையில் நடை போட்டதன் விளைவை இப்போதாவது நாடு உணருமா?//*

*******************************************

கோவிட் "பாசிட்டிவ்" என்பது பயம் மட்டுமல்ல, "பணம்" சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதால் தனியார் பரிசோதனைக்  கூடங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை இழுப்பதற்கு ஃபால்ஸ் ரிப்போர்ட்களை (False Reports) தந்துள்ளன என்கிற செய்திகள் அதிர்ச்சியைத் தந்துள்ளன.

*கள்ளக்குறிச்சி கணக்கு*

"மெடால்" பரிசோதனைக் கூடத்திற்கு கோவிட் சோதனைக்காக தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட 4000 மாதிரிகள் கள்ளக் குறிச்சி கணக்கில் காட்டப்பட்டுள்ளன என்பது ஒரு காரணம். அந்த சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக இருந்தும் பாசிட்டிவ் என ஐ.சி.எம்.ஆர் இணைய தளத்தில் "மெடால்" நிறுவனத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  தமிழக பொது சுகாதார சட்டம் 1939 ன் கீழ் நோட்டிஸ் விடுக்கப்பட்டுள்ளது.  பாசிட்டிவ் என பதியப்பட்டுள்ள பல மாதிரிகள் குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை. பொது சுகாதார இயக்குனர் கூற்றுப்படி "அலட்சிய தவறு"  (negligence)  மட்டும் அல்ல.  "லாப நோக்கு" (Vested Interest)  என்றும் அவர் சொல்லியிருக்கிறார் என்பதே அதிர்ச்சியை தருகிறது. தனியார் மருத்துவ மனைகளுக்கு ஆள் பிடித்து தந்தார்களா? என்ற கேள்வி எழுநதுள்ளது.

அரசு இந்த கணக்குகளை வைத்துதான் "வளங்களை ஒதுக்கீடு"(Resource Allocation) செய்கிறது என்பதால் இது ஏதோ "எழுத்தர் தவறு" (Clerical mistake) என்று கடந்து செல்லவும் முடியாது. அரசின் கோவிட் எதிர் வினைத் திட்டங்களையே அது பாதிக்கும். இப்படி தவறாகப் பதிவேற்றம் செய்வது  "மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள குழப்பம், அச்சம், பதட்டம், மன அழுத்தம் மிக மிக அதிகம்" எனவும் பொது சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார். (இந்து ஆங்கில நாளிதழ் - 22.05.2021). 

"மெடால்"  மன்னிப்பு கேட்டுள்ளது. "பதிவேற்ற தவறுதான் என விளக்கம் தந்துள்ளது. விசாரணை முடிவுகள் வரட்டும். 

ஆனால் தனியார் மருத்துவ சேவைகள் இப்படி செய்யும் "தவறுகள்" நிறைய வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்குள்ள ஊழியர்களை, சம்பள டாக்டர்களை குறை கூறவில்லை. அவர்களில் பலர் அற்புதமான சேவை புரிகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து அங்குள்ள செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் தனியார் மருத்துவ "சேவை" நிறுவனங்களின் உடமையாளர்கள் பேரிடர் காலத்தை லாப வேட்டைக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.  விலக்காக சிறு மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவத் துறையில் நிகழ்ந்துள்ள கார்ப்பரேட் மயம் மனிதத்திற்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. 

இத்தகைய புகார்கள் மார்ச் 2020 லிருந்தே இருக்கின்றன. எகானமிக் டைம்ஸ் (மார்ச் 30, 2020) தலைப்பு ஒன்று "தனியார் பரிசோதனைக் கூடங்களில் தரப்படும் பொய்யான "ஃபால்ஸ் பாசிடிவ்" முடிவுகளால் அரசு மருத்துவ மனைகள் இரண்டு முறை சோதிக்க வேண்டிய சுமைக்கு ஆளாக்கப்படுகின்றன" என்பதே. 

*600 மாதிரிகள்... ஒரு நம்பர்*

இதோ இந்து ஆங்கில  நாளிதழின் இணையம் (27.04.2021) செய்திகள் இரண்டு. 

ஒன்று, 20 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு பெங்களுரில் நோட்டிஸ் அனுப்பப்பட்ட செய்தி. ஒரு பரிசோதனைக் கூடத்தில் 600 ஆர்.டி.சி.பி.ஆர் மாதிரிகளுக்கு ஒரே தொலை பேசி எண் தொடர்பு எண்ணாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஐ.சி.எம்.ஆர் இணைய தளத்தில் பதிவு செய்யாமலேயே  கோவிட் பாசிட்டிவ் என்ற தகவல் இன்னொரு பரிசோதனைக் கூடத்தால் நோயாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகத்தால் நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண்பது, தொடர்பில் இருந்தவர்களை அறிவது, தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் இயலாததாகவும் ஆகிப் போனது. கர்நாடகா ரூ 500 என்பதை உச்ச கட்டண வரையறையாக விதித்திருந்தும் ஒரு சோதனைக்கு ரூ 1000 வரை வசூலித்தனர். 

இன்னொரு செய்தி தனியார் மருத்துவ மனைகள் பற்றியது. 
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு பெரிய கார்ப்பரேட் மருத்துவ மனைகளின் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோவிட் தகவல்களை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்று குற்றச்சாட்டு. 

"மருத்துவ மனை படுக்கை ஒதுக்கீடு மோசடி" ஒரு மருத்துவ மனையில் வெளியே வந்தது. படுக்கைகள் இருக்கும் போதே இல்லையென பதிவேற்றம் செய்திருந்தார்கள். இன்னொரு மருத்துவ மனை மீது "கவனக் குறைவால் மரணம்" என்ற பேரிடர் நிர்வாகச் சட்டப் பிரிவின் (304 A) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. படுக்கை இல்லை என்று பொய் சொல்லி அனுமதி மறுத்ததால் மூன்று நான்கு மணி நேரத்தில் நோயாளி மரணம் அடைந்ததார்  அதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

*உயிரா லாபமா?*

நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பது, மிகவும் மோசமான உடல் நிலையோடு வருகிறவர்களை மனிதாபிமானம் கிஞ்சித்தும் இன்றி அரசு மருத்துவ மனைகளை நோக்கி விரட்டுவதும் இன்னொரு முக்கியப் பிரச்சினை. ஆகஸ்ட் 21, 2020 இந்து ஆங்கில இதழ் செய்தி இது. அன்றைய மாநில சுகாதார அமைச்சர் விஜய் பாஸ்கர் வெளிப்படையாகவே விமர்சித்த பிரச்சினை இது. "ஆக்சிஜன் 40% - 60% அளவு மட்டுமே இருப்பவர்கள், நுரையீரல் பாதிப்பு 70% - 90% வரை பாதிப்பு உள்ளவர்கள் தனியார் மருத்துவ மனைகளால் கடைசி நிமிடத்தில் அரசு மருத்துவ மனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிலர் அப்படியும் இங்கு வந்து பிழைக்கிறார்கள். மற்றவர்கள் இங்கு வந்து இரண்டு, மூன்று மணி நேரங்களில் இறந்து விடுகிறார்கள். அவர்களில் பலர் 50 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள்... அனுமதித்து விட்டு சிக்கலானவுடன் மாற்றுவது இன்னும் நோயாளிகளை பலவீனம் ஆக்குகிறது". இது ஒரு மூத்த அரசு மருத்துவமனை டாக்டர், இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்ட தகவல். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அப்போது அங்கேயே முதலில் இருந்து சிகிச்சை பெற்று மரணம் அடைந்தவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்ற மரணங்கள் அனைத்தும் இப்படி தனியார் மருத்துவ மனைகளில் இருந்து துரத்தப்பட்டவர்களின் கணக்கே. திருச்சி, மதுரை, கோயம்புத்தூரிலும் இப்படி துரத்தல்கள் இருந்தன. சிலர் பிணங்களாகவே வந்து சேர்ந்தனர். எவ்வளவு குரூரம்!

அடுத்தது Cash for Cure Scam. கட்டண கொள்ளை அரங்கேறியது. 
தமிழகத்தில் அக்டோபர் 2020 ல் 9 தனியார் மருத்துவ மனைகளுக்கு கோவிட் 19 சிகிச்சைக்காக தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. 18 தனியார் மருத்துவ மனைகள் அதீத கட்டணம் வசூலித்ததாக நடவடிக்கைக்கு ஆளாயினர். எல்லாம் சென்னையின் "பெருமைமிக்க" பெரிய மருத்துவ மனைகள். தாம்பரத்தில் ஒரு நோயாளியை பணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக நள்ளிரவில் வெளியேற்றிய ஒரு மருத்துவனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பின்னர் மன்னிப்பு கேட்ட அடிப்படையில் திரும்பவும் உரிமம் வழங்கப்பட்டது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 15.10.2020).

டைம்ஸ் நவ் நியூஸ் இணைய தளம் "தடுப்பூசி மோசடி" என்ற தலைப்பில்  மகாராஷ்டிரா அமராவதியில் உள்ள மருத்துவமனை ஒன்று முன் கள சுகாதாரப் பணியாளர் என்ற போர்வையில் எப்படி வெளியார்களுக்கு தடுப்பூசி போட்டது என்பதை விவரிக்கிறது.

*காப்பீட்டிலும் களவா?* 

லைவ் மின்ட் இணைய இதழ் (05.09.2020) பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அமலாக்கத்தில் தனியார் மருத்துவ மனைகள் செய்கிற முறைகேடுகள் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. TPA என்று அழைக்கப்படும் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்கள் தங்களால் தனியார் மருத்துவமனைகளில் தணிக்கை செய்ய முடியவில்லை. போனால் கோவிட் வார்டுகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றன. பரிசோதனைக் கூடங்கள் இணைந்த மருத்துவ மனைகள் அவர்களாகவே "பாசிட்டிவ் கேஸ்" களை உருவாக்கிக் கொண்டு அனுமதியும் செய்யப்பட்டதாக ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஒரு TPA நிறுவனம் பகிர்ந்ததையும் வெளியிட்டுள்ளது.

நோயாளி இல்லாமலே பண வசூல் பிரதமர் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது என பேமிலி ஹெல்த் பிளான் இன்சூரன்ஸ் TPA நிறுவன சி. இ. ஓ திரு பாரதி கூறுகிறார். நோயாளிகளை அனுமதிக்காமல் அவர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த விளையாட்டை ஆடுகிறார்கள். அவர்கள் பதிவேற்றம் செய்யும் புகைப் படங்களில் அடையாளம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

டைம்ஸ் ஆப் இந்தியா (23.04.2021) மெடிக்ளைம் பாலிசிகளை வைத்திருப்பவர்களுக்கு எப்படி கூடுதல் கட்டணத்தை தனியார் மருத்துவ மனைகள் சுமத்துகின்றன என்பதை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் குமுறலாகவே வெளியிட்டுள்ளது. சி.டி ஸ்கேன் எடுக்கும் விகிதம் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. பகிரப்படும் அறைகளுக்கும் (Shared rooms) தனி அறைக் கட்டணம் (Single Occupancy rate) விதிக்கப்படுகிறது. மிக உச்ச பட்ச வீரியம் உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை தேவையின்றி தருகிறார்கள் என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

14 மாத செய்திகளின் தொகுப்புதான் இது.  தனியார் மருத்துவ சேவைகள் பற்றிய அதிர வைக்கும் நிக‌ழ்ச்சிக‌ள். 

*அரசின் கைகளுக்கு...*

உலகம் முழுவதும் லகான் போட முடியாததால் தனியார் மருத்துவமனைகளை அரசே தற்காலிகமாக எடுத்துக் கொண்டுள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் எகிப்து ஆகியன உதாரணங்கள்.  இந்தியாவில் கூட முதல் அலையின் போது மூன்று மாநில அரசுகள் - மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், இராஜஸ்தான் - ஆகியன தனியார் மருத்துவமனைகளை அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்தன. ஆந்திரா, புதுச்சேரி, மும்பை ஆகியனவும் இதே முடிவைப் பின்னர் அறிவித்தன. தனியார்கள் நெருக்கடியில் கை கொடுக்க மாட்டார்கள் என்பதை பேரழிவில் பாடம் கற்றுக் கொண்ட பகுதிகள் இவை. 

*கொரோனா உரு மாற்றம் பெறுவது போல ஒரு புதிய புதிய வகையிலான லாப வேட்டைகளும் உருப் பெறுகின்றன பாருங்கள்!*

*பொது மருத்துவத்தை கை கழுவி உலகமயப் பாதையில் நடை போட்டதன் விளைவை இப்போதாவது நாடு உணருமா? அரசு தலையீடு, திட்டமிடல் எந்த அளவிற்கு மக்களை பாதுகாக்கும் என்ற பாடத்தைப் பெறுமா? தனியார் என்றால் திறமை, தரம் மிக்க சேவை என்ற பிரமைகளில் இருந்து விடுபடுமா? தனியார்கள் சோகத்தில், துயரத்தில்... மரணத்தில் கூட லாபம் பார்ப்பார்கள், அதுவே மூலதனத்தின் குணம் என்ற புரிதலைப் பெறுமா?*

Sunday, May 23, 2021

மோடி நடிப்புக்காவது மரியாதை கொடுங்கய்யா


பாவம் மோடி!

கொரொனா தொடர்பான கடைசி உரையில் கிளிசரின் எல்லாம் போட்டுக் கொண்டு அழுதாலும் அவரது அழுகாச்சியைக் கண்டு யாரும் உருகவில்லை.




மூவாயிரம் பேரில் இரண்டாயிரத்து நூறு பேர் அவரது உணர்ச்சிகர நடிப்பிற்கு சிரித்து வைத்துள்ளார்கள்.

மோடி திறமையற்ற, அறிவற்ற, நீதி, நேர்மையற்ற, கையாலாகாத முட்டாள் பிரதமர்தான். 

அதற்காக அவரது நடிப்பைக் கூட மதிக்க மாட்டீர்களா?

இதெல்லாம் நியாயமே கிடையாது. அவர் போட்ட கிளிசரினுக்காவது மதிப்பு கொடுங்கய்யா! 

 

Saturday, May 22, 2021

முன் தினம் பார்த்தேனே!

 


வாரணம் ஆயிரம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம் பெற்ற "முன் தினம் பார்த்தேனே" பாடலின் வயலின் வடிவம்

என் மகனின் கை வண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே

தூத்துக்குடி வேலை - சங்கி மூளை

 


இன்று தூத்துக்குடி கறுப்பு தினம். கார்ப்பரேட்டின் லாப வெறிக்கு போராடும் மக்களை மோடி எடப்பாடி களவாணிக் கும்பல் பலி கொடுத்த நாள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேற்று பணி நியமன ஆணையை  மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்ற செய்தியும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அளிக்க்ப்படும் என்ற செய்தியும் ஆறுதலாக அமைந்தது.

இந்த செய்தியின் மூலம் எடுபிடி வகையறாக்களை விட சங்கிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டனர். "ஏற்கனவே எடப்பாடி வேலை கொடுத்து விட்டார், அவர்களுக்கு ஸ்டாலின் மறுபடியும் வேலை கொடுப்பதா" என்று பொங்கி விட்டார்கள்.

எடப்பாடி ஏதோ ஒரு வேலை என்று கொடுத்தார். அவரவர்கள் கல்வித் தகுதிப் படி பொருத்தமான வேலையை இப்போதைய தமிழக அரசுதான் அளித்துள்ளது.

கீழே உள்ள பட்டியல் இந்த உண்மையை உணர்த்தும்



சங்கிகளுக்கு மூளை கிடையாது. மூளை இருக்க வேண்டிய இடத்தில் மாட்டுச்சாணம்தான் உள்ளது என்ற விமர்சனம் சரிதான்!

Friday, May 21, 2021

நவகேரள கீதாஞ்சலி

 நவகேரள கீதாஞ்சலி

மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

பதிவிற்குக் கீழே காணொளியும் உள்ளது. அவசியம் கண்டு மகிழுங்கள்.




தோழர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னனியின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று கேரளத்தில் நடைபெற்ற பதிவியேற்பு விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் 53 பேர் பங்களிப்பு செய்த இசை ஆல்பம் ஒளிபரப்பப் பட்டது.

முப்பது நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் இ எம் எஸ் அவர்களின் உரையுடன் துவங்குகிறது. 1957ல் பதவியேற்ற முதல் அமைச்சரவையில் தோழர் இ எம் எஸ் பேசிய பேச்சின் குரல் பதிவு, “ நான் பிறந்த போது இருந்த கேரள சமூகமல்ல இப்பொழுது இருப்பது, நிறைய்ய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இம்மாற்றத்துக்கு நானும் சிறிய பங்களிப்பு செய்துள்ளேன்”.

நாராயண குருவின் வார்த்தைகள் இடம்பெறும் பாடல் துவங்குகிறது. மகாகவிகள் வள்ளத்தோள், உள்ளூர், வயலார், ராமவர்மா, பாஸ்கரன், இடைச்சேரி, கடம் மணிட்டா, மற்றும் தற்காலத்தின் சிறந்த கவி பிரபா வர்மா ஆகியோரின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

“நாங்கள் துவக்கிவைத்த, நல்ல வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலை எனது வாழ்நாளில் கிட்டாமல் போகலாம், அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஏனெனில் எமது தோழர்கள் அந்நிலையை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தோழர் ஏ.கே. கோபாலன் “எண்ட ஜீவித கதா” என்ற தன்னுடைய
சுயசரிதையின் இறுதி வரிகள் இடம்பெற்றுள்ளன.

”நாங்கள் அழமாட்டோம், நாங்கள் தோற்கமாட்டோம், நாங்கள் வெல்வோம்” என்ற பாடல், 
“நாங்கள் சோதரர்கள்…” என்ற பாடல்,

நிறைவாக “வளர்ந்த நாடுகளில் உள்ள வாழ்க்கை நிலை கேரளாவின் மக்கள் பெறவேண்டும். அதனை வரும் 25 ஆண்டுகளில் அடைவதற்க்கு வலிமையான அடித்தளம் அமைப்போம்” என்று கேரளத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு இடம்பெறுகிறது.

கேரள கம்யூனிச இயக்கத்தின் இரத்தசாட்சியான வரலாற்றுப் பக்கங்களை கவிதைகளாலும், காட்சிகளாலும், இசையாலும் நினைவுபடுத்துகிறது #நவகேரள_கீதாஞ்சலி

காணொளியை அவசியம் பாருங்கள்



அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி

 


36 வருடங்களுக்குப் பிறகு - முதல் கவிதை



கல்கி இதழின் அனைத்து பிரதிகளையும் ஸ்கேன் செய்து அவர்களின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதைப் பார்ப்பதற்கான இணைப்பு இங்கே உள்ளது

சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு கீழே

மதுரையில் கல்லூரியில் படித்த காலம், சென்னைப்  பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ தேர்விற்குக் கடைசி  நிமிடத்தில் பணம் கட்டி ஹால் டிக்கெட் எப்போது வரும் என்று தவிப்போடு ஒவ்வொரு நாளும் காத்திருந்த      நேரம்  அது.  

அந்தத் தேர்வின் மூலமாகவே சென்னைப்பட்டினத்தை முதல் முறையாக பார்க்கத் துடித்த பட்டிக்காட்டு மனோபாவத்தில் இருந்த அந்த நாளில் கவிதை ஒன்று தோன்றியது.

அதனை கல்கிக்கு அனுப்ப அவர்கள் மாணவர் பக்கத்தில் பிரசுரித்து பத்து ரூபாய்    பணம் வேறு அனுப்பி விட்டார்கள். அதுதான் எனது  முதல் வருமானம்.

 ஆனால் ஒரு

 வில்லங்கமும் கூடவே வந்து சேர்ந்து விட்டது. கவிதைக்குப்   பக்கத்தில் ஒரு பெண்ணின் நெடிய கண்களின் படத்தினை   வேறு போட்டு விட்டார்கள். 




ஆகவே நான் எப்படிப்பட்ட  கடிதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வி, வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி வந்து விட்டது.


இன்று கல்கி களஞ்சியத்தில்  அந்த கவிதை வெளியான 23.06.1985 இதழை தேடிக் கண்டு பிடித்து அந்த பக்கத்தை பார்க்கையில் அன்று எழுதிய முதல் கவிதையை அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி மீண்டும் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி கல்கி



கமலுக்கு தொலை நோக்கு பார்வைதான்

 


கமலுக்கு தொலை நோக்கு பார்வை நிறைய உண்டு. சுனாமி, உயிரியல் ஆயுதம் போன்றவற்றை எல்லாம் தமிழகத்தில் முதலில் பேசியவர் அவர்தான் என்பார்கள்.

அது உண்மை என்பதை "உயர்ந்த உள்ளம்" படக்காட்சி நிரூபிக்கிறது.


கட்சி ஆரம்பித்து தோற்றுப் போன பின்பு எல்லோரும் அவரை கை விட்டு விடுவார்கள், புலம்ப வைப்பார்கள் என்பதையும் தொலை நோக்கு பார்வையோடு படம் எடுத்துள்ளாரே!