Tuesday, November 3, 2020

வட துருவத்தை காணோம் சார் . . .

 


ஃப்ரண்ட்லைன்  ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு. அன்றிலிருந்து இன்று வரை கதை விடுவதே சங்கிகளின் பிழைப்பு என்பதை  அம்பலப்படுத்தும் பதிவு.

 கிணற்றை காணவில்லை என்று வடிவேலு போல ஏன் கேஸ் கொடுக்கவில்லை என்றுதான் தெரியவில்லை.

 கேஸ் கொடுத்தால் இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க சில நூறு கோடிகள் கொடுத்தது போல இதற்கும் நிர்மலா அம்மையார் நிதி கொடுத்திருப்பார்.

  

ஆர்.எஸ்.எஸ். குரு: ‘இங்கே இருந்த வட துருவத்தைக் காணவில்லை சார்

 இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத் தலைவர் பால கங்காதர திலகர் 1903இல் வேதங்களில் வரும் ஆர்க்டிக் வீடு (Arctic Home in the Vedas) என்கிற புத்தகம் எழுதினார். ஆரியர்கள் வட துருவத்தில் இருக்கும் ஆர்க்டிக் பகுதியில்தான் வாழ்ந்தனரென்றும் கி.மு. 8000 வாக்கில் பனி யுகம் முடிந்து பெரும் பிரளயம் ஏற்பட்ட காலத்தில புதிய நிலப் பரப்பைத் தேடி ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கும் ஆசியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றனர் என்றும் எழுதிய திலகர் வேதங்களிலும், ஜொராஸ்டிரிய மத நூல்களிலும் இதற்கான ஆதாரங்களில் இருக்கிறது எனப் பல விவரங்களைக் கொடுத்துள்ளார்.



 அதில் என்ன உங்களுக்குப் பிரச்சினை என்பது நீங்கள் கேட்கலாம். பிரச்சினை ஆர்.எஸ்.எஸ்சுக்குத்தான்ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று இன்றும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு திலகரின் புத்தம் தர்மசங்கடத்தை உருவாக்கியது. எப்படி இதைச் சமாளிப்பது என யோசித்தார் ஒரு பெரியவர்.

 அவர்நம்மை மற்றும் நம் தேசத்தை வரையறுப்பது’ (We or Our Nationhood Defined) என்று 1939இல் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் அட்டஹாசமான விளக்கம் அளித்தார். அதுதான் இது:

 முன்பு ஒரு காலத்தில் ஆர்க்டிக் பிரதேசம் உண்மையில் இன்று பீஹார், ஒரிசா என்றழைக்கப் படும் பிரதேசத்தில்தான் இருந்தது. பிறகு அது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. பிறகு சிறிது காலம் மேற்குத் திசையிலும், மீண்டும் வடக்கு நோக்கியும் நகர்ந்த ஆர்க்டிக் பிரதேசம் கடைசியாக தற்போது அது இருக்கும் இடத்தை அடைந்தது



 இதை எழுதிய பெரியவரின் பெயர் ஆர்.எஸ்.எஸ். ஆட்களால் குரு என்று அழைக்கப்பட்ட கோல்வால்கர். 1940 முதல் 1973இல் இறக்கும் வரையில் ஆர்.எஸ்.எஸ்சின் சர்சங்சாலக் எனப்படும் தலைவராக இருந்தவர்.

 இந்த விஷயத்தை சிபிஐ எம் தலைவர் சீதாராம் யெச்சூரிஇந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ என்று ஃபிரண்ட்லைனுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆர்க்டிக் பகுதி அப்படி நகர்ந்து சென்ற போது அதன் மீதிருந்த ஆரியர்களை மட்டும் விட்டுச் சென்று விட்டதா? புவியியல் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட காலத்தில் இப்படி அபத்தமாக எழுத முடியுமென்று கேள்வியும் எழுப்பினார். இந்தக் கட்டுரை பின்னர் ஃபிரண்ட்லைன் பதிப்பாக சிறு நூலாகவும்  வெளியிடப்பட்டது.

 குருவே இப்படி இருக்கும் போது புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி, அணு குண்டு ஆகியவை வேதகாலத்திலும் பின்னர் புராண காலத்திலும் இருந்தது என சிஷ்யர்கள் பேசுவதில் ஆச்சரியம் இல்லை.

 

ஆடு மேய்க்கவே போயிடுங்க அண்ணாமலை

 


இரண்டும் ஒன்றில்லைதான் அண்ணாமலை

 ஆட்டுக்கார அண்ணாமலை, ஐ.பி.எஸ் உதிர்த்த முத்து இது.

 


அண்ணாமலை சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.

 சுப்பையா சம்பவமும் தோழர் தொல்.திருமா அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளும் ஒன்றல்ல. இரண்டையும் தனித்தனியாகத் தான் பார்க்க வேண்டும்.

 அண்ணாமலையின் பார்வையில்தான் எது சரி எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாத கோளாறு இருக்கிறது.

 சுப்பையா செய்தது பக்கா அயோக்கியத்தனம். சமரசம் ஏற்பட்டு விட்டதால் அந்த அசிங்கம் மறைந்து விடாது. மருத்துவராக அல்ல, மனிதராக இருப்பதற்கே அருகதையற்றவன் அவன். அவனுக்கு புதிதாக பதவி கொடுப்பது என்பது அவன் செய்த ஆபாசத்திற்கு அங்கீகாரம் அளிப்பது போலதான். பாஜகவின் பாசிஸ குணாம்சத்திற்கு அஞ்சி இழிவு செய்யப்பட்ட அந்த பெண்மணி சமரசத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கலாம். அதனால் சுப்பையா உத்தமனாகி விட மாட்டான். அவனுக்கு பதவி கொடுத்தது என்பது கண்டிப்பாக பெண்களை இழிவு படுத்தும் செயல்தான். மோடி அரசின் எண்ணற்ற அயோக்கியத்தனங்களில் இதுவும் ஒன்றுதான்.

 அதே நேரம் திருமா மீது நீங்கள் ஏன் பல வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள்? பெண்களை நிஜமாகவே இழிவு படுத்தியது அவரா அல்லது மனுஸ்மிருதியா?

 மனுஸ்மிருதி எப்படியெல்லாம் பெண்களை இழிவு படுத்தியுள்ளது என்று அம்பலப்படுத்தி அவர் பேசியதை மூடி மறைத்து, திசை திருப்பி அவர் மீது அவதூறை அள்ளி  வீசுவது அயோக்கியத்தனமில்லையா?

 மனுஸ்மிருதி என்று பல இருக்கிறது, மனுஸ்மிருதி ஒரு மாயை, மனுஸ்மிருதி காலாவதியானது, மனுஸ்மிருதியை ஆங்கிலேயர்கள் தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்று இப்போது பல சங்கிகள் பல கதைகளை இப்போது கூறத் தொடங்கியுள்ளது எதற்காக?

 மனுஸ்மிருதிதான் பெண்களை உண்மையிலேயே இழிவு படுத்துகிறது என்ற செய்தி மக்களை விரிவாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மனுஸ்மிருதிக்கு புதிது புதிதாக இவ்வளவு வியாக்யானங்கள்!

 மனுஸ்மிருதி காலாவதியாகி விட்டதா? இப்போது நடைமுறையில் இல்லையா?

 வேலைக்கு போகும் பெண்களில் 90 % பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று ஜெயேந்திர சரஸ்வதி சொன்னதும், ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் உயரதிகாரிகளோடு படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் பணியும் பதவி உயர்வும் பெறுகிறார்கள் என்று சிப்பு சேகர் சொன்னதும் 30 % பெண்களிடம் மட்டுமே பெண்மை உள்ளது என்று விஷ மூர்த்தி சொன்னதும் அடுத்த வீட்டுப் பெண்ணின் வாசலில் சுப்பையா சிறு நீர் கழித்தது ஆகியவை எல்லாம் மனுஸ்மிருதி காட்டிய பாதைதானே!

 அது மட்டுமல்ல

 பிறப்பில் பேதம் பார்க்கச் சொல்லிக் கற்றுத் தந்துள்ள மனுஸ்மிருதியின் வழியில்தானே நீங்கள் திருமா மீது வழக்கு தொடுப்பதற்கு முக்கிய காரணம்! இதிலே ஜாதி வெறி கிடையாதா உங்களுக்கு?

 உங்கள் கட்சிக் காரர்கள் போட்டிருந்த சாயக் கட்டைக் கூட கண்டுபிடிக்க இயலாதவராக “அவர்களுக்காக அழுக வேண்டாம், கேலி செய்யாதீர்கள்” என்று சொல்லி போலீஸ் வேலைக்கு லாயக்கில்லாதவர் என்று நிரூபித்தீர்கள்.

 ஒழுங்காக முட்டு கொடுக்கக் கூட துப்பில்லாதவர் என்ற பெயரை சுப்பையா செய்தது ஆபாசம் என்று சேம் ஸைட் கோல் அடித்து அரசியலுக்கும் லாயக்கில்லாதவர் என்று நிரூபித்து விட்டீர்கள்.

 எனவே  மீண்டும் ஆடு மேய்க்கவே போய் விடுங்கள் அண்ணாமலை.

 ஆடு மேய்ப்பதிலாவது  ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணாமலை.

 மோடி திடீரென சட்டம் போட்டு இந்தியாவில் உள்ள ஆடுகள் அனைத்தும் அதானிக்கும் அம்பானிக்கும்தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

 

கேரள சங்கி காங்கிரஸ்

 


கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உதிர்த்த அபத்த முத்திற்கு தோழர் உ.வாசுகி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவுடன் கேரளாவில் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டதால் அங்கே உள்ள காங்கிரஸ்காரர்களும் சங்கிகள் பாணியில் பெண்களை இழிவு படுத்த தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தோழர் ஷைலஜாவை "கொரோனா ராணி" என்று வசை பாடிய பேர்வழிதான் இந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

காங்கிரஸ் தலைமையால் இந்த கேரள காங்கிரஸாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது யதார்த்தம். ராகுல் காந்தியை இவர்கள் எச்.ராசாவின் ஹைகோர்ட் போலத்தான் மதிக்கிறார்கள்.

இந்த போக்கு தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஒட்டு மொத்த கேரள காங்கிரஸும் பாஜகவில் ஐக்கியமாகி விடும்.