Tuesday, May 17, 2022

இதுதான் சாட்டையடி பதிவு

 எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக ஒரு அனாமதேய சங்கி, வங்கி ஊழியர் என்ற போர்வையில் போராடும் எங்கள் சங்கத்திற்கு எதிராக வன்மத்தை வாந்தியெடுத்துள்ளது.  போராட்டத்திற்கு எதிரானவர்கள் அந்த வாந்தியை தாங்களும் உள்வாங்கி கக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அனாமதேய சங்கியை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் வெளுத்து வாங்கியுள்ளார்.

 சாட்டையடி பதிவு என்று முகநூலில் அவ்வப்போது பார்க்கலாம். நிஜமாகவே சாட்டையடி பதிவு இது. அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

 ஆனால் இதற்காக எல்லாம் அதனை ஒரிஜினலாக எழுதியவரோ, அல்லது பகிர்ந்து கொண்டவர்களோ கவலைப் பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் துப்பினால் துடைத்துக் கொண்டு அடுத்த பொய்யை பரப்பச் சென்று விடுவார்கள்.

 


*களங்களும்... *காமெடி பீஸ்களும்*

 எல்லா எதிர் வாதங்களும் ஆங்காங்கே எதிர் கொள்ளப்படுவது சரியானது.  

 ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்  *"அரசியல் முடிவு"* என்ற மைதானத்தில் விளையாட முடியவில்லை. அதில் தோற்றுப் போயிருக்கிறார்கள். வலதுசாரி ஆதரவாளர் என்று தொலைக் காட்சி பேட்டிகளில் வரும் *சியாம் சேகர்* முதலில் சமூக வலைத் தளத்தில் துவக்கி வைத்த பிரச்சாரம், இப்போது பா. .கவின் .டி விங்கால் சுற்றுக்கு விடப்படுகிறது. இன்சூரன்ஸ் அரங்கிற்குள் அதை இங்குள்ள சிலர் சுற்றுக்கு விடுகிறார்கள்

 அவர்களுக்கு மைதானத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விவாதங்களை விட்டு அவர்கள் ஓடுகிறார்கள். ஆகவே அவர்களை பிடித்து வைத்து கேட்க வேண்டிய கேள்விகளை நாம் தொடர வேண்டும். பின்னர் அவங்க கிரௌண்டுக்கும் போய் ஆடுவோம். நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

 நாங்கள் எல்.. சியை *"மக்கள் உடமை"* ஆக்கப் போகிறோம் என்று நிதி அமைச்சர் கூரை மீது ஏறி கூவினார். ஆட்டோ டிரைவர், காய்கறி விக்கிற அம்மா ஆகியோர் கைகளில் எல்லாம் எல்..சி யின் பங்குகள் போகும் என்ற ரேஞ்சுக்கு பேசினார்கள்  ஆனால் இப்போது விற்கப்பட்டுள்ள 3.5 சதவீத பங்குகளில்  65 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்கள், செல்வந்தர்களுக்குதானே ஒதுக்கப்பட்டுள்ளது. *இவர்கள்தான் மக்களா! எந்த ஆட்டோகாரராவது, காய்கறி விக்கிற அம்மாவாவது பங்குகளை வாங்கி இருப்பார்களா?* இதற்கெல்லாம் சியாம் சேகர் போன்றவர்கள் பதில் சொல்வார்களா? அதை விட்டு விட்டு ஊழியர் ஒதுக்கீடான 5 சதவீதத்தில் நுணுகி நுணுகி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

 அரசாங்கத்தின் "அரசியல் முடிவை" பற்றிய விவாதம் இது. இதில் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்க, அப்புறம் அடுத்த ஆட்டத்திற்கு வருவோம்

 *இரண்டாவது,* மக்களின் நிதி முடிவுகள் எதைப் பொறுத்து இருக்கும். நீங்கள் எந்த லட்சணத்தில் நிதித் துறையை வைத்து இருக்கிறீர்களோ அதைப் பொறுத்தே இருக்கும். ஒட்டு மொத்த நிதிச் சூழலே சூதாட்ட களமாக மாற்றப்பட்டுள்ளது. பங்குச் சந்தை மற்றும் ஊக நடவடிக்கைகள் நோக்கி மக்கள் துரத்தப்படுகிறார்கள்உயர் வருமானம் தரக் கூடிய பாரம்பரிய சேமிப்பு வடிவங்கள் எல்லாம் தாக்கப்பட்டுள்ளது. பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 14 சதவீதம் கூட இருந்த காலம் உண்டு. இன்று 7 சதவீதம். போஸ்ட் ஆபிஸ் நேசனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் சேமிப்புகள் 6 ஆண்டுகளில் டபுள் ஆகும். இன்றோ வருவாய் பாதியாக குறைந்து விட்டது. பென்சன் சேமிப்புகள், பங்குச் சந்தைக்குள் தள்ளப்படுகின்றன. நிதி முடிவுகளை தனி நபர்கள் எடுக்க முடியவில்லை. *கொம்பில் கட்டிப் போடப்பட்ட  மாடு கயிற்றின் நீளத்தை தாண்டி நடக்க முடியாது. *அரசின் நிதித் துறை கொள்கைகள்தான் சேமிப்புகளை தீர்மானிக்கின்றன. ஊக முதலீடுகள் நோக்கி தள்ளுகிறது.*  இதைப் பற்றி எல்லாம் பேசாமல் தனி நபர்களின் நிதி முடிவுகளைப் பேசுவது, அரசின் பொருளாதாரப் பாதையின் மீதான விவாதத்தை திசை திருப்புவதே ஆகும். அதனால்தான் இந்த மைதானத்தில் விளையாடாமல் திசை மாறி ஓடுகிறார்கள்

 *மூன்றாவது,* இப்படி செய்திகளை இங்கு சுற்றுக்கு விடுபவர்கள். எல்..சி பங்கு விற்பனை பற்றி அவர்களின் அகில இந்திய அமைப்பின் கருத்து என்ன? அவர்களின் அகில இந்தியா பொதுச் செயலாளர் *வினய் குமார் சின்ஹா* பிப்ரவரி 22, 2022 இல் அளித்த பேட்டியில் "நாங்கள் எல்..சி பங்கு விற்பனையை கண்டிக்கிறோம். அது தனியார் மயத்தை நோக்கிய நகர்வுதான்" என்றார். பேச்சளவிலாவது அவர் பேசினார். ஆனால் எல்..சிக்குள் உள்ள அந்த சங்கத்தின் உறுப்பு அமைப்பு, அகில இந்திய அமைப்பு சொன்னதைக் கூட சுற்றுக்கு விடவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியவர்கள் அங்கே முனங்கக் கூட செய்யாமல் "நெற்றி நரம்பு புடைக்க முஷ்டியை உயர்த்தி 'விற்காதே விற்காதே; எல்..சியை விற்காதே' என்று முழக்கம் இட்டதை கிண்டல் செய்துள்ளார்கள். நெற்றி நரம்பு புடைப்பது என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு பயிற்சியா தர முடியும்? முஷ்டியை உயர்த்த முடியாவிட்டால் ஆர்த்தோ டாக்டரிடம்தான் போக வேண்டும். இதுவெல்லாம் அவர்களின் அகில இந்திய அமைப்பு கவலைப்பட வேண்டிய விசயம். ஆனால் அவர்களின் அகில இந்திய தலைமையே இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் விலகி நின்றவர்கள். இங்கே உள்ளவர்களோ அதை அரசியல் என்று சொல்லி விட்டு மே 4 எல்..சி பங்கு விற்பனைக்கு எதிரான வெளி நடப்பிலும் வராமல் இருந்து விட்டார்கள். உருவிய வாளை உள்ளே போடுபவர்களுக்கு வெள்ளிக் கிழமை அல்ல, எந்த கிழமையானாலும் வித்தியாசமில்லை. பொழுது போகாத நேரத்தில் இப்படி அனாமதேய செய்திகளை சுற்றுக்கு விடுவதுதான் வேலை

 நரம்பு புடைக்காமல், முஷ்டி உயராமல் இருந்தால் எல். .சி 1980 களிலேயே ஐந்து கூறுகளாக ஆகி இருக்கும். ஐந்து கூறுகளில் பல கூறுகளில் இவர்களுக்கு சங்கமே இருக்காது. 1994 இல் 50 சதவீத பங்குகள் விற்பனை ஆகி இருக்கும். 28 ஆண்டுகளாக முக்கித் திணறி 3.5 சதவீத பங்குகளே விற்கப்பட்டு அரசு நிறுவனமாகவே எல்..சி தொடர்கிற நிலைமை இருக்காதுஇன்றும் எல். சி சட்டத் திருத்தத்தில் மல்கோத்ரா குழு சொன்னதற்கு மாறாக "எல்லாக் காலங்களிலும் அரசின் பங்குகள் 51 சதவீதம் எல்..சி யில் இருக்கும்" என்ற சரத்து வந்திருக்காது. இதன் அருமை எல்லாம் நரம்பு புடைப்பவர்களுக்கும், முஷ்டி உயர்த்துபவர்களுக்கும்தான் தெரியும். என்ன செய்வது

 இப்ப உங்க மைதானத்திற்கு வருகிறோம். யாரையும் வாங்கு, வாங்காதே என்று சங்கம் சொல்லவில்லை. இருப்பினும் பெரும்பான்மை ஊழியர்கள் வாங்கவில்லை. அவர்களுக்கு விலையில் தள்ளுபடி தந்தும் வாங்கவில்லைவாங்கியவர்கள் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட முதலீட்டு முடிவு. தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்த உரையாடல்கள் வாயிலாகவே இது போன்ற விசயங்களில் தன் கருத்தை முன் வைக்கும்

 இது போன்ற முதலீட்டு வடிவங்கள் நோக்கி மக்களை தள்ளுகிற "சூதாட்ட மூலதனம்" பற்றியெல்லாம் என்.எம்.சுந்தரம், அமானுல்லாகான், வேணுகோபால் கருத்துக்களை, எழுத்துக்களை படித்தவர்களுக்கு நரம்பு புடைக்கத்தான் செய்யும். நரம்புத் தளர்ச்சி உள்ள இயக்கங்களுக்கு இதைப் புரிந்து கொள்வது சிரமம்தான்

 "அரசியல் முடிவுகளை" எதிர்த்து அவை நிறுவனத்திற்கு, ஊழியர்கள் நலனுக்கு எதிராக இருந்தால் உறுதியான முடிவுகளை சங்கம் எடுக்கும். ஊழியர்கள் அனைவரையும் பங்கேற்க செய்யும்

 28 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தை பாதுகாக்கிற போராட்டத்தில் இவ்வளவு உறுதியாக நின்ற அமைப்பு இன்னொன்றை அடையாளம் காட்டுவது சிரமம். சில நேரம் போராட்ட களங்களில் சில காமெடி பீஸ்களை சந்திக்க நேரிடும். சிரித்து விட்டு கடந்து போய் விடுவதே நல்லது.

 *.சுவாமிநாதன்*

 

4 comments:

  1. யாரு காமேடி பீஸ் என்பதை காலம் சொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. ஐ, அனாமதேய காமெடி பீஸுக்கு கோபம் வந்துடுச்சே

      Delete
    2. LIC பங்குகள் முதல் நாளிலே சரிவு. வாங்கியவர்களுக்கு பட்டை நாமம். ஆகா ஓகோ நவரத்தினம்ன்னு சொல்லியே மக்களை ஏமாத்தறாங்கப்பா.இப்படியே உதார் விட்டுக்கிட்டு இருங்க..எல் ஐ சியின் உண்மையான மதிப்பு இன்னும் சில நாளில் தெரியும். அப்புறம் என்ன பங்கு மதிப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும்.

      Delete
    3. ஐயா, இரண்டாவது அனாமதேயம், நீங்க என்ன சொல்ல வரீங்க, பாவம் ரொம்ப குழப்பத்தில இருக்கீங்க போல. அடி பலமோ?

      Delete