Friday, October 4, 2019

FDFS மோகம் - வேலைக்கு ஆபத்து




ஆந்திராவில் நேற்று நடந்த சம்பவம் இது. சிரஞ்சீவி நடித்த “சீயாரா நரசிம்ம ரெட்டி” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்து வெளியாகும் படம் என்பதால் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.

“முதல் நாள், முதல் காட்சி” பார்த்திட வேண்டும் என்ற ஆர்வம்தான் ஒரு ஏழு பேருக்கு சிக்கலாகியுள்ளது.

கொயில குண்ட்லா என்ற ஊரில் உள்ள தியேட்டரில்  அதிகாலை 5.30 மணி சிறப்புக் காட்சிக்கு ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள் சென்றுள்ளனர்.  சென்றதோடு நின்றிருக்கக் கூடாதா! முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறோம் என்று போட்டோவோடு சமூக வலை தளங்களில் பதிவேற்ற அது வைரலாகி கர்னூல் மாவட்ட எஸ்.பி வரை செல்ல அவர் டென்ஷ்னாகி விட்டார்.

காந்தி ஜெயந்தி  அன்று சிறப்பு கிராமக் கூட்டங்கள் நடைபெறும் வேளையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அனுமதியோ விடுப்போ இல்லாமல், மேலதிகாரி யாருக்கும் தகவல் சொல்லாமல் இப்படி ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள், அதுவும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வேலை நேரத்தில் சினிமா பார்த்துள்ளார்கள் என்பது அவருக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதனால் அவர்கள் இடை நீக்க்கம் செய்யப்பட்டுள்ளனர்

அவங்க சினிமா போனது தப்பில்லை. காந்தி ஜெயந்தி அன்று போனதுதான் தவறு. அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் போட்டதுதான் தவறு  என்று மற்ற காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

வாட்ஸப்பினால் வந்த வினை இது !

பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் பாஜக



பாலியல் வன் கொடுமை நிகழ்த்திய காரணத்தால் வாஜ்பாய் காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமி சின்மயானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனிதன் ஒரு கேவலமான ஜந்து என்பதை நிரூபிக்கும் வகையில் சில காணொளிகளும் உலா வந்தது.

குற்றம் சுமத்துபவர் மீது வழக்கு தொடர்ந்து குற்றவாளியை பாதுகாக்கும் யோகிசீ அரசு வழக்கம் போலவே புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண் மீதே "பணம் பறிக்க முயற்சி செய்தார்" என்றொரு வழக்கு போட்டு சிறையில் தள்ளியது.

இப்போது சுவாமி சின்மயானந்தா மீதான வழக்கை திரும்பப் பெறுவது என யோகிசீ அரசு முடிவு எடுத்து காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஊரில் இருக்கும் அத்தனை பாலியல் குற்றவாளியும் பாஜகவில்தான் இருக்கிறார்கள். பாலியல் குற்றவாளிகளை சிறையில் தள்ள ஆரம்பித்தால் இந்தியாவில் சிறை கட்டவே இடம் போதாது.

அதனால்தான் இப்படிப்பட்ட முடிவு போல.

பஞ்சாயத்தில் அட்வான்ஸ் பேமெண்ட் கொடுத்து பாலியல் குற்றம் புரியும் விவேக் படத்து மைனர்கள் போல மொட்டைச் சாமியாரிடம்  தகவல் கொடுத்து விட்டே அயோக்கியத்தனம் செய்வார்கள் போல.

இதிலே மொட்டைச்சாமியாரின் குடுமி ஏதாவது சின்மயானந்தாவிடம் சிக்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

முதலமைச்சராக இருந்தாலும் யோகிசீ யும் ஒரு சாமியார்தானே!

Thursday, October 3, 2019

மானஸ்தர்களை தேடுகிறார்கள் . . .



மேலே உள்ளது வெறும் இந்தியன் படத்தின் காட்சியும் வசனமும்தான். 

மோடியும் சீன ஜனாதிபதியும் வருவதை ஒட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை பேனர்கள் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசு பற்றியோ அல்லது அதனை ஏற்று அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றியோ  இந்த படம் குறிக்கிறது என்று நீங்கள் கருதினால் அது உங்கள் கற்பனை மட்டுமே.

அதற்கு நான் பொறுப்பல்ல . . .

பறிமுதல் செய்யப்பட்ட அபாய சுவரொட்டி



மேலே உள்ள சுவரொட்டியை மதுரை நகருக்குள் ஒட்டக் கூடாது என்று மதுரை மாநகர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

மதுரை நகரத்திற்குள் சுவரொட்டி ஒட்டாமல் நகரின் அழகை பாதுகாக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் சொல்வதாக மதுரை கோட்டச் சங்க இணைச்செயலாளர் தோழர் தணிகை ராஜ் அவர்களோடு தொலைபேசியில் பேசிய போது அவர் சொன்னார்.

அதே நேரம் இன்னொன்றும் சொன்னார்.

அதிமுக கட்சியின் போஸ்டர்கள், திரைப்பட விளம்பர பேனர்கள் இவையெல்லாம் எந்த தடையுமில்லாமல் மதுரையில் ஒட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். ஏன் நாம் நடத்திய மாநாடு, பொதுக் கூட்ட போஸ்டர்களுக்கெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி அவர் சொன்ன இறுதியான தகவல்தான் அதிர்ச்சி அளித்தது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தயாரித்த சுவரொட்டியைக் கூட இப்படித்தான் பறிமுதல் செய்தார்கள் என்றார் அவர்.

மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அண்ணல் காந்தியையும் பிடிக்காது, அண்ணல் அம்பேத்கரையும் பிடிக்காது. 

அந்த மன நிலையில்தான் எடுபிடி ஆட்சியும் உள்ளது. ஏவல் துறையும் உள்ளது.

பிளவு வாதிகளுக்கு "மக்கள் ஓற்றுமை" என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கத்தான் செய்யும்.

போலீஸ் சீருடையின் நிறத்தை  காக்கிக்குப் பதிலாக என்றைக்கு காவியாக மாற்றப் போகிறார்களோ?

Wednesday, October 2, 2019

அண்ணலும் அவர்களும்

எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான் எழுதிய கட்டுரையின் முதல் பத்தியின் தமிழாக்கம் கீழே உள்ளது. மிகவும் முக்கியமான அக்கட்டுரையின் முழுமையான தமிழாக்கத்தை முடித்து ஒரிரு நாட்களுக்குள் பகிர்கிறேன். 



இந்தியா கொண்டாடுகிறது. உலகமும் கூட மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இப்பூவுலகில் நடமாடிய அற்புதமான ஆளுமைகளில் காந்தியும் ஒருவர் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. அதிகமாக மதிக்கப்பட்டவர் அவர். அதே நேரம் மிக அதிகமாக வெறுக்கப்பட்டவரும் அவர்தான். அவரை ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தின் அடையாளமாக பார்ப்பவர்கள் உலகெங்கும் மதிக்கிறார்கள். இந்தியாவை “இந்து ராஷ்டிரம்” ஆக மாற்ற முடியாமல் போனதற்கு முக்கியமான காரணமானவர் என்று கருதுபவர்களால் அவர் வெறுக்கப்படுகிறார். இந்த சக்திகள் மகாத்மாவின் கொலைகாரனை கொண்டாடி அவனை வணங்க கோயில்கள் கூட கட்டுகிறார்கள். அதே நேரம் அவர்களே குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக காந்தியை பயம்படுத்திக் கொள்ளவும் தீவிரமாக முயல்வது ஒரு முரண்நகை. இந்த முயற்சியை முறியடித்து அவர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.


ஆம் இது வரை வேலூரில் காந்தி சிலை பக்கம் மழைக்குக் கூட எட்டிப் பார்க்காத பாஜக கட்சி ஆட்கள் இந்த வருடம் காந்தி சிலைக்கு மாலை போடுகிறார்கள். மோடி வாழ்க என்ற முழக்கத்துக்கு நடுவே காந்திக்கும் ஜே போடுகிறார்கள். 


காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேச பக்தன் என்று சொன்ன வெடிகுண்டு சாமியாரை போபால் எம்.பி யாக்கி அழகு பார்த்த கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஒழுக்கமோ, தார்மீகமோ, நெறி முறையும் இல்லாத சந்தர்ப்பவாத பல வேடக் கட்சியல்லவா அது!

மகாத்மா காந்தி அவர்களின் சிலையின் நிழலைக் கூட நெருங்க அருகதையற்றவர்கள் ஆட்சியில் இருப்பதும் அவர்கள் அவரின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவதும்தான் மிகப் பெரிய துயரம். 

கீழே உள்ள புகைப்படங்கள் எங்கள் சங்கத்தின் சார்பில் வழக்கம் போல மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிகையில் எடுக்கப்பட்டவை

வேலூர் 




புதுவை 1 கிளை



விழுப்புரம்



சிதம்பரம்


திருவண்ணாமலை



புதுவை கிளை 2


கடலூர்






நெய்வேலி 



Tuesday, October 1, 2019

புதிதாய் அவரைப் பற்றி என்ன எழுத?

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள். தமிழகத்தின் பெருமை மிகு கலை அடையாளமான அவரைப் பற்றி புதிதாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஓய்வு பெற்ற எங்கள் கோட்ட மேலாளர் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பகிர்ந்து கொண்ட பதிவு கண்ணில் பட்டது.

அதனை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கீழே உள்ள படங்கள் பல சந்தர்ப்பங்களில் நான் தொகுத்தது. 

அதிலே முதல் படத்தில் நடிகர் திலகம் போட்ட ராஜா வேடங்கள் மட்டுமே.












 *வாழும் நடிகர்திலகம்.* 🌺

(படித்ததை பகிர்கிறேன்)

கர்ணன் ஒருநாள் கனவில் வந்தான். யாரந்த சிவாஜிகணேசன் என்றான்

ஏன் எனக்கேட்டதற்கு, கர்ணனாக அவர் நடித்த அந்த படத்தை நானும் பார்த்தேன். நானும் அந்த படக் கர்ணன் மாதிரி கம்பீரமாக முயற்சிப்பதாக சொல்லி மறைந்தான்.


கட்டபொம்மன் பின்னொரு நாளில் இது போலவே கனவில் வந்தான்.


அவன் சொன்னான். அந்த சிங்கத்தமிழனின் தங்கத்தமிழ் என் நாவில் தவழ என்ன செய்யனும் எனக் கேட்ட அவனே, நான் சொல்வதற்குள் அது சாத்தியமில்லை எனச் சொல்லிச் சென்றான்.


ராஜராஜசோழன் வந்தான். சிவாஜி ராஜபரம்பரையைச் சேர்ந்தவரா என்று எடுத்தவுடனே கேட்டான். முகத்தில் ராஜகளையும், அந்த கம்பீரநடையும் தனக்கே வரவில்லையே பிறகு அவருக்கு எப்படி? பிறந்தபோது லட்சுமியின் ஐஸ்வர்யம் இல்லை ஆனால் கலைவாணியின் முழு வரமும் பெற்று பிறந்தவர் என்றேன் நான்.

கப்பலோட்டிய தமிழன் அய்யா சிதம்பரம் ஒருநாள் வந்தார். இருக்கும்போது தன்னை உணராதவர்கள், இப்போது கொஞ்சமாவது உணர்ந்ததெப்படி என்ற ஆச்சரியம் அவருக்கு. நிஜத்தை உணராதவர்கள் நிழல் கண்டாவது கொஞ்சம் உணர்ந்தார்களே என்ற மகிழ்ச்சி எனக்கு.

யாமறிந்த மொழிகளிலே தமிழைப்போல் எங்கும் காணோம் என்று முழங்கிய முண்டாசுகவி பாரதி வந்தான். யாமறிந்த வகையில் எம்தமிழை சிவாஜிபோல் உச்சரிப்பவர் எவருமில்லை என்றான். ஆச்சரியமில்லை எனக்கு.

அப்பர் திருநாவுக்கரசர் வந்தார். உச்சரிப்பு சுத்தம் என்றால் சிவாஜிதான். அவர்தான் திருவருள் பெற்ற ‘திருநா’வுக்கரசர் என்றார். ஆமோதித்தேன்.

காக்கும் கடவுள் சிவபெருமான் வந்தார். கண்களில் கலவரம் அவருக்கு. என்ன என்பதற்குள் அவரே சொன்னார். திருவிளையாடல் படம் பார்த்தேன். அதில் வரும் சிவாஜியைப் பார்த்து என்னை அறியாமல் நானே வணங்கிவிட்டேன். தன்னைத் தானே மறந்தது கலவரமாகிவிட்டது அவருக்கு. தன்னில் பாதியான உமையவளின் சக்தி முழுக்கவும், பிரம்ம பத்தினி சரஸ்வதி அவர் நாவிலும், திருமாலின் நாயகி லட்சுமி அவர் முகத்திலும் குடிகொண்டிருப்பதும் அப்போதுதான் புரிந்தது சிவனுக்கு.

பகத்சிங் வந்து ஒன்றும் சொல்லாமல் நான் சுவற்றில் மாட்டியிருந்த நடிகர்திலகத்தின் படத்தைப் பார்த்து தன் *தொப்பியைக் கழற்றி முதுகை முன் வளைத்து மறைந்தான்.*

இன்னும் இன்னும் சரித்திர நாயகர்களும், புராண புருஷர்களும் வந்து பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான ஆச்சரியம்.. ஆனால் சித்திரகுப்தன் கவலைதான் விசித்திரம் எனக்கு.

மேலே, ஆயுள் கணக்கு தணிக்கையில் (Audit) பயங்கர பிரச்னையாம் சித்திரகுப்தனுக்கு. பிறக்காத மனிதர்கள் இறக்காமல் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்றும், கணக்கில் கோட்டை விட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் புகார் சித்திரகுப்தன் மீது. முதலில் எனக்கு புரியவே இல்லை. பிறகு அவன் பெயர்களை சொல்லி விசாரித்தபோதுதான் உணர்ந்தேன் நடிகர்திலகத்தின் உன்னதம் எத்தகையதென்று.

அவன் குறிப்பிட்ட பெயர்களில் சில..... பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த், அழகாபுரம் ஜமீன் சின்னதுரை ஆனந்த், ராஜபார்ட் ரங்கதுரை, பர்மா குணசேகரன், மனோகரன், படிக்காதமேதை ரங்கன், பாசமலர் ராஜசேகர், சிக்கல் சண்முகசுந்தரம் நீள்கிறது பட்டியல்....

சித்திரகுப்தனுக்கு சமாதானம் கூறினேன். நீங்கள் எதுவும் குறிப்பில் தவறு செய்யவில்லை என்றேன். அவரை மகிழவிடவில்லை நான். தொடர்ந்தேன். தணிக்கை அறிக்கையும் சரிதான் என்றேன். குழப்பம் அதிகமானது அவருக்கு. கதாபாத்திரமாகவே மாறிவிடுவதுதானே நடிகர்திலகத்தின் திறன். *விளங்காத அதியசமே நடிகர்திலகம் சிவாஜிதான்.*

வாழ்ந்து மறைந்தவர்களே நேரில் வந்தாலும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் நடிகர் திலகம் போல் இல்லையென்று.

இந்த பூமியில் *பிறக்காத பலரை இறக்காமல் வாழவிட்டதுதான்* நடிகர்திலகத்தின் விந்தை.

🌼 *எட்டாத அதிசயம் நீ* 🌼
🌺 *வாழ்க நடிகர் திலகம் புகழ் ! வாழியவே !* 🌺

மனுசன கவனி யோகிசீ



ஏம்பா யோகிசீ இன்னிக்கு ஹிந்து பேப்பர் பாத்தியா கண்ணு?

உங்காளுங்க நிதி ஆயோக்கே சொல்டாங்கபா!

உன் மாநிலத்திலதான் கல்வித்தரம் படு கேவலமா, பாதாளத்துலக்கீதாம்.

மாட்டை உட்டுட்டு மனுசன கவனிப்பா!

நீ எப்டி செய்வே!

உனக்கே மாட்டு மூளைதான!